அத்தியாயம்-04

7.2K 263 29
                                    

உதிர்ந்து கிடந்த
ஒற்றை இறகெடுத்து
ஒரு பறவை வரைந்தேன்
சிறகடிக்க அது ஒரு வானம் வரைந்து கொண்டது...

இடியட்..இர்ரெஸ்பான்ஸிபிள் பெ(f)ல்லோ...அந்தப் பசங்களோட சேர்ந்து விளையாட்ற வயசா உனக்கு..தண்டம் தண்டம் வழக்கம் போல ருத்ராதான் தாண்டவமாடிக் கொண்டிருந்தான். அந்த பக்கத்து வீட்டு மனிதர் கால் பண்ணி புலம்பி தள்ளியதில் கடுப்பாகி இருந்தான் அவன்..அவருக்கு அதற்கான பணத்தை செட்ல் பண்ணி சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது... கண்களிலிருந்து கண்ணீர் வர மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தவளை முறைத்து ஸ்டாப் திஸ் ட்ராமா..எதுக்கிப்போ முதலை கண்ணீர் வடிக்கிற..நான் ஒன்னும் அழலை அம்மா வச்ச மிளகு ரசத்தில் காரம் ஜாஸ்தி நீங்க கூப்பிடவும் தண்ணீ கூட குடிக்காம வந்தேன் அதான்.பட்டென அவள் சொல்ல அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஹாஹா...ஹா..ஹா.. அவன் சிரிப்பதை உலக அதிசயம் போல பார்த்ததவளை பார்த்து இன்னும் சிரித்தான்..

சிரிப்பை நிறுத்தி அவளை பார்த்தான்..அவன் கண்கள்... அந்த பார்வை... ஓ காட் ஐ கான்ட் லுக் இன் டூ ஹிஸ் ஐஸ்..அதனுள் மூழ்குவது போல் ஆழமாய் அமிழ்ந்து கொண்டிருந்தாள்..அவன் அவள் அருகே வந்தான் அவள் தலையில் செல்லமாய் தட்டி என்னமாதிரியான கேரக்டர் நீ..சரியான ராங்கி..சிரித்து விட்டு நகர்ந்தவனை பார்த்தவாறே சிலையாய் நின்றவள் ஆத்தீ...மீச சிரிக்குது..இதென்னாடா இது சிரிப்புக்கு வந்த சோதன..பார்வை வேற...ப்ப்பாஹ்..என்னா லுக்கு சாமி..தலையை இருபுறமும் ஆட்டி தன்னை இயல்புக்கு கொண்டு வந்தவள்..இரவின் தனிமையில் தோட்டத்தின் அமைதியும் காற்றும் இழுக்க அங்கே சென்றாள்.

மல்லிகை மலர்களின் வாசம் இரவை நிரப்பியிருக்க சுவாசத்தை இழுத்தவள்..பெஞ்சில் சாய்வாக யசோ அமர்ந்திருப்பதை பார்த்து அவளை நோக்கி நடந்தாள்.

யசோவின் அருகில் போனில் இருந்து அமிர்தமாய் இசையின் கசிவு...ஆழமான பாடல் வரிகள்
சட்டென நின்றன இளாவின் கால்கள்..அக்காவின் கண்களில் கண்ணீர்ப் பளபளப்பு..பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now