அத்தியாயம்-05

6.8K 260 15
                                    

அவனுக்கான என் காத்திருப்பில்
காலில் எறும்புக்கடி கூட
என் பேனாவின்
சர்க்கரைக் கவிதை...

இவ்வளவு பெரிய பிரச்சனையாகுமென ருத்ரதேவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.அவன் பெரியளவிலான மீன் மற்றும் இறால் பண்ணைகள் வைத்து உணவை பதப்படுத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தை நடத்தி வருகிறான். ரகுதேவன் ஆரம்பித்த போதும் ருத்ராவின் கைக்கு வந்த பிறகே அசுர வளர்ச்சி அடைந்தது எனலாம்.

அங்கு வேலை செய்வோர் இதுவரை குறை என்று ஒன்று கூறியதில்லை அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவில் ஒரு பகுதியை கூட கம்பனியே பொறுப்பெடுத்துச் செய்கிறது.
யூனியன் என பெயரளவில் இருந்த போதும் அது கோரிக்கை வைக்குமளவு ருத்ரா விட்டதில்லை. ஆனால் தவராசா புதிதாக வேலைக்கு சேர்ந்தவன்.அவனின் தந்தை நாணயமானவர் அவரின் இறப்பிற்கு பின் மகனிற்கு வேலையை கொடுத்திருந்தான் ருத்ரா.

ஆனால் சேர்ந்து இரண்டு மாதங்களில் அவன் யூனியனை உசுப்பிவிட்டு கலகத்திற்கு தூண்டினான்.விஷயம் ருத்ரா காதிற்கு செல்ல அவன் அழைத்து கண்டித்து வைத்தான்.ஆனால் அவனோ இந்தக் கம்பனி ரகசியங்களை எதிர்க் கம்பனிக்கு சொல்லும் உளவாளி என தெரிய வந்தது.

இவ்வாறான துரோகங்களை ஒரு நாளும் ருத்ராவால் ஏற்க முடிவதில்லை அவனை அழைத்து எல்லோர் முன்னும் அவமானப்படுத்தி வெளியேற்ற அவனின் ஆதரவாளர்கள் கிளர்ந்தெழ ஒரே களேபரமாகி இறுதியில் தொழிலாளர்களை அழைத்து மீட்டிங் வைத்து ஆதாரத்துடன் நிறூபித்து இனி பிரச்சினைகள் வராதவாறு வழி செய்து...என அவன் கம்பெனி விட்டு வெளியேறும் போது இரவு பத்து மணி. சுமூகமாய் எல்லாம் முடிந்திருந்த போதும் அவனுக்கு சரியான தலைவலி.

வீட்டுக்குள் அவன் நுழைந்த நேரம் இரவு வெகு நேரமாகிவிட்டிருந்து. மதுவும் யசோவும் தூங்கியிருக்க அப்பாவும் டாப்ளட் போட்டுக் கொள்வதால் தூங்கியிருப்பார்..அத்தை சாப்பாடு வைத்துக் கொண்டிருந்தார்.ப்(f)ரஷ் ஆயிட்டு வா ருத்ரா சாப்டலாம். இல்லை அத்தை நீங்க போய் தூங்குங்க எனக்கு பசியில்லை என்று விட்டு படியேறி தன் அறைக்குள் நுழைந்தான். இளா சுவரை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள். டவளை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றவன் நன்றாக அலுப்புத் தீர குளித்து விட்டு வந்து கட்டிலில் விழுந்தான். இன்னும் அவள் விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தாள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now