அத்தியாயம்-33

Começar do início
                                    

உனக்கு சந்தியாவோட நிச்சயமான பின்னாடி உன்னையே நெனச்சி நெனச்சி ஒவ்வொரு ராத்ரியும் நான் துடிச்சது எனக்குதாண்டா தெரியும்..என்னை பார்த்து எவ்ளோ கேவலமா பேசிட்ட நீ.. நடிச்சேன்னு வேற சொல்ர இல்ல

நான் உன்னை கல்யாணம் பண்ண கேட்டேன்.. கல்யாணம் பண்ண கேட்டேன்..னு சொல்லிட்டிருக்கியே ஏன்டா அப்டி கேட்ட அவன் ஷர்ட்டை பிடித்து உலுக்கியவள் உனக்கு கல்யாணம் பண்ண நிச்சயம் பண்ணி வச்சிருந்தவள் ஓடிப் போனப்போ வேற வழி இல்லாமதானேடா என் கிட்ட வந்த..எம்மேல காதல்னா வந்த..

இத்தனைக்கும் நீ கண்ணம்மானு சொல்ற ஒரு வார்த்தைக்காக உன் காலையே சுத்தி வந்தேனடா..போயும் போயும் உன்கிட்ட பொய் சொல்லிட்டு எவன் கூடயோ..இப்போது அறைவது எழில் முறையானது. எனக்கு புடிக்காதவனை ஏன் போய் பாத்தேன்னுதாண்டீ உன் மேல கோபப்பட்டேன்..பொண்டாட்டி மேல நம்பிக்கை வக்காத கீழ்த்தரமானவன்னு நெனச்சியா..வேகமாய் வெளியேறியவன் வீதியில் இறங்கி கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான்.

ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தவன்
கண்களில் இருந்து நீர் வழிய அதற்கு சம்பந்தமில்லாது சிரிக்க ஆரம்பித்தான்.. கண்ணம்மா சின்ன வயசிலேருந்து என்னை லவ் பண்ணியா..மாமன்கிட்ட சொல்றதுக்கென்னடீ..மரத்தில் நிம்மதியாய் சாய்ந்தவன் ஸாரிடீ நான் கோபத்துல பேசினா ஏதோ உன்னை சந்தேகப்பட்டு பேசின மாதிரி என்னை பார்த்து கேள்வி கேட்டா கோபம் வராதா..அதான் அடிச்சிட்டேன் லவ் யூ சோ மச் டீ மை பொண்டாட்டீ..கண்களை துடைத்தவாறு எழுந்தவனுக்கு அவள் தன்னை சின்ன வயசிலேயே காதலித்திருக்கிறாள் என்பதை நினைக்க நினைக்க அவ்வளவு சந்தோஷமாய் இருந்தது. அவளை பார்த்தே ஆக வேண்டும் போல் தோன்ற எழுந்து வீடு நோக்கி அவன் நடக்கவும் ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே நிற்கவும் சரியாய் இருந்தது.

என்னனடா எழில் நைட்ல வாக்கிங் போற...ஹேய் சந்த்ரு நண்பர்கள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர். அப்றம் லாயர் சார் நீங்க என்ன இந்த பக்கம் அது ஒன்னுமில்லைடா ஒரு க்ளயண்டை மீட் பண்ண வந்தேன்..
நண்பர்கள் இருவரும் கொஞ்ச நேரம் பேசிச் சிரித்தனர். சரி மச்சி அப்போ நான் கெளம்புறேன்..அடி வாங்குவ ராஸ்கல் பக்கத்துலே என் வீட்ட வச்சிட்டு ஒரு காபி சாப்டாம போறேன் என்ற வா வா..அட என்னப்பா ஒரு காபியோட முடிச்சிக்கப் பாக்குற நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா எப்போ மச்சீ ட்ரீட்..சந்த்ரு ஆர்வமாய் கேட்க ட்ரீட்டா எதுக்கு எழில் குழம்பிப் போனான்.

என் பொண்டாட்டி திவ்யா டாக்டர் சார் மறந்துட்டீங்களா..
அதுக்கேன்டா நான் ட்ரீட் தரணும். அடிங்க் படவா நேத்து தலசுத்து வாந்தினு உன் வொய்ப் வந்திருந்தாளாமே திவ்யா கூட செக் பண்ணி த்ரீ மந்த் கன்சீவ் னு கன்பார்ம் பண்ணி அமிச்சாளாமேடா..
எழில் இன்பமாய் அதிர்ந்து போனான்.

ஒரு மாதிரியாய் சமாளித்து சந்த்ரூவை அனுப்பிவிட்டு வேகமாய் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். ச்சே என்ன மனுஷன் நான் நேத்து அவள் உங்கிட்டே ஒன்னு சொல்லணும்னு எவ்ளோ சந்தோஷமா வந்தா எவ்ளோ ஹாப்பியான நியூசை எங்கிட்டே சொல்லனும்னு வெயிட் பண்ணிருப்பா..அதை புரிஞ்சிக்காம அவ மனசை எப்டில்லாம் பேசி காயப்படுத்திட்டேன்..எழில் முட்டாள்டா நீ..அவன் நடையில் வேகம் கூடியது.

என்ன மாதிரி பீல் பண்றேன் நான் என் கண்ணம்மாவை கண்டதை பேசி கஷ்டப்படுத்திட்டேனே என்ற கவலை ஒரு பக்கம் அப்போ இருந்தே அவ என்னைத்தான் லவ் பண்ட்ரா எங்கற கிளர்ச்சி ஒரு பக்கம்..எல்லாத்துக்கும் மேலே  ஷீ இஸ் ப்ராக்னன்ட்..என் குழந்தை ரத்தமும் சதையுமா அவ வயித்துல வளருது...எல்லாம் சேர்ந்து கலவையான ஒரு உணர்வு ஹவ் டு எக்ஸ்ப்ளைன் இட்..கேட்டை திறந்து உள்ளே நுழைய போனையும் வீட்ல வச்சிட்டு எங்கேடா போய் தொலைஞ்ச..என்று பாய்ந்தவரிடம் ஏம்மா என்ன விஷயம் என்று கேட்டான்.

என்னன்னு சொல்லடா நம்ம யசோ அவசரமா வெளியே போனா எங்கம்மா போறேன்னு கேட்டதுக்கு இப்போ நான் இந்த வீட்ல இருக்க முடியாது அத்த ப்ளீஸ் என்ன போக விடுங்கன்னு சொல்லி பக்கத்து ஸ்டான்ட்ல நின்ன ஆட்டோல ஏறி போய்ட்டாடா..எவ்ளோ தடுத்தும் கேக்கல என்னம்மா சொல்ற..உடலிலிருந்து சக்தியெல்லாம் வடிந்தது போல் தோன்ற அப்படியே அருகிலிருந்த கட்டின் மேல் தொப்பென அமர்ந்தான் அவன்.

என்ன சொல்ல போகிறாய்..Onde histórias criam vida. Descubra agora