என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

319K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-26
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-06

6.5K 247 23
By hassyiniyaval

உன் நினைவுகளில் அமிழ்த்தியெடுத்த
என் மனசுத் துளிகளின்
ஒழுகல் ஒவ்வொன்றிலும்
புதிதாய் ஒரு காதலின் பிரசவம்...

கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தவனை கண்டதும் இந்த தோரணைக்கொன்னும் குறைச்சல் இல்லை..என எண்ணியவாறே எதுவுமே பேசாது பக்கத்தில் போய் நின்றாள். ஆனால் அவனோ கண்டுகொள்ளாது பேஸ்புக்கில் ஏதோ கமன்ட் செய்து கொண்டிருந்தான். ம்ஹ்ஹ்ம்ம்..தொண்டையைச் செருமினாள் நிமிர்ந்து அமர்ந்தவன் போனை வைத்துவிட்டு மரியாதைலாம் மனசுல இருந்தா போதும் உட்காரு..என்றான்.கொழுப்பை பாரு..பல்லைக் கடித்தாள். அவள் பேசாமல் அமரவும் அப்றம் எவ்ளோ நாளைக்கு மேடம் இப்டியே இருக்க போறீங்க எத்தனை வாட்டி சாரி சொல்றது..இப்ப எதுக்கு உம்முன்னு அலையுற.

நான் எப்டி அலைஞ்சாதான் இவனுக்கென்ன பேசினா ஏன் வளவளன்னு பேசி உயிரை வாங்குரேன்னு திட்டுவான்..இப்போ பேசலைனாலும் திட்றான்..பேச முடியாது போடா..வெளியே பேசாது அமைதி காத்த போதும் மனதுக்குள் புலம்பிக் கொண்டுதானிருந்தாள்..அப்போ பேச மாட்ட..பாக்குறேன் எவ்ளோ நாளைக்குன்னு..எழில் எங்கே..தெரியாது என்றாள் கறாராய். ஹேய் நகரு நகரு கீழே முத்து சிதறுது பார் உன் வாயிலருந்து..அவன் படபடப்பாய் சொல்லவும் துள்ளி விலகியவள் அவனின் நக்கல் உணர்ந்து முறைத்தாள். சரீ நான் கெளம்பறேன்..நமுட்டுச் சிரிப்புடன் அவன் வெளியேற இப்போ எலி எதுக்கு எக்கனாமிக் கிளாஸ் போகுதுன்னு தெரிலையே..இவன் எதுக்கு பேசு பேசுனு காலேஜ் பையனாட்டம் அலையறான்..யோசனையுடன் தன் கேபின் நோக்கி நடந்தாள்.

ஆளரவமற்ற அந்த குறுக்கு சந்தில் யசோவின் ஸ்கூட்டி சென்று கொண்டிருந்தது. திரும்ப திரும்ப அவனின் குரலே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது..ஹேய் அவளை எப்டி மீட் பன்றது எனக்கு ஒரு மாதிரி இருக்கு..நீயும் வாயேன் ப்ளீஸ்..கெஞ்சிய எழிலிடம் என்னாது உனக்கொரு மாதிரி இருக்கா..மவனே கொல்லப்போறேன் உன்னை டீனேஜ் பையன் மாதிரி வெட்கப்படுற ஏழு கழுதை வயசாறது...கஷ்டப்பட்டு இயல்புக் குரலில் பேசினாள். அவனும் சந்தியாவும் நாளை முதல் முதலாக மீட் பண்ணப் போகிறார்களாம் அதற்கு துணையாக இவளை வருமாறு கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.போனில் இரு முறை பேசிய போதும் இருவருமே சரியாக பேசிக் கொள்ளவில்லையாம். தயக்கமாய் இருக்கவே யசோவை அழைத்தான்.

ஆனால் அவள் எப்படி இவர்கள் இருவரும் காதலாய் பார்ப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியும்...நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது. நாளை காலை விவேகா பார்க்கில் சந்திக்கப் போவதாக சொன்னான்.ஒருவரை ஒருவர் காதலாய்ய் பார்ப்பார்களோ..என்னென்ன பேசிக் கொள்வார்களோ...யசோதாவுக்கு நினைவுகளெல்லாம் எழிலின் திருமணத்தோடு சுருங்கிப் போனது.

இந்த வன் சைட் லவ் இருக்குதே உலகத்துலயே சொர்க்கத்தயும் நரகத்தையும் காமிச்சிடும். செத்துட்டே வாழ்றதும் வாழ்ந்துட்டே சாகுறதும்...ஹார்ட் மெல்டிங் பீலிங்..கென்னாட் எக்ஸ்ப்ரஸ் தட் மச் ஆப் பீலிங்ஸ் இன் வேர்ட்ஸ்.

