என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

319K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-21
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-26
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-03

9.1K 266 20
By hassyiniyaval

காசும் கவிஞனும்
வக்கீலும் உண்மையும்
தேர்தலும் வாக்குறுதியும் போல
என் காதலும் நீயும்...

சிட்அவுட்டின் ஈசிச்சேரில் சாய்வாய் அமர்ந்து கால்களை மேசை மீது போட்டிருந்தாள் யசோதா.கையில் சுஜாதாவின் "நில்லுங்கள் ராஜாவே"கண்களில் சுவாரஸ்யம்.அப்படியே அவளை வர்ணித்து விடலாம்.சற்றே குறைவான நிறம் அளவான உடல்வாகு அழகாய் இருந்தாள்.பார்வையில் தீட்சண்யம்..இதழ்களில் பிடிவாதம் கைதேர்ந்த ஓவியனின் மங்கலான அழகிய ஓவியமாய் இருந்தாள்.

யக்கோவ் என்னா பாடி ஷேப் உனக்கு என்னைப்பார் என உதடு பிதுக்கி தன் சதைப்பிடிப்பான இடையினை கவலையாகப் பார்க்கும் தங்கை என்றால் கொள்ளைப் பிரியம்.மாமா மீது மரியாதை அம்மாவில் நிறைய அன்பு ருத்ராதான் தோழமையான வெல்விஷர்..மது அவளின் ஸ்வீட் செல்லம் ஆனால் எல்லோரையும் விட அவனென்றால் உயிர்.கதையில் கணேஷின் தொடர்பற்ற கேள்விகளுக்கு வசந்த் பதிலளித்துக் கொண்டிருக்கையில் ஏ ஆரின் தள்ளிப் போகாதே இசைத்தது அவள் செல்லில்.

அவளின் உயிர்தான் அழைத்திருந்தான்..சொல்லு எழில்.கண்ணம்மா ஈவ்னிங் நீ ப்(f)ரீயா..பீச் வர்ரீயா சார் பீச் கூப்டா மேட்டர் சீரியஸாச்சே..என்ன சொல்லு..அது மேரேஜ் டேட் பி(f)க்ஸ் பண்ணியாச்சு சந்தியாதான்னு கன்பார்ம் ஆயிடிச்சி.மனசெல்லாம் கசந்து கண்கள் கலங்கிப் போயின அவளுக்கு.பேச்சே வரவில்லை.
ஹேய்.... ஆர் யூ தேர்..கனைத்து செருமியவள் கங்க்ராட்ஸ்டா என்றாள் முயன்று வருவித்த மகிழ்ச்சிக் குரலில்.ருத்ரா அப்பா கூட இங்கேதான் இருக்கார்.இப்போதான் பேசிக்கிட்டாங்க உனக்குதான் தெரியுமே உன்கிட்ட உடனே ஷேர் பண்ணாம இருக்க முடியாதுன்னு.. ஈவ்னிங் பைவ் தர்ட்டிக்கு பீச் வந்துடு வச்சிர்ரன் கண்ணம்மா.

க..ண்..ண..ம்..மா வெறுப்பாய் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். அவன் அவளை அப்படி அழைக்க ஆரம்பித்த நிகழ்வை நினைத்துக் கொண்டாள். எழிலுக்கு அப்போது பதினாறு அவளுக்கு பதினாலு. அவனுக்கும் அவளுக்கும் சிறுவயதிலிருந்து அப்படி ஒரு பிணைப்பு.அவர்கள் பேசாத பகிராத விஷயங்களே இல்லை..அவனுக்கு பாரதியார் கவிதைகள் என்றால் கொள்ளை பிரியம்.

இருவரும் தனிமையில் கடற்கரையிலிருக்க அவன் கவிதை சொல்ல அவள் கேட்பாள்.எப்படியொரு கவிஞன் அந்த பாரதி.

ஒரு நாள் எழில் கவிதை சொல்ல அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினை யொத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும் பத்துமாற்றுப் பொன்னொத்த நின்
மேனியும் இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே

நீயென தின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
என்றன் வாயினி
லேயமு தூறுதே கண்ணம்மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே...

உயிர்த்தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே! "

எழிலின் ஆழ்ந்த குரலில் அவன் சொல்லச் சொல்ல அவள் அவனின் கண்ணம்மாவாகவே மாறிப் போனாள்.

அவளுள் என்னவோ செய்தது..எழில் ஐ லைக் திஸ் கண்ணம்மா வெரி மச்..நீ என்னை அப்டியே கூப்டறியா..ப்ளீஸ்..தன் கரம் பிடித்து அவள் கெஞ்சலாய் கேட்க சிரிப்புடன் ஒத்துக் கொண்டான்.அன்றிலிருந்து யசோதா அவனுக்கு மட்டும் கண்ணம்மாவாக ஆகிப் போனாள்.

யசோதாவின் மனதில் எழில் மீதான ஆசை வளர அவளின் பாட்டியே காரணம் சிறு வயதிலிருந்தே எழில் கொட்டினான் என அவள் கம்ப்ளெயின்ட் செய்தால் கட்டிக்கப் போறவன்தானேடி கொட்டினான்..என்பார் அவர்.சொல்லச் சொல்ல அவள் மனதில் ஆசை வளர்ந்து வேர்விட ஆரம்பித்தது.

எல்லாவற்றையுமே சொல்ல முடிந்த யசோவால் அவளின் காதலை சொல்ல முடியலை. அப்பாவை இழந்து அடைக்கலமாய் அத்தை வீட்டில் வாழ என்னதான் அவர்கள் சொத்தும் இருந்தாலும் மாமாவுக்கு ருத்ராவுக்கு நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் எழிலின் அம்மா இதையே சொல்லிக் காட்டி இவர்களை ஏளனமாகப் பார்ப்பார் அவனின் அப்பா மாமாவாய் இருந்தும் மனைவியை எதிர்க்கும் துணிவற்றவர். ஒரு நாள் யசோவிடமே என் மகன் பின்னால காசுக்கு ஆசப்பட்டு அலையுறியா என வக்கிரமாய் கேட்க அன்றோடு அவள் தன் காதலை அடி மனசில் புதைத்து விட்டாள்.

அந்த மாலை நேரம் காற்று குளுகுளுவென வீச படகின் அருகில் கடல் மண்ணிணை கைகளில் அள்ளி மீண்டும் மண்ணில் தூவிக் கொண்டிருந்தாள் யசோ.சாரீ..கண்ணம்மா லேட் பண்ணிட்டேன் அருகில் அமர்ந்தான்.இட்ஸ் ஓகே..அப்றம் மாப்ள சார்க்கு இப்பவே கல்யாண களை வந்திருச்சு போலயே. ஹாஹா நிஜமாவா..ஆமா ஆமா..போன் நம்பர்லாம் வாங்கியாச்சா..அதெல்லாம் ஆல்ரெடி இருக்கு பட் இன்னும் பேசிக்கலை.ஏனோ..தோணல.

என்ன பேசுவதென அறியாமல் பத்து நிமிடங்கள் கரைய சந்தியா நல்ல கலர்..உங்களை மாதிரி வசதி நல்ல பொருத்தம் உனக்கு..என்ன பேச்சு இது கண்ணம்மா அழகும் பணமுமா வாழ்க்கை..அவன் கோபமானான்.அதுவும்தானே..ஹேய் அங்கே ஒருத்தன் உன்னையே பார்க்கறான்.திரும்பியவள் ஓ இவனா என்றாள் அசுவாரஸ்யமாய். யாரிவன்??? கோ வர்க்கர் என் மேல இன்ட்ரஸ்ட் இப்டிதான் ரோட் சைட் ரோமியோ மாதிரி பார்த்து வைப்பான். நீ கண்டுக்காத.

அவள் கைகளில் மணலைத் தட்டிவிட்டு எழுந்தாள்.இருட்டிடடுச்சு வா கிளம்பலாம்..அவள் பின்னே நடந்த போதும் எழில் திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்தான். ஏனோ அவனை கண்டு கொள்ளாது எழிலால் இருக்க முடியவில்லை.ஆத்திரத்தில் கை முஷ்டி இறுகியது. ஹவ் டேர் அவன் எப்படி அவளை பார்க்கலாம்.கோபத்தால் அவன் முகமும் அந்தி வானமாய் சிவந்தது.

நெஞ்சம் மறப்பதில்லை ல என்ன சினிமா விமர்சிக்கலாம் ஐடியா கொடேன் மேகா..ஏய் என் வேலையை டிஸ்டர்ப் பண்ணாதடி..அவள் வாசகர் மெயிலை தரம் பிரித்துக் கொண்டிருந்தாள்..பெரும் வெற்றி பெற்ற படங்களை தெரிவு செய்து விமர்சிக்கும் பகுதி அது. காட் இட்..கன்னத்தில் முத்தமிட்டால் நல்லாருக்குமில்ல. இளா மீண்டும் நச்சரிக்க..அய்யூய்யயய்யூ ஊர்ல அவளவள் ஆயிரம் ப்ரெண்ட் வச்சிட்டு சந்தோஷமா இருக்காளுங்க இவ ஒருத்திய வெச்சிட்டு நான் பட்ர அவஸ்தை இருக்கே..ஏன்டி ஐடியா கேட்டது ஒரு குத்தமா.. ராதா நீயே சொல்லுடீ..அம்மா பரதேவதைங்களா என்னை விட்டுடுங்கடி..ராதா தலைமேல் கைவைத்து கும்பிட ஓங்குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல..சிவாஜி ஸ்டைலில் இளா பாட அங்கே கொல்லென ஒரு சிரிப்பு வெடித்தது.

