அத்தியாயம் - 38

Start from the beginning
                                    

நீரின் குளிர்ச்சியும் உடலின் உஷ்ணமும் இணைந்து தகிப்பேற்ற அவளை தூக்கிச் சென்று கட்டிலில் போட்டவன் தாபமாய் நெருங்க அவன் விரல்களுக்கு கண்மூடி சுதந்திரம் வழங்கினாள்.

அழாத கண்ணம்மா..ப்ளீஸ்டி இனி இப்டி பேசமாட்டேன்..எவ்ளோ நேரமா அழுதுட்டிருக்க..தன்னை கட்டிக் கொண்டு உடல் குலுங்க அழுது கொண்டிருந்த மனைவியின் முதுகினை வருடிவிட அவள் அழுகை மெதுவாய் ஓய்ந்தது. அவன் நெஞ்சில் சாய்ந்து அவள் விசும்ப எல்லாத்துக்கும் மூக்கை உறிஞ்சிட்டு அழ மட்டும் தாண்டி தெரியும் உனக்கு..அழுகாச்சி பொண்டாட்டி..அவனின் நெஞ்சில் அவள் குத்த அந்த கைகளைப் பிடித்து முத்தமிட்டவன் பின்னே என்னவாம் என்னை புடிக்குமோ இல்லையோ நான் போர்ஸ் பண்ணதாலதான் என்னை கட்டிக்கிட்டயோன்னு எவ்ளோ தவிச்சிருக்கேன் தெரியுமா...உன்னதாண்டா கிறுக்கா லவ் பண்றேன்னு சொல்றதுக்கென்ன..அவன் நிஜமாகவே கடிந்து கொண்டான்.
அப்படி மட்டும் நீ சொல்லிருந்தா எந்த ப்ராப்ளமும் வந்திருக்காதில்ல...அவள் தலையை நிமிர்த்தி கேட்டான்.

பயம் எழில்..என்கிட்ட என்ன பயம் உனக்கு..உங்கம்மாக்கு என்ன கண்டாலே பிடிக்காது உங்க சொத்துக்காக உன்னை கைக்குள்ள போட ட்ரை பண்றேன்னு அப்போவே சொன்னாங்க..நீ வேற என்னை தவிர யாரை பார்த்தாலும் கட்டிக்கறேன் என்ற ரேஞ்சுலயே சுத்துன..அவன் சிரிக்க இப்போ சிரி நான் எப்டியெல்லாம் துடிச்சுப் போயிருந்தேன் தெரியுமா...அவளை இன்னும் இறுக்கியவன் எனக்கு எப்போவும் உன்னைத்தான் பிடிக்கும்டீ..சின்ன வயசுலேர்ந்து நீ என்கூட மட்டும்தான் பேசணும் என் கூட மட்டும்தான் இருக்கணும்னு உன் கூட வந்து பேசற பசங்களுக்கெல்லாம் அடிச்சிருக்கேன்..அடப்பாவி அதான் எங்கூட எவனுமே பேசறதில்லையா..அவளின் கேள்வியில் சிரித்தவன் ருத்ராவை கண்டா கூட சில சமயம் அவ்ளோ கோபம் வரும்..நீயும் அவனும் சேர்ந்து பேசறதை பார்த்தா காண்டாகும்..அவன் வேற அநியாயத்துக்கு ஹான்ட்ஸம்மா இருப்பானா..அவன் இழுக்க எம் புருஷன் மட்டும் என்னவாம்..அவள் கட்டிலில் அமர்ந்து அவனையும் இழுத்து வாகாக அவனில் சாய்ந்து கொண்டாள்.

சிரிப்புடன் அவள் தோள்களை வருடியவன் இளாவை ருத்ரா கல்யாணம் பண்ண பின்னாடிதான் நிம்மதியாச்சு...பட் அப்போவே யோசிச்சிருந்தா எனக்கு புரிஞ்சிருந்திருக்கும்..அதுக்கெல்லாம் இங்கவும் கொஞ்சம் வேணும் சார் அவள் தலையைத்தட்டி சிரிக்கவும் அவனும் சிரித்தான்.
நீ இருக்றப்போ ஏன் அவனுக்கு இளாவை கட்டி வெச்சாங்க..அர்த்தமாய் புன்னகைத்தவளை பார்த்து ஹேய்..ஏதோ சீக்ரட் இருக்கும் போல சொல்லு..சொல்லு..அவன் ஆர்வமாய் கேட்க ஏன்னா...டீப்லி..மாட்லி..இளா லவ்ஸ் ருத்ரா..வ்வ்வாட்..நம்ம பப்ளிமாஸா..நம்பமுடியாமல் வியந்தவனிடம் ஹ்ம்...சிரிப்புடன் தலையசைத்தவள் டயரில எழுதி வச்சிருந்திருக்கா போல ஒரு தடவ கீழ விழுந்திருந்த டயரியை ரகுமாமா எடுத்து வைக்க போய் அதைப் பார்த்துட்டார். அப்றமா என்னையும் கூட வச்சிட்டுதான் மாமா அவளை கூப்ட்டு கேட்டாங்க. முதல்ல வீம்பு பண்ணிட்டு அப்றமா ஒத்துக்கிட்டா.. அப்றம் என்ன டும்..டும்...தான்.

அடிப்பாவி இளா...அவனை புடிக்காத மாதிரியே என்னம்மா ஆக்ட் பண்ணுவாள்...இரு அவ வரட்டும்..இருக்கு அவளுக்கு. ருத்ராவுக்கு தெரியுமா..அப்போ தெரியாது ஐயா ரொமான்ஸாவே அலையுறதை பார்த்தா இப்போ தெரியும்னு நினைக்கறேன்..அப்போ அவனும் லேட்டா..சிரிப்புடன் அவள் மடி சாய்ந்தவனை தலை கோதி..என்ன பண்ணலாம் எங்களுக்குன்னு வந்து வாய்ச்சதெல்லாமே ட்யூப்லைட்டால்ல இருக்கு..அவள் சொல்ல திரும்பி அவள் வயிற்றில் முகம் பதித்து அவன் குறுகுறுப்பு மூட்ட போதும்டா..என அவள் சிரிப்போடு தள்ளிவிட நான் என் குழந்தைக்கு கிச்சுகிச்சு மூட்டறேன் உனக்கென்ன..மீண்டும் அவனின் செய்கையில் கிளுக்கிச் சிரித்தாள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now