என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

322K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-26
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-23

7.1K 278 12
By hassyiniyaval

உன் விரல் நுனி தீண்டலில்
பசியோ தாகமோ எதுவோ
உன்னாலேயே என் விரதங்கள் விரகங்களாக...

அப்பா புரியாம பேசாதீங்க ஐ ஹாவ் நோ டைம் டு டீல் வித் இட்...பிஸ்னஸை யார் பார்க்கறது..ஏன் ருத்ரா நான் பார்த்துக்க மாட்டேனா நீ ஜார்ஜ் பண்ணும் வரை நான்தானே பாத்துகிட்டேன்..இப்போ உங்க ஹார்ட் வீக்கா இருக்குப்பா கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கனும் நீங்க ச்சூ..வன் வீக் ஆர் டென் டேய்ஸ் நான் ஆபீஸ் போறதுல ஒன்னும் ஆய்டாது. எழிலும் அப்பாகிட்டதானேடா விட்டுட்டு போறான். பாவம்டா இளா அவளுக்குன்னு நீ என்ன சந்தோஷத்தை குடுத்திருக்க..இன்னும் நீ ஒரு ஹஸ்பன்டா நடந்துக்கலை அத்தை மகனாவே இருக்க. கல்யாணம் பண்ணி சிக்ஸ் மந்த்..அவ உன் பொண்ணுக்கு நல்ல அம்மாவா இருக்கா உன் அப்பாக்கு நல்ல மருமகளா இருக்கா..ஆனா அவளை நீ பொண்டாட்டியா ஏத்துக்கலை.

நீ யோசிச்சு பார்த்ததுண்டா ருத்ரா அப்பா ஏன் இளமதியை கல்யாணம் பண்ணி வச்சாருன்னு..கொஞ்சம் இடைவெளி விட்டு ருத்ராவை பார்த்தார் அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்..அவன் தோளில் லேசாகத் தட்டி ஷீ இஸ் இன் லவ்..உன் மேல பைத்தியமா இருக்கா இதுக்கு மேல உன் பர்சனல் ஸ்பேஸை தாண்டி நான் வரலை..இந்த ட்ரிப் அவங்க ப்ரொபஷனலாதான் போறதா இருந்துது நான்தான் உன்னையும் இன்வால்வ் பண்ணி விட்டேன்.

இந்த பிஸ்னஸ் புழுதி நெரிசல் டென்ஷன்..இதையெல்லாம் தள்ளி வெச்சிட்டு இயற்கை காத்து பொண்டாட்டி பிள்ளைனு பத்து நாள் இருந்துட்டு வா..லைபை வேறொரு ஏங்கில்ல பார்..நான் சொல்றதை சொல்லிட்டேன் சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.

ரகுதேவன் நகர்ந்து விட சிட்வுட்டில் அமர்ந்தவாறு காற்றில் சிலு சிலுத்த மரக்கிளையை பார்த்திருந்தான்.

ஜீப் வெளியே நிற்க யசோ மதுவிற்கு ட்ரெஸ் மாட்டிக் கொண்டிருந்தாள்..யசோ நாம எங்கே போதோம்..அதுவாடா செல்லம் பக்கத்துல ஒரு கிராமத்திற்கு போறோம்..பாத்தி தாத்தாலாம் வதலையா..அவங்க வரலைடா..அப்போ யாதாதுலாம் போதோம் நான் நீ எழில் சித்தப்பா இளா அப்பா ராதா ஆன்டி மேகா ஆன்டி விக்கி அங்கிள் எல்லாருமே போறோம்டா.. ஐயா ஜாலி..கைதட்டி சிரித்தாள் குழந்தை.

சிவகாமி பெக்கிங்ஸ்ஸை சரி பார்த்துக் கொண்டிருக்க ராதாவும் மேகாவும் மனைவியின் பிரசவ நேரத்தால் வர முடியாமல் போன சங்கருக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். பாவம்டீ சங்கு அவனும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..ராதா கவலைப்பட ஆமாமா இந்த கடன்காரன் வந்ததுக்கு அவனே வந்திருக்கலாம்..பாரு..பெரிய காதல் மன்னன்னு நினைப்பு அவள் காட்டிய திக்கில் பார்த்த ராதா கேட்டோராமாய் நின்றிருந்த ஜீப்பில் சாய்ந்து கொண்டு போகிற வருகிற பெண்களுக்கு பில்ம் காட்டிக் கொண்டிருந்த விக்னேஷ்ஷை பார்த்து வாய் பொத்தி சிரித்தாள்.

அது சரி இவ என்னடீ பண்ட்ரா..
இது அவ கிரிக்கட் டீமாமாம் மேடம் டென் டேய்ஸ் விளையாட வர முடியாதுன்னு சோகமா விடை பெர்ராங்களாமாம்..இவளையெல்லாம் எப்டிடீ வீட்ல மெயின்டெய்ன் பண்ட்ராங்க.. மேகா தலையிலடித்துக் கொண்டாள்.

