அத்தியாயம்-35

Depuis le début
                                    

ஹலோ என்றதுதான் தாமதம் உனக்கெல்லாம் எதுக்கு ஒரு போன் ருத்ராவின் உறுமலில் சாரி.. போன் சைலண்ட் மோட்ல இருந்துது..பொடலங்காய் சாரியை தூக்கி குப்பைல போடு...எத்தனை தடவை போன் பண்ட்ரது...இந்தாளுக்கு என்னை திட்ரதுன்னா அல்வா சாப்டுற மாதிரியாச்சே..மைன்ட் வாய்ஸ் குரல் கொடுக்க..சரி எதுக்கு கால் பண்ணீங்க எதுனாச்சும் அவசரமா..கொஞ்ச நேரம் அந்த பக்கம் அமைதி..ஹலோ.. ஹலோ..அவள் அழைக்க இருக்கேன்..என்றான் எதுக்குத்தான் கால் பண்ணீங்க..ஆஹ்..அது..உன்னை ஈவ்னிங்க் பிக்அப் பண்ண வரனுமான்னு கேக்கதான் கால் பண்ணேன். இதென்ன கேள்வி ஸ்கூட்டி ரிப்பேர்னு வன் வீக்கா நீங்கதானே ட்ராப் பண்ணி பிக்அப் பன்றீங்க. கன்பார்ம் பண்ணதான் கேட்டேன் சரி வச்சுர்ரேன்.

அவன் பட்டென அழைப்பை துண்டிக்க என்னாச்சு இந்த மீசைக்கு..தோளை குலுக்கி விட்டு அவள் ராதாவின் ஸீட்டுக்கு நடந்தாள். அதே நேரம் அலுவலக அறையில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ருத்ரதேவனும் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான் என்னாச்சு எனக்கு..ஏன் இவ்ளோ டிஸ்டர்ப்ட் ஆ இருக்கேன். எப்ப பாரு அவளை பார்க்கனும் பேசணும்னு தோணிட்டே இருக்கு.
கண்ணை மூடி தூங்கினா கனவுல கூட இளாதான் மாமானுட்டு வர்ராள்..அவளை பிக்அப் பண்ட்ரதுக்குன்னே அவசரமா வேலைலாம் முடிச்சிட்டு ஓடறேன்..அவள் கூட ரொம்ப நேரம் இருக்கனும்னு காரை ஸ்லோவா ஓட்டி மாமா நடந்து போறவன் கூட ஓவர் டேக் பண்றான்னு அவளே கலாய்க்கறா..என்ன கருமாந்திரம் இதெல்லாம் எரிச்சலாய் நிமிர்ந்தவனின் லாப் வால் போட்டோவில் இளா சிரித்துக் கொண்டிருந்தாள்.

எழிலுக்கு தலையை வலித்தது தனிமை வேண்டியதாய் இருக்க வீட்டுக்கு கிளம்பி விட்டான். சோர்வாய் வந்த மகனை பார்த்து என்னாச்சுப்பா என பதறிய தாயிடம் கொஞ்சம் தூங்க போறேன்மா ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க...இல்லைப்பா என்று தொடங்கியவளை தடுத்த சுந்தரம் விடு..அவன் தூங்கட்டும் அப்போதான் மைன்ட் ரிலாக்ஸ் ஆகும் என மனைவியை தடுத்தார்.

அறைக்குள் வந்தவன் ஷர்ட்டின் மேல் பட்டன்களை கழட்டி லூசாக்கியவாறே முகத்தில் நீரடித்துக் கழுவினான்.
கட்டிலில் வந்தமர்ந்தவனை சுற்றி குளித்த ஈரத்தலையுடன் சிரித்தவாறு.. நைட்டியோடு அவன் தோளில் சாய்ந்து.. அவன் வாங்கிக் கொடுத்த சேலையுடன் வெட்கமாய்..என அவனின் கண்ணம்மாவின் உருவமே தெரிய ஏன்டி என்ன விட்டு பொய்ட்ட..கோபமாய் தரையில் ஓங்கி உதைத்தவனின் கால்களில் எதுவோ தட்டியது.

குனிந்து பார்த்தவனின் கண்களுக்கு அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய அந்த மரப் பெட்டி தெரிந்தது. உன்னோட ஒவ்வொரு நினைவையுமே என் கூட சேமிச்சு வச்சுக்கிட்டிருக்கேன்...என்றவாறே அவள் அவனிடம் வீசியது..சட்டென நினைவு வந்தது. அன்றைய களேபரத்தில் கவனிக்கப்படாமல் கட்டில் ஓரமாய் கிடந்தது இன்று அவன் பார்வையில் பட்டிருக்கிறது.
அதை எடுத்து திறந்து பார்த்தான்.

அவனின் பன்னிரெண்டாவது வயதில் கோயில் திருவிழா ஒன்றில் அவளோடு அவன் நின்று எடுத்த போட்டோவை பெட்டியினுள்ளே ஒட்டி வைத்திருந்தாள். அதோடு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவனின் போட்டோக்கள் நிறைந்த ஆல்பம் மேலே மை டியர் புருஷன் என எழுதப்பட்டிருந்தது..அவன் அவளுக்காக செய்து கொடுத்த காற்றாடி, அவனின் கிழிந்த சட்டை, கிரிகட் பால், உடைந்து போன பழைய செல்போன், அவன் கொடுத்த பர்த்டே கார்ட், கைக்கடிகாரம், கண்ணம்மா என் காதலி கவிதை....அவன் கண்கள் கலங்கி ஒரு துளி விழுந்து உடைந்து சிதறியது.

ஏன்டீ இவ்ளோ லவ்வை வச்சிட்டு எங்கிட்ட சொல்லாம மறைச்ச...இதெல்லாம் தெரியாம நான் உன்னை எவ்ளோ வதைச்சிட்டேன்..தெரிஞ்சிக்கிட்டு உங்கிட்ட வர்ரப்போ என்னை விட்டு விலகிப் போய்ட்டியே..லவ் யூ டி நீ இல்லைனா நானும் இல்லை கண்ணம்மா எங்கிட்ட வந்திடு..அவன் அருகே சிரித்துக் கொண்டிருந்த சிறுமி யசோதாவை அவன் இதழ்கள் ஈரப்படுத்தின.

என்ன சொல்ல போகிறாய்..Où les histoires vivent. Découvrez maintenant