அத்தியாயம்-14

6.4K 244 12
                                    

குளிர்நீர் தொட
சிலிர்க்கும்
குழந்தை மேனியாய்
உன் தலை கோதும்
என் தளிர் விரல்கள்...

எழில் ப்ளீஸ்..ஏன் இப்படி பண்ணிட்டிருக்க எனக்கொரு முடிவு தெரியாம நான் வழி விட போறதில்லை...யசோ தள்ளு பத்திரிகை ஆபிஸ் பொய்ட்டு பாக்டரி வேற போனும்..டைம் இல்லை.

மாட்டேன்..கையை கட்டி குறுக்காக வழி மறித்து சட்டமாய் நின்றாள்.
யசோ..பல்லை கடித்தவன் என்னடி உன் ப்ராப்ளம்..என்றான் எரிச்சலாய். இதோ..இதான் ப்ராப்ளம் என்றாள். எது..?
எங்கே போனா உன் கண்ணம்மா யசோ யசோ னு சொல்ற என்கிட்ட சரியா பேசறதில்லை அப்படி என்னடா தப்பு பண்ணேன்.

நீ பண்ணலடி நான்தான் பண்ணேன்..அவன் உஷ்ணமாய் பேச எதை சொல்ற என்னை கல்யாணம் பண்ணதையா தப்புன்ட்ர..ஆமா இப்போ என்ன அதான் தப்பு. அப்போ ஏண்டா பண்ணிக்கிட்ட அவள் அழுதாள்.
விலகி வழி விட்டு சுவற்றில் சாய்ந்தமர்ந்து அழுது கொண்டிருந்தவளை கொஞ்ச நேரம் இமை வெட்டாது பார்த்திருந்தவன் வேகமாய் வெளியேறிப் போய்விட்டான்.

தான் அழுவதை கண்டு கொள்ளாமல் அவன் வெளியேறி விட அவள் அழுகை இன்னும் அதிகரித்தது.

ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு நேரத்தை பார்த்தாள் இளா ஒன்பதரை..வழக்கம் போல தர்ட்டி மினிட்ஸ் லேட். எப்படித்தான் அவசரமாய் ரெடி ஆனாலும் லேட்டாகி தொலைச்சுடுது..எண்ணமிட்டவாறே இலக்கியா என நியான் எழுத்துக்கள் மின்னிய அலுவலகத்தினுள் நுழைந்தாள்.

என்னடா புது ஷர்ட் லாம் போட்டு கலக்குற பக்கத்து தெரு ரஞ்சிதம் செட் ஆய்ட்டாளா கண் சிமிட்டி எதிரே வந்த ஆபீஸ்பாய் பாலுவிடம் வினவ யக்கோவ் ஜீனியஸ்கா நீ..எப்டிக்கா கரெக்டா சொல்ற.
மூளைடா மூளை..அவள் பீத்திக் கொள்ள ஆமாக்கா உடம்பெல்லாம் மூளை உன் சைஸுக்கு மூளை கொஞ்சம் கூடுதல்க்கா அவன் சிரிக்க..அடிங் படவா ராஸ்கோல் யார்கிட்ட..அவள் கை ஓங்க அவன் ஓடி மறைந்தான்.

இளா உன் அழகையும் அறிவையும் பார்த்து இதுங்களுக்கெல்லாம் பொறாமை..கண்டுக்காம விட்டுடு..என்றவாறு வந்தமர்ந்தவளை யாரோடடி பேசிகிட்டு வர்ர என மேகா கேட்டாள்..ஏன் என்கூடதான் பேசிட்டு வர்ரேன் என்று இளா கூற அவளை வினோதமாய் பார்த்து வைத்தாள் மேகா. ஆமா இந்த சங்கு பையன் ஏன்டி உம்முனு இருக்கான் வீட்ல பொன்டாட்டி கூட தகறாரா..எதிரே உம்மென்றமர்ந்தவாறு காகிதங்களை தூக்கி தூக்கி போட்டு வேலை செய்து கொண்டிருந்த சங்கரை பார்த்தவாறே இளா கேட்டாள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now