என்ன சொல்ல போகிறாய்..

Por hassyiniyaval

322K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... Más

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-26
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-25

7.1K 285 19
Por hassyiniyaval

உன்னாலே உயிர்நோக
உருவான மலர் நான்
என் ஏக்கம்..
தீர்க்காமல் தேக்கும்
என் வண்டு நீ...!

இருட்சேலையில் ஆங்காங்கே நட்சத்திரப்பூக்களின் சிதறலோடு நிலா சிரிப்பும் இணைந்து மௌனமாய் இரவு தொடங்கியிருக்க ஒரு தலையணையை போட்டு தளர்வாய் எழில் சாய்ந்திருந்தான் அருகே வந்து அமர்ந்தாள் யசோதா.

எழில்ல்...எழில்...அவன் பேசாமல் படுத்திருக்க உன்னைத்தான்..அதெல்லாம் காது கேட்குது சொல்லு..அதான் சாரி சொல்லிட்டேன்ல வேணும்னா தோப்புகரணம் போடட்டுமா..இப்போ யார் கேட்டா உன் தோப்புகரணத்தை அவன் முகம் திருப்ப என் செல்லம்ல என் கண்ணுல்ல..உன் கண்ணம்மா பாவம்தானே பேசேன்..ப்ளீஸ்..ப்ளீஸ்..

அடாடடடா இதென்னடா உங்களோட பெரிய ரோதனையாய்ப் போச்சு..நானும் எவ்வளவு நேரம்தான் காது கேட்காதமாதிரி ஆக்டிங் பண்றது..நம்ம கூட ஒரு வயசுப் பையன் இருக்கானே பார்த்து சூதானமா நடந்துக்குவமேன்னு இல்ல...ப்ளடி பகர்ஸ்..தலையணையுடன் விக்கி வெளியே தாழ்வாரம் நோக்கி நடந்தான்.யசோ நாக்கை கடித்து ஐயய்யோ இவனிருந்ததை மறந்துட்டேனே..என்றவுடன் எழில் பொங்கிச் சிரித்தான்.சிரிக்காதே எல்லாம் உன்னாலதான்..செல்லமாய் அவன் தோளில் குத்தினாள்.

இலுக்கு குடிசையின் வெளியே தாழ்வாரத்தில் மதுவை மடியில் வைத்துக் கொண்டு இளா அமர்ந்திருக்க ராதா ஏதோ வளவளக்க மேகாவும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள்..கொஞ்சமாய் தள்ளி ருத்ரா சிகரட் பிடித்துக் கொண்டிருந்தான்.

வெளியே வந்த விக்கியை பார்த்து என்னடா விக்கி தூங்கப் போறேன் காலைல சன்ரைஸ கேப்ச்சர் பண்ணனும்னுட்டு போன இப்போ என்னடான்னா பில்லோவ பா(f)லோ பண்ணிட்டு வந்திருக்க...இளா கேட்க பில்லோ.. பாலோ..ஆஸம் ஆஸம் ராதா சிலாகிக்க மேகா சிரித்தாள். அவளை முறைத்த விக்கி அத ஏன் கேக்குறே..உள்ளே ஓடுற றொமான்ஸ் பில்ம் தாங்க முடியாம நான் வெளியே ஓடி வந்துட்டேன்..ஹாஹா..உனக்கு பொறாமை..ஆமா ஆமா பொறாமைதான் யார் இல்லைனு சொன்னது..இந்த ராஜாவோட ராணிக்குதான் ஒன்னுமே புரியமாட்டேங்குதே..அவன் மேகாவை பார்த்து சொல்ல அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்..இங்க மட்டும் என்ன வாழுதாம் அதே கதை உல்ட்டாவா நடக்குது...முகம் கை கால் கழுவி வந்து கொண்டிருந்த ருத்ராவை பார்த்து இளா முணுமுணுத்தாள்.

இளா பாத்து பாதேன் தான்ஸ் பண்ணுவோமா..மது இளாவின் நாடி பற்றி கெஞ்சலாய் கேட்டாள்..என்னது டான்ஸா..இந்நேரத்துலயா குனிந்து மதுவின் காதில் உங்கப்பன் கொல்லுவான்டி இந்நேரத்துக்கு ஆட்டம் போட்டா..அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலே ருத்ராவும் அருகில் வர விக்கி ஆமா ஏதாச்சும் இன்ட்ரஸ்ட்டா பண்ணலாமா ருத்ரா எனக் கேட்க பண்ணலாமே என்றான் அவன்.

கொஞ்ச நேரத்தில் ஆலமரத்தின் கீழ் நெருப்பு மூட்டி அனைவருமாய் சுற்றி வட்டமாக பொப்கார்ன் மிக்ஸர்..சாப்பாட்டு வகையறாக்களுடன் சரோஜா ராசு உட்பட அமர்ந்தனர். விக்கி கிட்டார் புல்லாங்குழல் சகிதம் வந்தான் ருத்ராவும் மியூசிக் இன்ஸ்ட்ரூமன்ட்லாம் செம்மையா வாசிப்பான்.. எழில் சொல்ல..அதெல்லாமே படிக்குற காலத்தோட நிறுத்தியாச்சு..சன்னமாய் முறுவலித்தவனிடம் இதை இன்னைக்கு நீங்க வாசிச்சே ஆகணும் விக்கி புல்லாங்குழலை நீட்ட சிரிப்புடன் வாங்கிக் கொண்டான் ருத்ரா.

