என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

319K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-26

7K 285 20
By hassyiniyaval

இதய ஆழத்தில்
இதமாய் அமிழ்ந்திருக்கும்-உன்
நினைவுக்குமிழ்கள்
மெதுமெதுவாய் மேலெழும்ப
கல்லெறிந்து குழப்பிவிடும்-என்
காதல் குழந்தை நீ

இரவு வெகு நேரம் ஆனதால் மரத்தடி பார்ட்டி முடிவுக்கு வர எல்லோரும் அவரவர் குடில்களுக்குள் நுழைந்தனர்.

மதுவின் இரண்டு பக்கங்களிலும் இருவரும் படுத்துக் கொண்டனர்.மது உறங்கியிருக்க இளா அவனையே பார்த்திருந்தாள்..விட்டத்தை வெறித்திருந்த அவன் விழிகள் சட்டென திரும்பி அவள் கண்களோடு கலந்தது. எவ்வளவு நேரமென்று தெரியாமல் ஒருத்தரை ஒருத்தர் விழி விலக்காது பார்த்திருக்க அவள் கண்களில் நீர் திரண்டது.

என்னை பிடிக்கலையா தேவா..மௌனமாய் அவள் மனம் இறைஞ்சியது..அவள் மௌன மொழி அவனுக்கு கேட்டதோ என்னவோ மது மீது வைத்திருந்த அவள் கைகளை அவன் கரம் இறுகப்பற்றியது. கண்டதையும் யோசிக்காம தூங்கு..அவனின் அந்த வார்த்தையே அவளுக்கு போதுமானதாய் இருக்க உடனே உறங்கிப் போனாள். அவன்தான் தூக்கமின்றி அவளையே பார்த்தபடி படுத்திருந்தான்.

ஹேய் செம்மையா இருக்கு விக்கி..அஸத்திட்டே போ விக்கியின் கேமிராவில் அவன் எடுத்திருந்த சூர்யோதய காட்சியில் லயித்திருந்தாள் இளா. பின்னே ஐயாவை யார்னு நினைச்ச..ராஜா கைய வச்சா அது ராங்க்கா போனதில்லே..ஐயே போதுமே கொஞ்சம் நல்லாருக்குன்னு சொல்ல கூடாதே ராதா அங்கலாய்க்க ஆமாமா பெருமை பீத்தல்..மேகா முணுமுணுத்தாள்.

ஆமா இளா இந்த மயிலுக்கு மாமன் மேல என்ன கோபம்னு கேட்டு சொல்லேன்..ஏனோ அத நீங்க சொல்றது.. எங்களுக்கென்ன வேலை வெட்டி இல்லையா ஊரைப் பற்றி கட்டுரைக்கு தேவையானதை நோட் பேடில் குறித்துக் கொண்டிருந்த இளா கேட்க..ராதா நீயாச்சும்..ராதாவிடம் விக்கி இழுக்க நான் உனக்கு மாமா வேலை பார்க்கவா வந்தேன் அவள் முறைத்தாள். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடீ போங்க..என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடீ வாங்க..இப்ப நீ வாயை மூடிட்டு போப்போறீயா இல்லையா..முடியாது இப்ப என்னான்ட்ர..வயலின் நடுவில் மரத்தின் மேல் ஒரு வீடு போல் பலகையினால் அமைக்கப்பட்டிருந்த பரணில் அவர்கள் அமர்ந்து வழக்கடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுவை தூக்கிக் கொண்டு ருத்ராவும் அருகே எழிலும் யசோவும் வரப்பு வழியாய் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
விக்கிக்கு திட்டிக் கொண்டிருந்த இளாவின் பார்வை மாற்றத்தை கவனித்த விக்னேஷ் திரும்பிப் பார்த்து விசிலடித்தான். மேகாவை பார்த்து பார்..முழுசா காதல்முகியா மாறிப் போன இளாவைப் பார்..இவ தினமும் இப்டித்தான் ருத்ராவைப் பாக்கறப்போல்லாம் வழிஞ்சிட்டிருக்கா..விக்கி ஸுபர் ஸ்டார் குரலில் மிமிக் செய்ய
ராதாவும் மேகாவும் விழுந்து விழுந்து சிரித்தனர் இளாவிற்கும் சிரிப்பு வர அடக்கிக் கொண்டு கையிலிருந்த நோட் பேடால் ஒரு போடு போட்டாள். அடியை வாங்கிக் மேகாவை நோக்கி பார்த்தியாம்மா அவ மாமா மேல அவளுக்கு இருக்கிற லவ்ஸ்ஸை நீதான் என்னை கண்டுக்குறதில்லை வெரி பேட் அவன் சோக சீன் போட மேகா அதைக் கண்டு கொள்ளாது உச்சுக் கொட்டினாள்.

