அத்தியாயம்-34

Start from the beginning
                                    

படத்தில் ஜோதிகா சூர்யாவிடம் காதல் சொல்லிக் கொண்டிருந்தாள்

என்னால கான்ஸன்ட்ரேட் பண்ண முடில க்ளாஸ் எடுக்க முடில்ல கணக்கெல்லாம் மறந்து போச்சு ஸ்கூல்ல ஒழுங்கா யார்டயும் பேச முடில்ல பசியில்ல தூக்கம் வரல்ல எல்லாம் உங்களாலதான்னு சொல்லிட்டு போக வந்தேன்

முதல்ல இங்க வரவே கூடாது உங்கள பாக்கவே கூடாதுன்னு நெனச்சேன் ஏன்னா  கெஞ்சுரது எனக்கு புடிக்காது

ஆனா இப்போ அத பத்தில்லாம் நான் கவல படல்ல எனக்கு உங்கள புடிச்சிருக்கு ஏன் காதல ஏத்துக்கங்கன்னு கேக்கலாம்னு வந்தேன்

அப்றம் ஒரு விஷயம்  ஐ ஆம் எ நார்மல் பேர்ஸன்னு அன்னிக்கி சொன்னீங்க ஐ ஆம் சாரி நீங்க நார்மல் பேர்ஸன் இல்ல அப்டி இருந்திருந்தீங்கன்னா என் காதல தூக்கி எறிஞ்சிருக்க மாட்டீங்க..

படத்தில் போய்க் கொண்டிருந்த ஸீனிற்கும் இவர்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதாய் தோன்றியது..அதுசரி யாருதான் இப்ப நார்மல் பேர்சனா இருக்கறாங்க ரொம்பத்தான் எகிறிட்டு திரியுதுங்க...என்றவாறே ருத்ராவை கடைக் கண்ணால் பார்த்தவளுக்கு அவனும் அவளையே பார்த்திருப்பது தெரிந்தது.

அவன் டீவியை ஆப் பண்ணிவிட ஹலோ ஆன் பண்ணுங்க அதான் நான் பார்த்துட்டு இருக்கேன்ல..எங்களுக்கு சாதகமா படத்துல கூட ஒரு வார்த்த பேசிடக் கூடாதே..பேசாம தூங்கு நான் நாளைக்கு ஏர்லியா ஆபிஸ் போயாகனும்..அதுக்கு நான் ஏன் பேசாம தூங்கனும்..சரிந்து படுத்தவன் அவள் புறம் திரும்பி சரி அப்ப பேசிட்டே தூங்கு... நான் ஏன் பேசிட்டே தூங்கனும்..என்ன வம்பு பண்றியா.. ஆமாமா உங்க கூட மல்லுக்கட்டி மாரடிக்கனும்னு வேண்டுதல் பாருங்க அதான் விடிஞ்சதிலருந்து தூங்கற வரைக்கும் வம்பு பண்ணிட்டிருக்கேன்..அதுதான் உண்மையும் அவன் சொல்லிவிட்டு கண்களை மூட ஹலோ யாரை பார்த்து வம்பு பண்ட்ரவன்னு சொல்றீங்க...அவன் காதே கேளாதவன் போல கண்களை மூடி படுத்திருந்தான்

இங்க ஒருத்தி காட்டுக் கத்தலா கத்திட்டிருக்கேன்..காதுல வாங்காம என்ன படுக்க வேண்டி கிடக்கு அவனை அவள் உலுக்க கண் திறந்தவன் ஓ.. நீ என் கூடதான் பேசிட்டிருக்கியா..இங்க உங்கள விட்டா வேற யார் கூட பேசறது..அவள் கோபமாய் கேட்க இல்ல..ஹலோ ஹலோனு அடிக்கடி பேசறியா போன்லயோன்னு நினைச்சேன்..இதப்பார்ரா ஐயா நக்கல் பண்றாப்புல கலாய்ச்சிட்டாராமாம்...இங்க பாருங்க ருத்ரா சார் இந்த நக்கலு நையாண்டில்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க..அப்ப உங்கிட்ட என்ன வச்சிக்கட்டும்..ஆஹ் ஒரு மண்ணும் வச்சுக்க வேணாம்..அப்ப பேசாம தூங்கு குட் நைட்..தூங்க முடியாது..தூங்காம என்ன பண்ண போற ஆஹ் பாட்டுப் பாடப் போறன்..அப்போ சரி பாடு குட் நைட் அவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

என்னை படம் பார்க்க விடாம நீ மட்டும் ஹாயா படுக்கறியா மவனே உன்னை விர்ரனா பாரு..மனசுக்குள் சொல்லிக் கொண்டவள் ஹ்ஹ்ஹ்ஹூஹூம்ம்...தொண்டையை செருமிக் கொண்டாள்.

எங்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராணியடா
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரியடா
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே அட
அப்புறமா குத்துப்பட்டு ஓடாதே

அவளின் பாட்டில் அவனை மீறி சிரிப்பு வர கண்களை திறந்து முறைத்துப் பார்த்தான் அவனை அலட்சியமாய் பார்த்தவள் பாட்டை தொடர்ந்தாள்

முன்னால கோழ பின்னால வீரி
என்னாலதானே நான் ஆளாகினேன்
எல்லார்க்கும் வீரம்
கட்டாயம் உண்டு
எனக்கு அது கொஞ்சம்
அதிகம் தம்பி

உன்னை...அவளை அருகிழுத்து அவனோடு சேர்த்தணைத்து ஒரு கையால் அவள் வாயை மூடியவன்
அவள் கைமேல் ஒரு கை வைத்து இடையோடு இறுக்கி அவள் கூந்தலில் முகம் புதைத்து வாயை மூடிட்டு பேசாம படுடீ..அவள் அறியாது அவள் கூந்தலில் வாசம் பிடித்தான்.

அவளின் இதயத்துடிப்பு வேகமாக பேச முடியாமல் நா வறண்டு போனது இவ்வளவு அருகாமை அவளை என்னன்னவோ செய்ய..விடுபடத் திமிறினாள்.

அவளை இன்னும் இறுக்கியவன் ஷ்ஷ்ஷ்ஷ்...பேசாம கண்ணை மூடிட்டு தூங்கு...காதோரம் கிசுகிசுக்க அவள் உடல் கூசிச் சிலிர்த்தது. கொஞ்ச நேரத்தில் அவன் பிடி தளர்ந்த போதும் அவன் கையை எடுக்கவுமில்லை அவள் எடுத்துவிடவுமில்லை. இருவரும் தூக்கத்தை தொலைத்திருந்தாலும் சுகமாய் எதுவோ மனம் நிறைத்திருந்தது.

யசோ புரண்டு படுத்தாள் தூக்கம் வருவேனா என்று அழிச்சாட்டியம் செய்தது..செல்போனை எடுத்து காலரிக்கு சென்றவள் தாமரைக்கேணியில் அவனும் அவளுமாய் எடுத்துக் கொண்ட செல்பீக்களை பார்த்தாள்..சிரிப்புடன் அவள் தோள் அணைத்திருந்தவனை அவள் விரல்கள் தடவின கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now