அத்தியாயம் - 40

14.9K 428 163
                                    

உள்ளம் விழுந்து
உடைந்து சிதறும்
ஓர் துளி நேசம்..
பள்ளம் எல்லாம்
பரவிப் பாய்ந்து
பரவசம் பூசும்..

ஒரு வருடத்திற்கு பிறகு...

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்..
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள் சுகமான ஒரு சுமைதானே..
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்..

இதுதானா... இதுதானா..
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா.. இவன்தானா..
மலர் சூட்டும் மணவாளன் இவன்தானா...

நாளைதான் திருமணம் என்றாலும் இன்றே நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் அவர்களுக்கேயுரிய வம்புகள் வளவளப்புக்கள்..கூடவே நண்பர்களின் அழிச்சாட்டியத்தால் சத்தமான பாடல்களுமாய் மாலை ஐந்து மணிக்கே கலகலப்பாய் பளிச்சென்றிருந்தது அந்த வீடு. வாயிலில் அழகிய பச்சை ஓலையால் விக்னேஷ் வெட்ஸ் மேனகா என பெரிதாய் பின்னப்பட்டிருந்தது.

வேணாம் வேணாம்னு அமுக்குனி மாதிரி இருந்துட்டு இப்போ ஜம்முன்னு கல்யாணத்துக்கு ரெடியாகுற.. ஆனாலும் உங்களுக்கெல்லாம் ரொம்பத்தான் அழுத்தம்டிம்மா...ராதா அங்கலாய்க்க
கண்ணை மூடி சற்று தலையை உயர்த்திப் படுத்திருந்த மேகா சிரித்தாள்.

விடுடீ..விடுடீ..அதான் வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு விக்கி போட்ட போடுல மேடம் அரண்டு போய் சரண்டர் ஆயிட்டாங்கல்ல...அப்றம் ஏன்டீ புள்ளய நீயும் கலாய்க்கற..மேகாவின் முகத்தில் முல்தானிமெட்டியை அப்ளை செய்து கொண்டிருந்த இளாவும் காலைவாரினாள்..கண்ணை மூடி படுத்திருந்த நிலையிலேயே மேகா இளாவின் இடுப்பை கிள்ள ஊஹ்ஹ்..என்ற சத்தத்துடன் துள்ளி விலகினாள்.

ஷ்ஷ்ஷ்ஷ்...சத்தம் போடாதங்கடீ..நானே இவனை கஷ்டப்பட்டு இப்போதான் தூங்க வச்சிருகேன்..எழிலின் ஜராக்சாய் மடியில் படுத்திருந்த ஐந்து மாதங்களே நிரம்பிய மகன் கலையரசனை மெதுவாய் தட்டி தூங்க வைத்தபடி இவர்களை அதட்டினாள் யசோதா.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now