அத்தியாயம்-01

24.1K 357 46
                                    

வெளிச்சமாய் ஒரு இரவு
வெள்ளையாய் முழு நிலவு
நானும் - என் ஜன்னலோர கனவுகளும்...

ஹேய் நிமிர்ந்து பார்..உன்னைத்தான் சொல்றேன் என்னோட முகத்தை பாருன்னு..எல்லாமே பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி நின்னா சரியா போச்சா...ராதா உன்கிட்டயுமே எத்தனை தடவை சொல்லிருக்கேன் இவளோட கூட்டணி போட்டு சுத்தாதன்னு..என்று அதட்டலாய் கேட்டவனை பயத்துடன் பார்த்த ராதா அருகில் நின்றவளை ஏறிட்டாள்.ஆனால் அவளோ தன் ஆட்காட்டி விரலை காதில் விட்டு ஆட்டி ஊப்ப்(fff) என அலுத்த பார்வையை வீச நொந்து போன ராதா அடங்கமாட்டேன்றாளே மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டாள்.

இதைப் பார்த்தவன் கோபம் இன்னும் தலைக்கேற திமிறாடீ..என கத்த ஹலோ எடிட்டர் சார் இந்த டீ போட்டு பேசும் வேலை வேணாம் சொல்லிட்டேன்..என்னடி பண்ணுவ..நான் டா போட வேண்டியதாகிடும். உன்னை...என அவன் கை ஓங்க பக்கென சிரித்தாள் இளமதி.இயலாமையுடன் சிரித்த எழில் உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி..என சரண்டர் ஆக ஷ்ஷப்ப்பா..இதுங்க சண்டை முடிவுக்கு வந்தாச்சா..ராதாவும் சிரித்தாள். ஆனால் எழிலோ இளா.. உன்னை எங்கே போட்டு கொடுக்கனுமோ அங்கே போடுறேன் என மனதுக்குள் சிரித்ததை பாவம் அவர்கள் அறியவில்லை.

எழிலரசன்..இலங்கையின் தினகரன்,வீரகேசரி,தினக்குரல்,மித்திரன்..என முன்னணி இதழ்கள் வரிசையில் "இலக்கியா" மாந்த்லி மாகஸினோட சீப் எடிட்டர்.
இளமதியோட மாமா பையனும் கூட.

என்னதான் வெளிநாட்டில் பிஸ்னஸ் மானேஜ்மன்ட் ஸ்பெஷல் செய்து குடும்ப தொழிலான சொந்த கார்மென்ட்ஸை திறன்படவே நடத்திய போதும் தமிழ் இலக்கியத்திலும் பத்திரிகை துறையிலுமான அதீத ஆர்வம் காரணமாக இளமதி உதவி கேட்ட போது தானே எடுத்து செய்வதாக முன் வந்தான்.

டிகிரி இன் மாகசின்,நியூஸ்பேப்பர் அண்ட் ஆன்லைன் ஜானலிஸ்ம் முடித்து விட்டு மாஸ்டர்ஸ் செய்து கொண்டிருந்த இளாவும் ராதா,விக்னேஷ்,மேனகா,சங்கர் என அவளின் காங்கினரும்(Gang) எழிலின் ஸ்பான்ஸர் உதவியோடு நடத்திட்டு வர்ரதுதான் இந்த மாந்த்லி மாகஸின். ஆண்கள் எல்லோரும் பகுதி நேரமாக கால் பதிக்க பெண்களே இளா தலைமையில் முழு ஈடுபாட்டோடு செய்து வந்தனர். ஆரம்பித்து ஒரு வருடமே ஆன நிலையில் முன்னிலைக்கு வந்திருந்தது.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now