அத்தியாயம்-36

7.5K 286 24
                                    

அந்தி வான கதுப்புகளில்
ஆங்காங்கே சில
தெளித்த
நிறப்பொட்டுக்கள்..
வெட்கத்தில் சிவக்கும்
உன் முகம்..

இளா எல்லாம் ரெடி பண்ணியாச்சா..
இனி கெளம்பலாமா ருத்ரா கேட்க ஹ்ம்..ஆச்சு எல்லோருமாய் கீழிறங்கி வர ரகுதேவனும் தயாராய் வந்தார். அக்கா நீயும் வாயேன் பர்ஸ்ட் டைம் போறேன் அங்க சரியாய் யாரயுமே பழக்கம் இல்ல..நான் எப்டிடீ வர முடியும் எனக்கு தல சுத்து வாந்தியா இருக்கே..ரெண்டு நாள்ல வரப்போற அதுவுமே இங்கே பக்கத்துலயேதானே..அம்மா வேற நேர்த்திகடன்னு ஒரு வாரம் கோயில் போய்டுவா எப்டி தனியா மானேஜ் பண்ணுவ..ஐயே பெரிய மனுஷி நீங்க கெளம்புங்க நான் பார்த்துக்கறேன்..யசோ சிரிக்க ஆமாமா சொல்பேச்சு கேட்டா அவ எப்டி உங்கக்கா ஆக முடியும்..சிவகாமி நொடித்துக் கொண்டார். என்ன மம்ஸ் ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா கேப்ல என்னையும் சேத்துவச்சி வறுக்கறியே...சிரிப்புடன் எல்லோரிடமும் விடை பெற்று ருத்ரா இளா மது ரகுதேவன் என குடும்பத்துடன் பயணமானார்கள்.

யெல்மா பிரைவேட் லிமிடெட்ஸ் பெரியளவிலான மீன் மற்றும் இறால் பண்ணைகள் வைத்து உணவை பதப்படுத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் அங்கீகாரம் பெற்ற நிறுவனம்
ரகுதேவனதும் ருத்ரதேவனின் சிறந்த முகாமைத்துவத்தினால் கிழக்கிலங்கையின் முதற்தர நிறுவனங்களில் ஒன்றாய் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நிறுவனம் ஆரம்பித்த நாளுடன் இணைத்து இரண்டு நாட்கள் நிறுவன ஊழியர்களின் ரிலாக்ஸ் டேய்ஸ் ஆகும் வருடம் முழுக்க உழைக்கும் மக்களை உற்சாகமூட்டும் விதத்தில் அவர்களின் குடும்பத்தினர் உட்பட பாட்டு விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள்  என அமர்க்களப்படும்.

இவற்றை முதியோர் இல்லங்கள் சிறுவர் இல்லங்கள்..போன்ற இடங்களிலும் நடாத்துவதுண்டு.
ஆனால் இந்த முறை நகரின் ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்த ஒரு ரரிஸார்ட்டை தெரிவு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய்
கழிப்பதோடு அறைவசதி உணவு என்பனவும் இலவசமாய் கிடைக்க ருத்ரா ஏற்பாடு செய்திருந்தான். அத்தோடு சிறப்பான வேலைத் திறமை காண்பித்தவர்களுக்கு பெஸ்ட் பெர்பாமர் அவார்ட் கூட வழங்கப்பட்டது. ரகுதேவன் காலத்தில் ஒரு மாலைவிருந்தோடு நிறுத்தியிருக்க ருத்ராவின் வருகையின் பின்னே இந்த ஏற்பாடு.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now