அத்தியாயம்-15

6.5K 268 12
                                    

நீ தீண்டிய இடமெல்லாம்
சுகமாய் ஓர் தகிப்பு
தீ பாதி தேன் பாதியாய்
அனலாய் ஓர் தித்திப்பு..

கதவை திறந்த எழிலுக்கு மனசை பிசைந்தது தான் செல்லும் போதிருந்த நிலையிலேயே அவள் அப்போதும் அமர்ந்திருந்தாள். கன்னத்தில் கண்ணீர்க் கோடுகள் காய்ந்திருக்க எங்கோ வெறித்திருந்தாள்.

ஏதோ ஓர் வேகத்தில் வந்துவிட்ட போதும் பேச முடியாமல் நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள் எழுந்து பால்கனிக்கு சென்று நின்றாள். வெளியில் வானம் கறுத்து இருளடித்திருக்க குளிராய் வீசிய காற்றும் இணைந்து பகலை இரவாக்க எத்தணித்துக் கொண்டிருந்து.

பால்கனிச் சுவற்றை இறுகப் பற்றி அழுகையை அடக்க அவள் படும் பாட்டினை பார்க்க முடியாமல் கண்ணம்மா என்றான் குரல் தழுதழுக்க. அவ்வளவுதான் பாய்ந்து அவனை கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

ஒருவர் அடுத்தவருள் புதைந்து போவது போல் அந்த அணைப்பு இறுக்கமாய் அழுத்தமாய்.. என்னை ஏன்டா விட்டுட்டு போய்ட்ட..அவள் அழுதாள்..ஹேய் போதும்டி அழாத அதான் வந்துட்டேன்ல இனி போகவே மாட்டேன்..அவள் அவன் ஷர்ட்டில் முகத்தை துடைத்தாள். அவள் முகத்தை நிமிர்த்தி துடைத்து முன்னால் விழுந்து கிடந்த முடிக் கற்றைகளை பின்னால் ஒதுக்கி விட்டான். அவளது கண்கள் கலங்கி உதடும் மூக்கு நுனியும் சிவந்து கிடந்தது.

துளிகள் விழுந்து மழை வலுக்க ஆரம்பித்தது. சாரல் வஞ்சகமின்றி அவர்களை நனைக்க கூதலாய் காற்று மேனி தழுவித் திரும்ப நனைந்த இரவு உடையுடன் இருந்தவள் உடல் சிலிர்த்தாள்.பனியில் நனைந்த மலராய் உதடுகள் நடுங்க பற்களை அழுத்தி நிறுத்த முயன்றாள்.

அதற்கு மேல் தாங்காது அவளை தன்னோடு இழுத்து அணைத்தவன் குனிந்து அவள் உதடுகளை தனதாக்கிக் கொண்டான்.அதிர்ச்சியாய் விரிந்த அவள் விழிகள் மெதுவாய் மூடிக் கொண்டன.

இருவரும் மூச்சுக்காய் தவித்த போது அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள் அவள். இருவருக்கும் மூச்சு வாங்கியது.
அவளுக்கு அதிர்ச்சி என்றால் அவனுக்கு அதற்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது. நானா இப்படி நடந்து கொண்டேன்..இருவரும் திகைத்து நிற்கையில் அம்மாடி யசோ ஒரு கப் டீ குடும்மா..எழிலின் அப்பா கீழிருந்து அழைத்தார்.

என்ன சொல்ல போகிறாய்..Dove le storie prendono vita. Scoprilo ora