என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

319K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-26
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-09

6.5K 234 7
By hassyiniyaval

அதோ..என்
கனவுகளின் அந்தபுரம்
அடுத்தவர் நுழைய அனுமதியற்ற
விழிகளின் தற்காலிக
தரிசனங்களை ஸ்பரிசிக்க
தயாராய் நான்..

இது சிவகுமார் மை கோ வர்க்கர் கல்யாணத்துக்கு வெளியூர் போனதால வர முடிலையாம்..இல்லை யசோதா சார்க்கு என்னை ஏற்கனவே தெரியும்..மேட் பார் ஈச் அதர் ஒரு சோகமான பார்வையுடன் அவன் விலக அவள் திரும்பி எழிலை பார்த்தாள். அவன் முகம் கடுகடுவென்றிருந்தது. இவனை யாரு வர சொல்லி அழுதா பாரு என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்த்துட்டு போறான் டாம்ன். ஆமாமா பிஜிஎம் ல எங்கிருந்தாலும் வாழ்க ஸாங்கூட கேட்டிச்சுல்ல அத்தான்.. என்றவாறு இளா வர இருவர் முகங்களிலும் புன்னகை அரும்பியது.

ஹேய் இளா ஸாரில அசத்துற இப்போதான் ஒரு பொண்ணு எபக்டே வர்ரது..ஹலோ மாப்ள உங்க வைப்(f) ஐ மட்டும் கவனிங்க எங்களை பத்தி நாங்க கமண்ட் கேக்கலை. என்ன நாத்தனாரே இப்டி சொல்லிட்டீங்க.. அத்தான் எங்கிட்ட வச்சுக்காதீங்க..வச்சுக்கிட்டா..என்ன பண்ணுவ எழில் வம்பிழுத்தான்.யசோ சுவாரஸ்யமாய் ஒரு சிரிப்புடன் கவனித்தாள்.

என்னக்கா நீ உன் வீட்டுக்காரரை என்னனு கேட்க மாட்டியா...அவள் யசோவிடம் நியாயம் பேச அவள் எழிலிடம் என்ன என கேட்டு வைத்தாள்.ஹாஹா..அவன் சிரிக்க..இருங்க உங்களை..எங்களை..என் புருஷன்கிட்ட கம்ப்ளெய்ன்ட் பண்ண போறேன்..கொஞ்சம் தூரமாய் நின்றிருந்த ருத்ராவை எழில் அழைக்க அருகே வந்தான் அவன்.

ஐயோ அத்தான் அவரை ஏன் கூப்டுறீங்க..இளாவுக்கு வெட்கமாகிப் போய்விட்டது. இரும்மா உங்க அவர்கிட்டயே நியாயம் கேட்போம். ஐயோ..ப்ளீஸ்..அக்கா பாருக்கா இவரை. அதற்குள் ருத்ரா வந்துவிட
உன் வொய்ப்(f) உங்கிட்ட என்னமோ சொல்லணும்னு சொன்னா..அவன் இழுக்க ருத்ரா அவள் பக்கம் திரும்பி புருவங்களை உயர்த்தி என்ன..என்பது போல் பார்த்தான். ஒண்ணுமில்லை என முணுமுணுத்தவள் நைஸாக நழுவ எழிலின் சிரிப்பு அவளை தொடர்ந்தது.

வீட்டுக்கு வந்த கூட்டம் கலைந்து பரபரப்பு அடங்கி உண்டு முடித்து அவரவர் அறைக்கு வர இரவு பதினொரு மணியை கடந்திருந்தது.
எல்லோரிடமும் விடைபெற்று அம்மாவையும் இளாவையும் அணைத்துக் கொண்டு அழுது மதுவின் கன்னத்தில் முத்தமிட்டு மாமாவின் அன்பான ஆசியுடனும் ருத்ராவிடம் கனிவான தலையசைவுடனும் விடைபெற்று யசோ ஒரு வழியாக எழிலின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

எழிலின் அம்மா சுந்தரி தான் இந்த திருமணத்தால் ரொம்பவும் நொந்து போயிருந்தாள்.பெரிய பணக்காரப் பெண்ணை மருமகளாக கற்பனை செய்து வைத்திருந்தவள் எல்லாமே பொய்த்துப் போய் ஆரம்பத்தில் தான் பயந்தது போலவே யசோதா தன் வீட்டு மருமகளானது ஜீரணிக்க முடியாமல் இருந்தது. சூழ்நிலைகள் அவரை எதுவும் செய்ய முடியாமல் தடுத்ததை எண்ணி கடவுளை நொந்து கொண்டிருந்தார்.

ஆர் யூ ஓகே..எல்லாமே கம்ப(f)ர்டபிளாய் இருக்கா..சுவற்றில் மாற்றப்பட்டிருந்த தன் படங்களை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டு நின்ற யசோவிடம் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தான் எழில். வரவேற்பாய் முறுவலித்தவள் ரூமை நல்லா மெயின்டெயின் பண்ட்ர நைஸ்..என்றாள்.

