அத்தியாயம்-09

6.5K 234 7
                                    

அதோ..என்
கனவுகளின் அந்தபுரம்
அடுத்தவர் நுழைய அனுமதியற்ற
விழிகளின் தற்காலிக
தரிசனங்களை ஸ்பரிசிக்க
தயாராய் நான்..

இது சிவகுமார் மை கோ வர்க்கர் கல்யாணத்துக்கு வெளியூர் போனதால வர முடிலையாம்..இல்லை யசோதா சார்க்கு என்னை ஏற்கனவே தெரியும்..மேட் பார் ஈச் அதர் ஒரு சோகமான பார்வையுடன் அவன் விலக அவள் திரும்பி எழிலை பார்த்தாள். அவன் முகம் கடுகடுவென்றிருந்தது. இவனை யாரு வர சொல்லி அழுதா பாரு என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு போறான் டாம்ன். ஆமாமா பிஜிஎம் ல எங்கிருந்தாலும் வாழ்க ஸாங்கூட கேட்டிச்சுல்ல அத்தான்.. என்றவாறு இளா வர இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

ஹேய் இளா ஸாரில அசத்துற இப்போதான் ஒரு பொண்ணு எபக்டே வர்ரது..ஹலோ மாப்ள உங்க வைப்(f) ஐ மட்டும் கவனிங்க எங்களை பத்தி நாங்க கமண்ட் கேக்கலை. என்ன நாத்தனாரே இப்டி சொல்லிட்டீங்க.. அத்தான் எங்கிட்ட வச்சுக்காதீங்க..வச்சுக்கிட்டா..என்ன பண்ணுவ எழில் வம்பிழுத்தான்.யசோ சுவாரஸ்யமாய் ஒரு சிரிப்புடன் கவனித்தாள்.

என்னக்கா நீ உன் வீட்டுக்காரரை என்னனு கேட்க மாட்டியா...அவள் யசோவிடம் நியாயம் பேச அவள் எழிலிடம் என்ன என கேட்டு வைத்தாள்.ஹாஹா..அவன் சிரிக்க..இருங்க உங்களை..எங்களை..என் புருஷன்கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ண போறேன்..கொஞ்சம் தூரமாய் நின்றிருந்த ருத்ராவை எழில் அழைக்க அருகே வந்தான் அவன்.

ஐயோ அத்தான் அவரை ஏன் கூப்டுறீங்க..இளாவுக்கு வெட்கமாகிப் போய்விட்டது. இரும்மா உங்க அவர்கிட்டயே நியாயம் கேட்போம். ஐயோ..ப்ளீஸ்..அக்கா பாருக்கா இவரை. அதற்குள் ருத்ரா வந்துவிட
உன் வொய்ப்(f) உங்கிட்ட என்னமோ சொல்லணும்னு சொன்னா..அவன் இழுக்க ருத்ரா அவள் பக்கம் திரும்பி புருவங்களை உயர்த்தி என்ன..என்பது போல் பார்த்தான். ஒண்ணுமில்லை என முணுமுணுத்தவள் நைஸாக நழுவ எழிலின் சிரிப்பு அவளை தொடர்ந்தது.

வீட்டுக்கு வந்த கூட்டம் கலைந்து பரபரப்பு அடங்கி உண்டு முடித்து அவரவர் அறைக்கு வர இரவு பதினொரு மணியை கடந்திருந்தது.
எல்லோரிடமும் விடைபெற்று அம்மாவையும் இளாவையும் அணைத்துக் கொண்டு அழுது மதுவின் கன்னத்தில் முத்தமிட்டு மாமாவின் அன்பான ஆசியுடனும் ருத்ராவிடம் கனிவான தலையசைவுடனும் விடைபெற்று யசோ ஒரு வழியாக எழிலின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

என்ன சொல்ல போகிறாய்..Tahanan ng mga kuwento. Tumuklas ngayon