அத்தியாயம்-03

9.1K 265 20
                                    

காசும் கவிஞனும்
வக்கீலும் உண்மையும்
தேர்தலும் வாக்குறுதியும் போல
என் காதலும் நீயும்...

சிட்அவுட்டின் ஈசிச்சேரில் சாய்வாய் அமர்ந்து கால்களை மேசை மீது போட்டிருந்தாள் யசோதா.கையில் சுஜாதாவின் "நில்லுங்கள் ராஜாவே"கண்களில் சுவாரஸ்யம்.அப்படியே அவளை வர்ணித்து விடலாம்.சற்றே குறைவான நிறம் அளவான உடல்வாகு அழகாய் இருந்தாள்.பார்வையில் தீட்சண்யம்..இதழ்களில் பிடிவாதம் கைதேர்ந்த ஓவியனின் மங்கலான அழகிய ஓவியமாய் இருந்தாள்.

யக்கோவ் என்னா பாடி ஷேப் உனக்கு என்னைப்பார் என உதடு பிதுக்கி தன் சதைப்பிடிப்பான இடையினை கவலையாகப் பார்க்கும் தங்கை என்றால் கொள்ளைப் பிரியம்.மாமா மீது மரியாதை அம்மாவில் நிறைய அன்பு ருத்ராதான் தோழமையான வெல்விஷர்..மது அவளின் ஸ்வீட் செல்லம் ஆனால் எல்லோரையும் விட அவனென்றால் உயிர்.கதையில் கணேஷின் தொடர்பற்ற கேள்விகளுக்கு வசந்த் பதிலளித்துக் கொண்டிருக்கையில் ஏ ஆரின் தள்ளிப் போகாதே இசைத்தது அவள் செல்லில்.

அவளின் உயிர்தான் அழைத்திருந்தான்..சொல்லு எழில்.கண்ணம்மா ஈவ்னிங் நீ ப்(f)ரீயா..பீச் வர்ரீயா சார் பீச் கூப்டா மேட்டர் சீரியஸாச்சே..என்ன சொல்லு..அது மேரேஜ் டேட் பி(f)க்ஸ் பண்ணியாச்சு சந்தியாதான்னு கன்பார்ம் ஆயிடிச்சி.மனசெல்லாம் கசந்து கண்கள் கலங்கிப் போயின அவளுக்கு.பேச்சே வரவில்லை.
ஹேய்.... ஆர் யூ தேர்..கனைத்து செருமியவள் கங்க்ராட்ஸ்டா என்றாள் முயன்று வருவித்த மகிழ்ச்சிக் குரலில்.ருத்ரா அப்பா கூட இங்கேதான் இருக்கார்.இப்போதான் பேசிக்கிட்டாங்க உனக்குதான் தெரியுமே உன்கிட்ட உடனே ஷேர் பண்ணாம இருக்க முடியாதுன்னு.. ஈவ்னிங் பைவ் தர்ட்டிக்கு பீச் வந்துடு வச்சிர்ரன் கண்ணம்மா.

க..ண்..ண..ம்..மா வெறுப்பாய் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். அவன் அவளை அப்படி அழைக்க ஆரம்பித்த நிகழ்வை நினைத்துக் கொண்டாள். எழிலுக்கு அப்போது பதினாறு அவளுக்கு பதினாலு. அவனுக்கும் அவளுக்கும் சிறுவயதிலிருந்து அப்படி ஒரு பிணைப்பு.அவர்கள் பேசாத பகிராத விஷயங்களே இல்லை..அவனுக்கு பாரதியார் கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now