அத்தியாயம்-32

7.1K 275 25
                                    

உன் கை விரல்கள்
கசக்கியதில்
காயப்பட்டது - என்
கவிதை வரிகள் அல்ல
காதல் கனவுகள்தான்...

நீ போய் தூங்கு..எதுக்கு முளிச்சிட்டிருக்க..இல்லத்தை இவ்ளோ லேட்டாயிடுச்சு எழிலை காணோம்..வந்துடுவான் சாப்பாட்டை டைனிங் டேபிள்ள வச்சிட்டு தூங்கு மணி பன்னெண்டாகறது..எழிலின் அம்மாவும் தூங்க செல்ல சாப்பாட்டை ஹாட் பெக்கில் போட்டு மேசையில் வைத்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை.லேட்டாகாம வந்துடுவானே கண்ணம்மா கண்ணம்மானு முந்தானையையே புடிச்சிட்டு சுத்துவான் ராஸ்கல் எங்கேடா போன..போனையும்ஆப் பண்ணிட்டு உங்கிட்ட ஒன்னு சொல்லணும் சீக்கிரமா வந்துடேன்டா..கணவனை நினைத்தவாறே அவள் கதிரையில் அமர்ந்தபடி தூங்க தொடங்கிய போது..கதவு திறக்கும் சத்தத்தில் கண் விழித்தாள்.

அவனோ வந்த வேகத்தில் மாடிப்படி ஏற எழில்...அவளின் அழைப்பிற்கு நின்று திரும்பியவனிடம் சாப்பாடு...என்றாள்.வெளியிலே சாப்டேன்.அதற்கு மேல் நிற்காமல் அவன் சென்றுவிட அவள் மலைத்துப் போய் நின்றாள்.
என்னாச்சு இவனுக்கு...அவளும் மேலே அறைக்கு வந்த போது பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்டது.அவன் வரும் வரை கட்டிலில் அமர்ந்தாள்.

வெளியே வந்தவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு குட் நைட்டுடன் தூங்கத் தயாராக..என்னாச்சு எழில் ஆபீஸ் ல எதுனாச்சும் ப்ராப்ளமா..ஏன் டல்லாய் தெரியறே..அதெல்லாம் ஒன்னுமில்லை..பகல்கூட நல்லாதானே பேசினே..அவன் அமைதியாய் இருக்க எழில் உங்கிட்டே ஒன்னு சொல்லணும் படுத்திருந்தவனின் அருகில் நெருங்கி அவள் அவனை அணைக்க அவள் கைகளை விலக்கியவன் நாளைக்கு பேசிக்கலாம்..இப்போவே பேசியாகணுமே அவள் இன்னும் நெருங்க சட்டென எழுந்தவன் உன் கதையெல்லாம் நாளைக்கு வச்சுக்க இப்போ தலை வலிக்குது தூங்க விடு..முகத்திலடித்தாற் போல் பேச யசோ தள்ளி அமர்ந்தாள்.

தண்ணியுடனும் டாப்லட்டுடனும் வந்தவள் இதைக்குடிச்சிட்டு படு..அவனிடம் நீட்டினாள்
இல்லை வேணாம்..எழில் குடிச்சிட்டு படேன்..அவள் க்ளாசை நீட்ட அவன் தட்டி விட்டதில் அது கீழே விழுந்து சத்தமாய் நொறுங்கியது. ஏன் இப்டி நடந்துக்கற எழில்..அவள் கண்கள் கலங்கின. லீவ் மி எலோன் யசோதா அவன் உறுமலாய் சொல்லிவிட்டு படுத்துக் கொள்ள அவனின் கண்ணம்மாவும் காதலும் காணாமல் போய்  இருக்க அவள் அதிர்வாய் அப்படியே நின்றாள்.

என்ன சொல்ல போகிறாய்..Waar verhalen tot leven komen. Ontdek het nu