அத்தியாயம்-20

6.9K 259 8
                                    

நரம்பிடையில்
ஏராள உற்சாக சிலிர்ப்புகள்
என் ஹார்மோன் உசுப்பி
உதிரம் உறுஞ்சுகிறாய்
ஆசை அசுரன் நீ..

ஆமா இப்போ எதுக்காம் எடிட்டர் சார் அவசர மீட்டிங்னு உக்காத்தி வச்சிருக்கார்..இளா கேட்க தோளை குலுக்கி யாருக்கு தெரியும்..என்றாள் மேகா. ஏன்டீ ஏடாகூடாம ஏதும் பண்ணித் தொலச்சியா..?ராதா இளாவை சந்தேகமாய் கேட்டாள்.
அடிங்க் கொய்யால..நானுண்டு என் வேலையுண்டுனு இருக்கேன் என்னை பார்த்து எப்டீ நீ அப்படி ஒரு வார்த்தை கேட்கலாம்.இளா சிலிர்த்தெழ அதானே இந்த பால் வடியுற முகத்தை பார்த்து அப்படியா கேட்க தோணுது..விக்கி ஒத்தூதினான்..டேய் நீ கரிசனமாய் பேசறியா இல்லை கலாய்க்கறியா சங்கர் விக்கியிடம் கேட்க அவனோ கண்சிமிட்டி நீ நினைக்கறதுதான் மச்சி..என்றான். ச்சே ச்சே இந்த மக்களுக்கு ஒரு எதிர்காலத் தலைவரிடம் எப்டீ பேசணும்னு வெவஸ்தையே இல்லை. அவள் அலுத்துக்கொள்ள சூய்..சூய்..இந்த கொசுத்தொல்லை தாங்கலை. எல்லோரும் கோரசாய் கொசு விரட்டினர். போங்கடா போங்கடா என்றவாறே செல்லை எடுத்து வாட்ஸப்பை நோண்டினாள்.

கான்டக்ட்ஸ் ஸ்டேடஸ்ஸை பார்த்தவள் க்ரூப் சாட்டில் சில பல மெஸேஜ்களை  செண்டிவிட்டு மீஸை மாமாவை தேடினாள். அவனின் ப்ரொபை(f)ல் போட்டோவை பார்ப்பதில் அவளுக்கொரு ஆனந்தம். காரில் ஸ்டைலாக சாய்ந்து அவன் நிற்க தோளில் சிரிப்பாய் தொற்றியிருக்கும் மது என பாந்தமாய் அழகாய் இருக்கும்.பார்த்துவிட்டு பேக்கடிக்கையில் அவன் ஆன்லைனில் இருப்பதை பார்த்தாள்.ஹாய்..டைப் செய்தவள் ஐயோ இளா உனக்கு மானம் சூடு சொரணை எதுவுமே கெடையாதா..தன்னையே திட்டிவிட்டு மெஸேஜை அனுப்பாமலே டிலீட் செய்தாள். அட ஒரு மெஸேஜ் அனுப்பினால் அப்படி என்ன மானம் போய்டப்போது திரும்பவும் டைப் செய்து செண்ட் பண்ணினாள். அவன் உடனே பார்த்ததற்கு அறிகுறியாய் டபள் ப்ளூ டிக் விழ டைப்பிங்க்....காட்டியது.ஆர்வமாய் பார்த்திருந்தவளுக்கு என்ன??? என்ற உர்ர்ர் கேள்வி வந்து விழுந்தது.

என்னன்னா சும்மாதான்..அவள் அனுப்ப டோன்ட் வேஸ்ட் மை டைம் ஐ யாம் பிஸி நவ்..பொண்டாட்டி கூட பேசறது டைம் வேஸ்ட்டா..டோன்ட் பீ ஸில்லி அவளின் கோபமான ரிப்ளைக்கு பொண்டாட்டி???? என பதில் வர காண்டான இளாவோ அப்போ என்ன வப்பாட்டியா னு கேட்டுவிட்டாள். கொன்னு புதைச்சிடுவேன் எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு..கோபத்தை கிளறாதே அவன் ரிப்ளையில் தான் பேசிய பேச்சின் வீரியம் புரிய ஸாரி...பம்மினாள் அவள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now