மதுவின் ஒத்த சொல்லால..சாங்க் குத்து டான்ஸுடன் மரத்தடி ஷோ ஸ்டார்ட் ஆனது ருத்ராவும் விக்கியும் விசிலடிக்க எழில் சத்தமாய் ஓ...போட்டான்..மது ஆடி முடித்ததும் விக்கி இளாவின் ஷாலை வாங்கி கழுத்தில் போட்டுக் கொண்டு இரு கைகளையும் விரித்து மேகாவை நோக்கி..
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா..
காதலின் கேள்விக்கு கண்களின் பதிலென்ன மௌனமா..என அஜித்தை போல் பாவனை செய்து பாடி ஆட எல்லோரும் ஹோவெனச் சிரித்தனர்.
கோபமாய் முறைத்து முடியாமல் மேகாவும் சிரிக்க இன்னும் கூச்சல் அதிகமானது.

விக்கி அமர ருத்ராவின் முறை நிமிர்ந்து வானத்து நிலவை பார்த்தவன் சிரிப்புடன் கிட்டாரை கையில் இசைத்தபடி பாடத் தொடங்கினான்..

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்..

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்..

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே..
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே..

அவன் இயல்பாய் மரத்தில் சாய்ந்து லாவகமாய் கிட்டாரை இசைத்தபடி காற்றில் கேசம் கலைய அமர்ந்து பாடிய விதத்தில் அவனை என்னென்னவோ செய்ய வேண்டும் போல் இளாவுக்குத் தோன்றித் தொலைத்தது..மெள்ளடி... விழுங்கவா போறே ராதா கிசுகிசுத்தாள்.
எல்லோரும் கை தட்டவும்தான் மோன நிலை கலைய இளா நிமிர்ந்து அமர்ந்து கை தட்டினாள். பாடி முடித்ததும் இளாவை அவன் பார்க்க ரகசியமாய் இதழ் குவித்து முத்தமிட்டு கண்களை சுழற்றி..மயங்கிட்டேன் என்றாள்.
அவன் சிரிப்புடன் திரும்பிக் கொண்டான்.

பொப்கோர்னும் சுடச்சுட பரோட்டா சம்பலும் பரிமாறி உண்டதும் ராசுவும் சரோஜாவும் உன் கட்டும் சேலை மடிப்பில் நானும் கசங்கி போனேன்டீ..பாடலுக்கு ஜோடி போட்டு ஆட அவர்களின் கிராமிய நடன சாயலில் எல்லோருமே குதூகலமாய் கைதட்டி உற்சாகப் படுத்தினர்..அது முடிந்ததும் எழிலும் யசோவும் நீதானே நீதானே..என் நெஞ்சை தீண்டும் சத்தம்..பாடலை பார்வையாலேயே பருகியபடி டூயட் பாட எல்லோரும் ஒ...ஓ... என கோஷமிட்டனர்.

டூயட் முடிந்ததும் ராதாவும் மேகாவும் இணைந்து அங்கிருந்தவர்கள் போன்று மிமிக்ரி செய்து காட்ட வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தனர். அதிலும் இளா போன்று மது தலை குனிந்திருக்க ராதா ருத்ராவைப்போல வட் த ஹெல் ஆர் யூ டூயிங்..என திட்ட மேகா ரகுதேவனைப் போல் விடு ருத்ரா என சமாளிக்க என்று அவர்கள் நடித்த ஸீனில் கைதட்டலும் கூச்சலும் விசிலுமாய் களை கட்டியது. இளா அவர்களை முறைக்க ருத்ரா சிரிப்புடன் பார்த்திருந்தான்.

ஒரு வழியாய் எல்லாம் முடிந்த போது இறுதியாய் இளாவின் முறை வந்தது..அவள் கல்லூரி நாட்களில் அழகாகப் பாடுவாள் எல்லோருமே ஆர்வமாய் அவளை பார்த்திருந்தனர்..ருத்ராவிடம் என்ன பாடல் என ராதா சொல்ல அவன் புல்லாங்குழலை எடுத்து மென்மையாய் இசைத்து ஆரம்பிக்க அவள் பாடினாள்.

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும்
குழலு நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட
வரம் கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா..அவன் இசைப்பதையே பார்த்தபடி அவள் பாட அவனால் ஊத முடியாமல் சட்டென நிறுத்தி விட்டான்.

ருத்ராவை பார்த்த எல்லோரும் நமுட்டுச் சிரிப்புடன் இளா பக்கம் திரும்ப அவள் சலனமே இல்லாமல் அவனையே பார்த்தபடி பாடினாள்.. நிலா காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த
நேரந்தான்... இந்த நேரந்தான்...

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சான்...

இருளின் நிசப்தத்தில் அவள் குரல் கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது..
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம்
மாமனே... எம் மாமனே...காதலே முழுதாய் கலப்படமின்றி அவள் குரலில் குழைந்து கலந்திருந்தது.

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே..

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே..
ஏக்கமாய் அவள் முடிக்க ஐந்து நிமிடங்களுக்கு ஓயாத கரகோசமும் விசில் சத்தமும்..மேகா அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு சுபர்ப்..டீ..என்றாள். ஆனால் அவளோ ருத்ராவை பார்க்க என்னவென்று சொல்ல இயலாத ஏதோ ஒன்று அவன் முகத்தில் தெரிந்தது.

Seguir leyendo

También te gustarán

64.4K 3.1K 55
இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்...
106K 4.8K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
31.7K 1K 28
நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறு...