அத்தியாயம்-32

Start from the beginning
                                    

இரவெல்லாம் அழுதபடி இருந்ததில் நேரம் தப்பியே தூக்கம் செல்ல அவள் கண் விழித்த போது அவன் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.சாரி எழில் தூங்கிட்டேன்..எழுப்பியிருக்கலாம்ல வேகமாய் எழுந்த போது அவளுக்கு தலை சுற்றியது. சமாளித்துக் கொண்டு எழுந்தவள் டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு டீ போட்டு தர்ரேன்.நோ தாங்க்ஸ்..வெளில சாப்டுக்கறேன் வேகமாய் அவன் வெளியேறிவிட விக்கித்துப் போய் நின்றவள் கண்களில் இருந்து கண்ணீர் கோடுகள் இறங்கின.

என்ன எளவு இது..மீண்டும் ஒருமுறை ஓங்கி உதைத்தாள் இளா. சின்ன உறுமலுடன் நின்ற ஸ்கூட்டியில் ஓங்கி குத்தியவள்..இப்போ பாத்து ஸ்டார்ட் ஆகாம உயிர வாங்குது இன்னிக்கு லேட்டாப்போனா எழில் திட்டுவானே முக்கியமான டிஸ்கஷன் வேற இருக்கு இப்டி பாதி வழில நின்னு தொலைச்சிருச்சே..ராதாவுக்கு கால் பண்ணினால் தூக்கமாட்டேங்கறாள் மத்தவங்க வர்க்ல இருப்பாங்க இதென்ன கருமத்துக்கு எனக்கிந்த சோதன பிள்ளையாரப்பா...தலையில் அலுப்பாய் கை வைத்திருக்க பின்னால் காரின் ஹார்ன் ஒலி கேட்டது.திரும்பிப் பார்க்காமலேயே அது யாரின் கார் என்பது அவளுக்கு புரிந்து போனது.

வேண்டுமென்றே திரும்பிப் பார்க்காமல் அவள் அமர்ந்திருக்க அருகே நிழலாடியது. அம்மா..என்ன பிரச்சினை..ஸ்கூட்டியிலே ஏதும் ப்ராப்ளமா..கணேஷின் குரலில் கடுப்பானவள் இறங்கி வந்து என்னன்னு ஒரு வார்த்த கேக்கறானா பாரு டிரைவரை விட்டு கேக்கறான் அகம்பாவம் புடிச்சவன். ஈஈஈ..என்று இளித்தவள் சேச்சே..அதெல்லாம் ஒன்னுமில்லை கணேஷ் காலைல வெயில்ல நின்னா ஒடம்புல நிறைய்ய விட்டமின் டீ சேருமாமே அதான் நிக்கறேன்.அவளின் பதிலில் கணேஷ் திருதிருவென்று விழித்தான். நீ காருக்கு போ கணேஷ் நான் பாத்துக்கறேன்..ருத்ராவின் குரல் அருகே கேட்டும் திரும்பாமல் நின்றாள்.

வந்து கார்ல ஏறு ஆபீஸ்ல விட்டுட்டு போறேன்..ஐயோ என்ன ருத்ரா சார் நீங்க உங்க ரேஞ்ச்சுக்கு நீங்க காரை விட்டு இறங்கி என்னை போய் கூப்டுட்டு நிக்கலாமா சொல்லுங்க..அவன் முன்னரே இறங்கி வராததற்கு அவள் நக்கல் பண்ணுவது புரிய இளா கார்ல வந்து ஏறு நம்ம சண்டைய வீட்டோட வச்சுக்கலாம்..முடியாது உங்க கூட கார்ல வர்ரதுக்கு எனக்கு இஷ்டமில்லை. இளா நடு ரோட்ல வச்சு ஸீன் க்ரியேட் பண்ணாத இறங்கு..மாட்டேன்..சரி அப்போ எதுல போய் சேர்ரதா உத்தேசம்..யார்கிட்டேயாச்சும் லிப்ட் கேட்டு போவேன். கொன்னு புதைச்சிடுவேன் லிப்ட் கேட்டு போவாளாம்..இறங்குடீ கீழே என்னதான் வாய்க்குவாய் பேசினாலும் அவனின் கோபத்தில் அளுக்கு உள்ளே உதறத்தான் செய்தது.

அப்போது பார்த்து அவனது செல் சிணுங்கியது. ஹலோ...ஆ சொல்லு ராகினி..அவனின் பேச்சில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. எதுது..ராகினியா அவ எதுக்கு இந்தாளுக்கு கால் பண்ட்ரா...காதை கூர்மை ஆக்கினாள். அவள் முக மாற்றத்தை பார்த்ததும் ருத்ராவுக்கு சிரிப்பு வந்தாலும் காட்டிக் கொள்ளாமல் பேசினான்.ஹ்ம்ம்..ஓகே வந்துர்ரேன்..போனை வைத்தவன் கணேஷ் ராகினிக்கு உடம்பு சரியில்லை லீவ் சொல்லியிருக்கா இம்போர்டன்ட் பைல் ஒன்னு அவகிட்டதான் இருக்கு பாவம் அவளையும் பார்த்துட்டு பைலையும் எடுத்துட்டு போவோம்..என்னது பாவமா அவள் காதால் கனல் பறந்தது.

சரீ..நீ வர்ரியா இல்லையா நான் போனும் சீக்கிரம் சொல்லு வரலைன்னா நான் கிளம்பறேன் வர்க் இருக்கு நான் வரல்லைன்னு எப்போ சொன்னேன் வேகமாய் நடந்து சென்று காரில் அமர்ந்தவளை பார்த்து அவன் சிரிப்பை அடக்க வேண்டியிருந்தது. கணேஷிடம் ஸ்கூட்டி சாவியை கொடுத்தனுப்பிவிட்டு ருத்ரா காரோட்ட அவள் அருகிலே முகத்தை உர்ர்ரென்று வைத்தவாறு அமர்ந்திருந்தாள்.

இப்போ அவ வீட்டுக்கு போவீங்களா..அதுவும் கணேஷை வேற அனுப்பிட்டு தனியாவா போனும்..எவ வீட்டுக்கு..அவன் புரியாதது போல கேட்க அதான் அந்த கடன்காரி ராகினி வீட்டுக்கு..எரிச்சலாய் மொழிந்தவளை சிரிப்புடன் பார்த்தவன் நான் எதுக்கு போனும் தோளை குலுக்கினான்.. ராகினிக்கு உடம்பு சரியில்லை லீவ் சொல்லியிருக்கா இம்போர்டன்ட் பைல் ஒன்னு அவகிட்டதான் இருக்கு போய் பார்த்துட்டு வாங்கலாம்னு சொன்னீங்க...அவன் சிரிப்புடன் கண்சிமிட்ட..யூ ச்சீட்..எல்லாமே பொய்யா..பின்னே ரோட்ல உங்கூட கபடி விளையாட சொல்றியா..அவ முக்கியமான மீட்டிங்க் இருக்குன்னுதான் கால் பண்ணா..பொய்..பொய் சொல்லி என்னை கார்ல ஏற வச்சிருக்கீங்க..ஜஸ்ட் லைக் தட்..ச்சே இப்டி ஏமாந்துட்டியே இளா மனசுக்குள் புலம்பியபடி அவனை கோபமாய் பார்த்தாள்.

இலக்கியா முன் கார் நிற்க இறங்கியள் கோபத்தை கார் கதவில் காட்டிவிட்டு திரும்பி நடக்க மிஸிஸ் இளமதி ருத்ரதேவன்..அவன் அழைப்பில் நின்று திரும்பி அவனை முறைத்தாள். பொண்டாட்டின்னு ஒருத்தி கூட பட்ர கஷ்டமே போதும் இன்னொரு பொண்ணெல்லாம் சான்ஸே இல்லை நீங்க கவலைப்படாம நிம்மதியா வர்க்கை கவனிங்க..அவள் இன்னும் கோபமாய் பார்க்க அவன் சிரிப்புடன் சென்றான். அவன் கார் மறைந்ததும் அவளின் இதழ்களும் சிரிப்பில் மலர்ந்தன.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now