ஒரு வழியாய் எல்லோரும் தேவையானதை ஜீப்பில் ஏற்றி தயார் படுத்தினார்கள். மேகாவும் ராதாவும் இளாவின் கிரிக்கட் டீமை கலாய்க்க இளா காண்டாகி சண்டை போட்டவள் அப்படியே வாய் பிளந்து வாசலை பார்த்து நின்றாள்..
இவளின் ரியாக்ஷனில் அவர்கள் திரும்பி பார்க்கையில்
ப்ளாக் டீஷர்ட்..பு(f)ல் ஸ்லீவை சுருக்கி ஏற்றி க்ரே பாட்டம் அணிந்து வந்தவனின் அடர்த்தியான முடிக்ககற்றைகள் நெற்றியில் வீழ்ந்திருக்க அதை ஒரு கையால் ஒதுக்கியபடி மகள் ஏதோ கேட்க அவளோடு பேசிச் சிரித்தவாறே கேஷுவல் லுக்கில் ருத்ரா வந்து கொண்டிருந்தான்.

என்னடீ இளா மீசை அநியாயத்துக்கு செம்மையா இருக்கு..என்ற ராதாவின் கையில் நறுக்கெனக் கிள்ளினாள் இளமதி.
ஸ்ஸ்...ஏன்டி கிள்ளின பிசாசே..ஹாஹா..பின்னே நீ அவ புருஷனை ஸைட் அடிச்சா கிள்ளுவாள்தானே மேகா சிரிக்க ஏன் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்..இளா ரகசியமாய் பாட ஐயே நீயே வச்சுக்கம்மா உன் புர்ர்ர்ருஷனை..பளிப்புக் காட்டினாள் ராதா.

கிழக்கு கடற்கரை சாலை தாண்டி பிரதான வீதியின் ஐந்தாம் திருப்பத்தில் மூன்று மணி நேர பயணத்தில் இவர்கள் செல்லப் போகும் தாமரைக்கேணி கிராமம் அமைந்துள்ளது. சகல ஏற்பாடுகளுடனும் அர்களின் டீம்
புறப்பபடத் தயாரானது.

ஏன்டி அங்கே பசங்க வேட்டி சட்டை மீசைனு நம்ம பருத்திவீரன் கார்த்தி கணக்கா இருப்பானுகளாடி...ஏன்மா இருந்தா என்ன பண்றதா இருக்கே வேறென்ன நாம முத்தழகா மாறலாம்னுதான்..என்ன ராதா மேடம் லவ் மூட்ல இருக்கீங்க போல..பின்னே உனக்கு உன் புருஷன் இருக்கான் அவளுக்கு விக்கி நான்தானே பா.......வம்...கொய்யால அவன் கூட என்னை சேர்த்து வெச்சி பேசுன..மேகா ஆவேசமாக இளா ஊடே சென்று விடுடி விடுடி அவளுக்கு பருத்திவீரன்னா உனக்கொரு மெர்சல் வெற்றி மாறன் கிடைக்காமலா போய்டுவான் அமைதிப் படுத்தினாள்.

எல்லாமே ஓகேவா கய்ஸ்..தாமரைக்கேணிக்கு போய் சேர த்ரீ என்ட் ஹாப்(f) என் அவராகும்னு நினைக்கறேன்..ஜீப்ல நான் யசோ இளா மது ராதா மேகா போலாம். விக்கியோட பைக்கையும் சேப்டிக்குனு கொண்டுவர்ரதனால விக்கி கூட ருத்ராவும் பைக்லயே வர்ரதா சொன்னான்..எழில் சொல்ல நாசமாப்போச்சு..கூட வர்ரானேனு சந்தோசப்பட்டா பாவிப்பய பைக்ல போறான்..பாக்கறேன்டா எவ்ளோ நாளைக்கு எங்கிடேருந்து எஸ்கேப் ஆகுறேன்னு..இளா முணுமுணுக்க என்னடீ..என்று கேட்ட ராதாவிடம் ஒன்னுமில்லையே..பாட்டு பாடினேன்..ஹீஹீ..என்று சமாளித்தாள்.

பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்த ருத்ரா குனிந்து பைக்கின் கண்ணாடியில் தலைமுடியை கலைத்துவிட்டுக் கொண்டிருக்க பின்னால் ஜீப்பில் இளா தெரிந்தாள்.
கண்ணாடி வழியே இவனை பார்த்து செம்மையாய் இருக்க மாம்ஸ்..உதடசைத்து இதழ் குவித்து முத்தமொன்றை பறக்க விட்டவளை கண்ணாடியிலேயே அவனும் முறைத்தான். சோ..ச்வீட்..மீண்டுமொரு முத்தம் பறக்க அவன் நிமிர்ந்து பின்னால் திரும்பி ஜீப்பை பார்த்து முறைத்தான். சட்டென அவள் கண்ணடிக்க அவனுக்கு சிரிப்பு வர..முன்னால் திரும்பி அடக்கிக் கொண்டான். இவள் அடங்கவே மாட்டாள்..அவன் மனதில் எண்ணியவாறே பைக்கை முறுக்க விக்கி பின்னால் ஏறிக் கொண்டான்..முன்னே பைக் செல்ல சிவகாமிக்கும் ரகுதேவனுக்கும் கையசைத்தவாறே இவர்களின் ஜீப் பைக்கை தொடர்ந்தது.

Continue Reading

You'll Also Like

16.6K 1K 42
தான் காதலித்த காதலன் தன் அக்காவிற்கு மாப்பிள்ளையானால்....
235K 9K 42
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்ல...
35K 740 72
#அருணோதயம் 12/04/23 வெளியீடுகளில் ஒன்று என் ஆசான் அருணன் ஐயாவுக்கும், அருணோதயத்துக்கும் , இறைவனுக்கும் நன்றிகள்🙏🏻
117K 3.4K 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் ப...