ஹேய் எனக்கு ஜோஷியம் தெரியும் பார்க்கறீங்களா இப்போ நான் சொல்றது நடக்கும்..என்ற மேகாவை எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்  ருத்ரா பரண்ல ஏறி இளாவிற்கு எதிர் முனையை காட்டி அதோ அந்த மூலைல உக்காந்துட்டு ஏதோ இயற்கையை ரசிக்க வந்தது மாதிரி ஸீன் போடுவார்..நம்ம எடிட்டர் சார் இருக்காரே இந்த பரண்ல இருக்க இடமே இல்லாதது போல யசோக்காவோட ஒட்டி ஒரசிட்டு ரொமான்ஸ் பண்ணுவார்..அவள் சொல்லி முடிக்க அவர்கள் பரணில் ஏறி அதே போல் செய்ய மற்றவர்கள் அடக்க முடியாமல் சிரித்தனர்.

அப்டி என்ன ஜோக் சொன்னா நாங்களும் சிரிப்போமே..கேட்ட ருத்ராவிடம் விக்கி நடந்ததை சொல்ல ருத்ரா சிரித்தான்..அச்சோ உங்களால மானம் போகுது..யசோ எழிலிடம் கிசுகிசுக்க ஏன்டீ புருசன் பக்கத்துல வந்து காதுல கிசுகிசுத்தா அந்த மானம் போகாதாக்கும்..அவன் கேட்ட விதத்தில் யசோ சட்டென தள்ளி அமர மீண்டும் அங்கே சிரிப்பலை பரவியது.

அன்றைய நாள் வயல் வரப்போடு கழிய அடுத்த நாள் மாந்தோப்போடு கழிந்தது. நாளுக்கு நாள் வித்தியாசமான அனுபவங்களையும் எல்லோரோடும் நெருக்கத்தையும் ஏற்படுத்திய இந்த கிராமிய நாட்களை எல்லோருக்கும் பிடித்திருந்தது.பகலெல்லாம் சேர்ந்து சுற்றுவதும் இரவில் அரட்டை கச்சேரியுமாக எந்த அந்நிய சிந்தனையுமின்றி நாட்கள் கூலாக நகர்ந்தது.

வழக்கம் போல எல்லோருமாய் இரவுச் சாப்பாடு முடித்து தூங்க தயாரானார்கள்.
மதுவை தூங்க வைத்து போர்த்திவிட்ட இளா ருத்ரா தூங்க ஏதுவாக மதுவின் வலப்புறமாய் தலையணையை சரி செய்து வைத்தவள் நைட்டிக்கு மாறி வந்து மதுவின் அருகில் இடப்புறமாக படுத்துக் கொண்டாள்.

அடுத்த அறையில் இருந்த கயிற்றுக்கட்டிலில் ராதாவும் மேகாவும் சளசளத்துவிட்டு உறங்கிப் போயிருக்க இளா தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள். அப்போதுதான் குடிலுக்குள் நுழைந்த ருத்ரா பைஜாமாவில் இருந்தான்.குனிந்து தலையணையை அவன் எடுக்க எங்கே தூங்க போறிங்க வெளியிலேயா..குளிர் காத்தா இருக்குத்தான் இங்கேயே படுத்துக்கலாமே..அவள் சொன்னதை காதில் வாங்காமல் தலையணையுடன் வாயில் நோக்கி நடந்தான்.கோபத்தில் அவனுக்கு முதுகு காட்டி மது புறமாய் திரும்பியவள் எனக்கென்ன வந்துதாம் நான் சொல்றதை கேட்கவே கூடாதுன்னு அலைஞ்சா நான் என்ன பண்ண முடியும்...கதவடைக்கும் சத்தத்தில் இன்னும் கோபம் ஏற திமிர்ர்...தலைலருந்து கால் வரை முழுசும் திமிர்..பொல்லாத கட்டபொம்...சட்டென அவள் பேச்சு நின்றது.

ம்ம்..மேல சொல்லு கட்டபொம்மனா..மீசை இல்லையா..கிசுகிசுப்பாய் அவன் குரல் காதருகில் கேட்க அவள் திரும்பிக்கூட பார்க்க முடியாமல் உறைந்து போனாள்..கதவடைத்துவிட்டு திரும்பி வந்து அவள் அருகில் படுத்தானா..அவளை நெருங்கி அவன் படுத்துக் கொள்ள அவன் மூச்சுக் காற்று அவள் முதுகில் உஷ்ணமாய் படிந்தது..உடலொரு முறை சிலிர்த்தடங்கியது.

எ..என்ன..அவள் திணறினாள்..ஒன்னுமில்லையே ஜஸ்ட் இடத்தை மாத்தினேன் நைட்லெல்லாம் தூக்கமே இல்ல நீ என்னடான்னா கும்பகர்ணி கணக்காய் தூங்கற அதுதான் உன் சைடாய் படுத்தாலாச்சும் தூங்க முடியுதான்னு பார்ப்போமே..சொல்லிவிட்டு அவன் படுக்க அவளுக்கு தவிப்பாய் தூங்க முடியாமல் வியர்த்துக் கொட்டியது.

Continue Reading

You'll Also Like

118K 5.5K 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
365K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...
42.4K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
28K 1.2K 48
உறவுகளை மையப்படுத்தி நகரும் கதை இதுல காதல் நிச்சயம் இருக்கும் போக போக கதை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்