ஹேய் மாப்ளை வரார் சங்கர் கூவிக் கொண்டு ஓடி வந்தான். பின்னால் எழில் ஆபீஸ் அறைக்குள் நுழைய எல்லோருமாய் சேர்ந்து...

வாராய் என் தோழா வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே
காணும் திருநாளைக் காண
வாராயோ...?

எனப் பாட எழில் புன்னகைத்தான்.ஹலோ சார் சும்மா சிரிச்சா ஆச்சா எங்கே ட்ரீட்..தரலாம் தரலாம்..என்ன சார் இப்டி அசால்ட்டா சொல்ட்டீங்க...இளா அடி வாங்க போறே.. ஹாஹா என சிரித்தவள் திடீரென கோபமாய் எழிலை முறைக்க அவன் புரியாமல் பார்த்தான். அடப் பாவி மனுஷா உனக்கென்னய்யா நான் பண்ணேன் அந்த மீசைகிட்ட என்னை மாட்டி விட்டீயே..நல்லாருப்பியா நீ. ஹாஹாஹா.. இப்போது சிரிப்பது எழில் முறையானது. வீட்ல செம்ம ரெஸ்லிங்க் போல..பின்ன..உங்கூட்டடி எங்கூட்டடி இல்ல கொக்கமக்க அடீ..ஹாஹா அவன் மீண்டும் சிரித்தான்.

......மணிரத்னம் படம் என்றதும் மழைச் சாரலில் நனைந்து கொண்டே ஐஸ்கிறீம் தின்னுவது போன்ற காதல் அனுபவத்தை எதிர்பார்த்து வந்தவர்களுக்கோ கதிரை நுனியில் அமர்ந்து மகளும் தாயும் சந்தித்து கொள்வார்களா என நெஞ்சம் பதைக்க நகத்தை கடிக்க வைக்கும் திக் திக் நிறைந்த நிதர்சனமான திரைக்காவியம் கண்களுக்கு விருந்தாய்.

மொத்தத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் எல்லோரையும் வென்று விட்டாள்.

ஒரு பக்க விமர்சனத்தை முடித்து விட்டு கைகளை உயர்த்தி நெட்டி முறித்தவள் நேரத்தை பார்த்த்தாள்.ஓ ஷெட் போ(f)ர் தர்ட்டி ஹான்ட் பாக்கை எடுத்துக் கொண்டாள் ஸ்கூட்டி நோக்கி ஓடியபடியே ராது கரெக்ஷன் பாத்துடு மேட்ச்கு டைம் ஆச்சு..வண்டி வேகமெடுத்தது.

டேய் அதான் அக்கா ஸாரி கேக்குறேனே மன்னிச்சு ஆட்டத்துல சேத்துக்கோங்கடா ப்ளீஸ்..அந்த வாண்டுகளிடம கெஞ்சிக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் காலி நிலம்தான் அவர்கள் கிரவுண்ட். எல்லோருமே பக்கத்து வீட்டு பத்து ஒன்பதாம் வகுப்பு கற்பவர்கள். பாவம்டா இளா சேர்த்துக்கலாம்டா..ஒருவன் வக்காலத்து வாங்க அடுத்தவனோ இளாவை யோசனையாய் பார்த்து இனி லேட் பண்ணா உன்ன டீம்லருந்து தூக்கிடுவோம்..ல்லல்ல அக்கா இனி கரெக்டா வர்ரேன்..ஹ்ம் இந்தா பெட் இளாவே பெட் பண்ணு ராகுல் பால் போடு..கம் ஆன் கைஸ் ஸ்டான்ட் யூர் பொஷிஷன்ஸ்..மேட்ச் ஆரம்பமானது.

ராகுலின் கையில் சுழன்ற ஸ்பின் பாலில் ஸிக்ஸ் ஒன்னு பா(f)ர் ஒன்னாக அடித்த இளா அவர்களின் கரகோசத்தில் உற்சாகமாகி ஓங்கி ஒன்னு விட்டதில் பால் அடுத்த வீட்டு ஜன்னல் கண்ணாடியில் சிதற..

ஊச்ச்..ஹூஹூ..ஸ்ஸ்.. பல்வேறு ஒலிகளோடு கைகளைத் தூக்கி தலையில் வைத்து பயத்துடன் கண்ணாடியை பார்த்தனர்.

அய்யய்ய்ய்ய்யோ..இப்போ என்னடா பண்றது..இளா கை பிசைய பரிதாபமாய் விழித்தனர் சிறுவர்கள்.

Continue Reading

You'll Also Like

365K 15.9K 85
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல...
174K 6.7K 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்ன...
16.6K 571 23
அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...
94.6K 4.5K 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..