ஹாஹா..போம்மா நீ வேற இதை க்ளீன் பண்ட்ரதுக்குள்ள இந்த வீட்டு வேலைக்காரம்மாக்கு முளி பிதுங்கி போய்டுச்சுனு அம்மா புலம்பிட்டிருந்தா..அடப்பாவி அப்போ நீ இன்னும் அதே அழுக்கு டப்பாதானா..அப்கோஸ்யா..இங்க பாருங்க மை டியர் வொய்ப்(f)..அவள் தோள் பற்றி தன் புறம் திருப்பியவன் கலைஞ்சிருந்தாதான் அது ரூம் இல்லைனா அது மியூசியம்..என்று சிரிக்க பார்த்தாச்சு பார்த்தாச்சு இந்த டயலாக்கை பார்த்திபன் கனவு படத்துலயே பார்த்தாச்சு..யசோ நக்கல் பண்ண அடப்பாவிங்களா அதையும் படத்துல போட்டாய்ங்களா..இதுக்குதான் கருத்தெழுதி ரோட்ல கசக்கி போடக்கூடாதுன்னு சொல்றது..எழில் ஏமாந்துட்டியே..அவன் ஏகத்துக்கும் கவலைப்பட ஐயே..ரொம்பத்தான்..அவன் தோளில் செல்லமாய் இடித்தாள் அவள்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று கொண்டு சேலையை மாற்றிக் கொண்டிருந்தாள் இளா.ஊப்..இவளுங்க ரெண்டு பேருமே சேர்ந்து என்னை பாடா படுத்தி வெச்சிருக்காளுங்க..ஆத்தாடி எத்தனை பின் டீ குத்தி வச்சிருக்கீங்க. அரை மணி நேரமாய் கஷ்டப்பட்டு முந்தானை பகுதியை அகற்றிக் கொண்டிருந்தாள் அவள்.
மதி..கீழே அத்தை...என்றவாறு அவன் கதவை திறந்து கொண்டு உள்ளே வர..கொஞ்ச நேரம் திகைத்து நின்ற இருவரும் அதிர்ந்து சடாரென திரும்பி நின்று கொண்டனர். முந்தானை சேலையை அள்ளி தன்னை போர்த்திக் கொண்டவள்..எ..என்ன்..என்ன?..
என்றாள் தடுமாற்றமாய் சா..சாரி..அத்தை வர சொல்லி உன்னை..என்கிட்ட..ருத்ராவிற்க்கும் பேச்சு வரவில்லை.

சிவகாமி அழைத்திருக்கிறார் என்பது புரிய வேகமாய் அறையை விட்டு ஓட்டமும் நடையுமாய் நடந்தாள் முகம் முழுக்க சிவப்பாய் உடல் முழுதும் வெடவெடப்பாய் உணர்ந்தாள்.

ஹேய் இந்த போட்டோல நீ செம்மயாருக்க...உன் பக்கத்துல நான்தான் டல்லாய் தெரியறேன்..அட இந்த போட்டோல ஐயா கலக்குறேன்ல..போனில் எடுத்த திருமணப் புகைப்படங்களை லாப்பிற்கு மாற்றி கட்டிலில் சாய்ந்தமர்ந்தவாறு சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டிருந்தான் எழில். அவன் அருகில் அமர்ந்து சிரிப்பும் பேச்சுமாய் லாப்பில் மூழ்கியிருப்பவனை இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அந்த நிமிஷம் அவள் என்ன மாதிரி உணர்கிறாள் என்பதை அவளாலேயே கணிக்கமுடியவில்லை. மனசுக்கு புடிச்சவனோட பொண்டாட்டியாய் அவன் பக்கத்துலேயே அவன் அறையிலேயே..என்னன்னு சொல்றது இதை..நேத்து வரைக்கும் கனவுல மட்டுமே நடந்துட்டிருந்தது இன்னிக்கி நிஜம்ம்ம்மா...அவன் பக்கத்துல..அவனை தொட்டுப் பார்த்து உண்மையிலேயே கனவில்லை நிஜம்தான்னு கத்தனும் போல ஒருஉந்துதல்..எல்லாமே புதுசாருக்கு.. பக்கத்துல இருக்கறான் கையை புடிச்சுக்கறான்..பேசறான் சிரிக்கறான்..அதுவும் எனக்கு மட்டுமே சொந்தமான என் புருஷன்..மை ஓன் ப்ராபர்ட்டி..

சினிமால வர்ர மாதிரி பாடனும் ஆடனும்னு தோணுது..

"ஏனோ ஏனோ என்னை
பார்க்க செய்தாய் உன்னை..
நான் உன்னை காணத்தானா
யுகம் தோறும் காத்து கிடந்தேனா..
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக..."

அந்த பாடலில் கதாநாயகி ஆடுவது போலவே எழுந்தாடத் துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கி அந்த வரியை ஹம்.. செய்தாள்.திரும்பி அவளை பார்த்தவன் சிரிப்புடன் அதற்கடுத்த வரியை ஹம்..செய்தான்.

Continue Reading

You'll Also Like

2.8K 357 10
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
37.5K 1.9K 44
Love and love only. A refreshing read, guaranteed.
94.6K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
142K 6.8K 48
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)