அத்தியாயம் - 38

8.9K 308 41
                                    

உன் விரல்களின் மீட்டலில்
ஸ்வரங்களும் இழைகளும்
இணைந்து இசை வழிய
விரக வீணையாய் நான்..

இப்போ எதுக்கு லாக் பண்றீங்க..கதவை திறங்க அத்தான்..கதவின் மீது சாய்ந்து முடியாது...என்ன பண்ணுவ..கத்துவேன்....என்னன்னு கத்துவ..என்னை...என்னை..ஹ்ம்.. கொல்லப் போறீங்கனு கத்துவேன்..அப்டியா..கத்து..பார்க்கலாம்..அவன் நெருங்கினான்.
பின்னால் நகர்ந்து கொண்டே வேணாம் நிஜம்ம்ம்மா கத்திடுவேன்..அதான் கத்துன்னு சொல்றனுல்ல..யோவ் மீச நகருய்யா..சொன்னா புரியாது..யாரை பார்த்துடீ மீசைன்னே பப்ளிமாஸ்...அவன் வேகமாய் நெருங்க..உன்னதான் கட்டபொம்மன்..ஹிட்லர்..விருமாண்டீ..வேணாண்டீ இதோட நிறுத்திக்க சொல்லிட்டேன்..முடியாது என்னடா பண்ணுவ..என்னது டா..வா அடிங்க..ஆமாண்டா மாமா..ஏய்..குண்டுப்பூசணி..இதப்பாரு மாமா அப்டி சொல்லாத...சண்டை போட்டுக் கொண்டே பின்னாடி நகர்ந்தவள் அவன் எதிர்பார்த்த இடத்திற்கு வந்ததும் நமுட்டுச் சிரிப்புடன் சட்டென அவன் டாப்பை திறந்துவிட ஷவரில் இருந்து நீர் அவள் மீது கொட்டியது..ஹ்ஹ்ம்ம்ஹாஹஹ்ஹ்...எதிர்பாராமல் தண்ணீர் கொட்டியதில் முதலில் திணறியவள்..ஷவரின் கீழ் நின்றவாறே அவனை முறைத்தாள்.

விலகி நின்றவன் சிரித்துக் கொண்டே பழிக்குப் பழி..புருவம் உயர்த்த அப்போதுதான் அவள் தண்ணீர் ஊற்றியதால் குளித்து உடை மாற்றியிருந்தவனின் டீ ஷர்ட்டை எட்டி அருகிழுத்து ஷவரின் கீழ் நிறுத்தினாள்.
எதிர்பாராமல் அவள் இழுத்ததில் அவன் தொப்பலாய் மீண்டும் நனைய உன்னை நிஜமாவே கொல்றேன் பாரு...அவன் கழுத்தை நெரிக்க அவள் கைகளை கடிக்க என கொஞ்ச நேரம் ஷவரின் தண்ணீரடியில் சண்டை போட்டுக்கொள்ளும் சத்தமே கேட்டது.

டீ ஷர்ட்டும் ஷார்ட் ஸ்கேர்ட்டும் அணிந்திருந்தவள் தண்ணீரில் நனைய ஈர உடை அவள் அங்க வளைவுகளை அவனுக்கு வஞ்சனையின்றி காட்டியது..கொஞ்சம் கொஞ்சமாய் மாறிய அவன் பார்வையை உணராது இரு கைகளாலும் அவள் அவனை அடித்துக் கொண்டிருந்தாள். தனது கைகளால் அவள் கைகளை பிடித்து சுவற்றில் சாத்தி அவள் கழுத்து வளைவில் அவன் முகம் புதைக்க அவள் உடலில் மின்சார சிலிர்ப்பு ஊடுருவியது. அவள் திகைத்து நிற்க அவன் உதடுகள் அத்து மீறி அவளை உஷ்ணமேற்றியது.

என்ன சொல்ல போகிறாய்..Donde viven las historias. Descúbrelo ahora