எழில்..எழில்..எழீல்ல்...ஏன்டா என்னை புரியலியா உனக்கு..எப்டி உன்னால இன்னொருத்திய நினைக்க முடிஞ்சிது..கண்கள் இருட்டி  பார்வையிலிருந்து பாதை நழுவியது.

இவள் கூட வந்தாதான் என்னவாம் அவள் இல்லாம நான் எதுனாச்சும் பண்ணிருக்கேனா...பட் உன்கிட்டே இப்போ நிறைய சேஞ்சஸ் தெரியுது. ஏன் விலகிப் போறே என்கிட்டே ஏதோ சொல்ல வர்ர பட் சொல்லாமலே போயிட்ர..என்கிட்ட க்ளோசா நெருக்கமா எல்லாமே ஷேர் பண்ணிக்கற கண்ணம்மாவை நான் மிஸ் பண்றேன். யசோவும் தானுமாய் அவளின் பேர்த்டே பார்ட்டியில் எடுத்த செல்பியிடம் பேசிக் கொண்டிருந்தான் எழில்.

ஐயோ பதறாதேம்மா அக்கா வந்துடுவா ப்ரெண்ட்ஸ் யாரையாச்சும் பார்க்க போயிருப்பா..போனாலும் சொல்லிட்டு போவாளேடி மணி எட்டாச்சு போன் வேறே சுவிட்ச் ஆப்(f)னு வர்ரது..சிவகாமி இளாவிடம் புலம்ப இந்த ருத்ரா பயல் வேற போனை ஆன்சர் பண்ணமாட்டேன்றான்..ரகுதேவன் புலம்ப நான் ட்ரை பண்றேன் மாமா அவளும் இரண்டு முறை அழைத்த பின்னே எடுத்தவன் என்ன மேடத்துக்கு பேச தோணிடுச்சா என்றான். அத்தான் அக்காவை காணோம் அங்கே இருக்காளா என பதட்டமாய் கேட்க இல்லையே..என்றவன் காரை நோக்கி விரைந்தான்.

யாரும் தூங்காமலேயே அந்த இரவு முடிந்து காலை விடிந்திருந்தது. யசோ இன்னும் கிடைக்கவில்லை. அழுத அயர்ச்சியில் சிவகாமி கண்ணயர்ந்திருக்க இளா யசோவின் நண்பிகளுக்கு முயன்று கொண்டிருந்தாள். சிவந்த கண்கள் அழுகையையும் தூக்கமின்மையையும் காட்டின.மடியில் மது தூங்கிக் கொண்டிருந்தாள்.

நீ எதுக்குப்பா இவ்ளோ எமோஷன் ஆகற கிடைச்சிடுவா கவலை படாதே..எங்கு தேடியும் யசோ கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தை தாங்கமுடியாமல்  இறுகிப்போய் நரம்புகள் தெறித்துவிடுமோ என தோன்றுமளவு அமர்ந்திருந்த எழிலை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தார் ரகுதேவன்.

எங்கு தேடியும் அவள் கிடைக்கலை என்றதும் பீச்சில் அவள் பின்னால் வந்தவனின் நினைவு வர காதல் கீதல் என கடத்தி வைத்திருப்பானோ என்ற பயத்தில் அவனை பிடித்து அடித்து களேபரமாகி...சார் என் நோக்கம் அவளை மேரேஜ் பண்ணி என்னோட வொய்பா(f) வாழ வைக்கறதுதான்..டோன்ட் ட்ரீட் மீ லைக் எ தேர்ட் க்ரேட் ரவ்டி..அவன் கடுப்பாய் மொழிய கோபமாய் வந்து காரில் அமர்ந்ததிலிருந்து அவன் இப்படித்தான் இருக்கிறான்.

அவன் எப்படி அப்படி சொல்லலாம்
மேரேஜ் பண்ணி அவனோட வொய்பா(f) வாழ வைக்க போரானாம்..ராஸ்கல்.. ஸ்கௌண்ட்ரல்..என்கிட்டயே சொல்றான் என்ன தைரியம்.
அவளை என்னை விட்டு போக விடப் போறதில்லை.. கண்ணம்மா எங்கேடி போன என்னை விட்டுட்டு...ருத்ராவின் அழைப்பு நினைவை கலைக்க ஹலோ என்றான்.

யசோ கிடைச்சாச்சு பேஸ் ஹாஸ்பிடல்ல இருக்கோம் பயப்பட ஒன்னுமில்லை எல்லோரையும் கூப்டுட்டு வா. போனை வைத்துவிட்டான்.
ஹாஸ்பிடல் என்றதும் எல்லோரும் கலவரத்துடன் ஏறிக்கொள்ள கார் பறந்தது.

Continue Reading

You'll Also Like

95.2K 4.2K 25
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
21.3K 1.8K 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசி...
174K 6.7K 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்ன...