அத்தியாயம்-26

7K 285 20
                                    

இதய ஆழத்தில்
இதமாய் அமிழ்ந்திருக்கும்-உன்
நினைவுக்குமிழ்கள்
மெதுமெதுவாய் மேலெழும்ப
கல்லெறிந்து குழப்பிவிடும்-என்
காதல் குழந்தை நீ

இரவு வெகு நேரம் ஆனதால் மரத்தடி பார்ட்டி முடிவுக்கு வர எல்லோரும் அவரவர் குடில்களுக்குள் நுழைந்தனர்.

மதுவின் இரண்டு பக்கங்களிலும் இருவரும் படுத்துக் கொண்டனர்.மது உறங்கியிருக்க இளா அவனையே பார்த்திருந்தாள்..விட்டத்தை வெறித்திருந்த அவன் விழிகள் சட்டென திரும்பி அவள் கண்களோடு கலந்தது. எவ்வளவு நேரமென்று தெரியாமல் ஒருத்தரை ஒருத்தர் விழி விலக்காது பார்த்திருக்க அவள் கண்களில் நீர் திரண்டது.

என்னை பிடிக்கலையா தேவா..மௌனமாய் அவள் மனம் இறைஞ்சியது..அவள் மௌன மொழி அவனுக்கு கேட்டதோ என்னவோ மது மீது வைத்திருந்த அவள் கைகளை அவன் கரம் இறுகப்பற்றியது. கண்டதையும் யோசிக்காம தூங்கு..அவனின் அந்த வார்த்தையே அவளுக்கு போதுமானதாய் இருக்க உடனே உறங்கிப் போனாள். அவன்தான் தூக்கமின்றி அவளையே பார்த்தபடி படுத்திருந்தான்.

ஹேய் செம்மையா இருக்கு விக்கி..அஸத்திட்டே போ விக்கியின் கேமிராவில் அவன் எடுத்திருந்த சூர்யோதய காட்சியில் லயித்திருந்தாள் இளா. பின்னே ஐயாவை யார்னு நினைச்ச..ராஜா கைய வச்சா அது ராங்க்கா போனதில்லே..ஐயே போதுமே கொஞ்சம் நல்லாருக்குன்னு சொல்ல கூடாதே ராதா அங்கலாய்க்க ஆமாமா பெருமை பீத்தல்..மேகா முணுமுணுத்தாள்.

ஆமா இளா இந்த மயிலுக்கு மாமன் மேல என்ன கோபம்னு கேட்டு சொல்லேன்..ஏனோ அத நீங்க சொல்றது.. எங்களுக்கென்ன வேலை வெட்டி இல்லையா ஊரைப் பற்றி கட்டுரைக்கு தேவையானதை நோட் பேடில் குறித்துக் கொண்டிருந்த இளா கேட்க..ராதா நீயாச்சும்..ராதாவிடம் விக்கி இழுக்க நான் உனக்கு மாமா வேலை பார்க்கவா வந்தேன் அவள் முறைத்தாள். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடீ போங்க..என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடீ வாங்க..இப்ப நீ வாயை மூடிட்டு போப்போறீயா இல்லையா..முடியாது இப்ப என்னான்ட்ர..வயலின் நடுவில் மரத்தின் மேல் ஒரு வீடு போல் பலகையினால் அமைக்கப்பட்டிருந்த பரணில் அவர்கள் அமர்ந்து வழக்கடித்துக் கொண்டிருந்தனர்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now