அத்தியாயம்-21

Start from the beginning
                                    

அத்துடன் எழுந்து எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கப் போக இளா போனை எடுத்து ஆர்வமாய் வாட்ஸ்அப் பக்கம் போனாள் மீசை ரிப்ளை போட்டிருக்கும்..போய் பார்த்தவளுக்கு என்ன என்னோட போட்டோவை ப்ரொபை(f)ல் போட்டிருக்க பார்த்ததும் டென்ஷன் ஆவேன்னா.. நான் எதுக்கும்மா டென்ஷன் ஆக போறேன் நீ சொல்ற மாதிரியே என்னோட அருமை தெரிஞ்சு போட்டிருக்க அழகாப் பொறந்தது என் தப்பா..😜 என முடித்திருந்தான். அடப்பாவி இவன் என்ன என்னையே கலாய்ச்சிருக்கான். இவன் ஒருத்தன் ராஜேஷ்குமார் கதைல வர்ர கேரக்டர் மாதிரி எப்போ எது பண்ணுவான்னே தெரியாது..
😭😭😭 அவனுக்கு அழுவது போல் எமோஜி அனுப்பிவிட்டு மெஸேஜஸ்ஸை பார்த்தவள் என்ன இந்த ராங்கி ரங்கம்மா எனக்கு டெக்ஸ்ட் பண்ணிருக்கு..ஓபன் செய்து ரீட் பண்ணியவள் சிரிப்புடன் ரிப்ளை போட்டாள்.

ஏன்டி மேகா இந்த வீவர்க்கு நீ கொடுத்த ரிப்ளை போதாதுடி இன்னும் கொஞ்சம் விளக்கமா கொடு..ஆமா ராது எனக்கு கூட தோணிச்சு..அவர்கள் இருவரும் டிஸ்கஷனில் இருக்க பதறியபடி அங்கு வந்தாள் இளா. ராதா உனக்கு வர்க் முடிஞ்சிடுச்சு தானே சீக்கிரம் கிளம்பு கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம். ஹேய் ரிலாக்ஸ் எதுக்குடீ இவ்ளோ டென்ஷன்..இருவரும் கேள்வியாய் பார்க்க அந்த ராகினி இருக்கால்ல..எந்த ராகினிடி மேகா புரியாமல் கேட்க அதான்டி நம்ம கூட படிச்சாளே அந்த ராங்கி ரங்கம்மா நம்ம இளா என்ன செஞ்சாலும் எது வாங்கினாலும் அவளும் வாங்குவாளே..ராதா நினைவூட்ட எஸ்..எஸ்..அவளுக்கென்ன..இளா ஒரு வேக மூச்சுடன் ருத்ராவின் ப்ரொபை(f)ல் போட்டது வரை சொல்லிவிட்டு அந்த ராகினி ப்ரொபை(f)ல்ல இருக்கறது யார்னு கேட்க மீசை வேற செம்மையா இருக்கு அந்த போட்டோல கழுதை கடுப்பாகி சாகட்டும்னு மை ஹபி னு வேற பெருமை பீத்திக்கிட்டேன்.

அப்றம்.. ராதா சுவாரஸ்யமாய் கதை கேட்டாள். அதுக்கு அந்த ராகினி போட்ட ரிப்ளையை பார்த்து என் நெஞ்சே வெடிச்சிடுச்சு. போனை அவர்கள் பக்கமாய் திருப்பி காட்டினாள்.
வாவ் ஹீ இஸ் மை பாஸ்
இவரோட பர்சனல் அஸிஸ்டன்ட் டி நான்..சார் செம்ம ஹாண்ட்ஸம்
அதிஷ்டக்காரிடீ நீ..ஜலஸ் ஆப் யூ😥😥..அவளின் ரிப்ளையை பார்த்துவிட்டு ராதாவும் மேகாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பக்கெனச் சிரித்தார்கள். என்னடீ சிரிக்கறீங்க..பின்னே நீ வாங்கிய எல்லாமே அவளும் வாங்கிய மாதிரி உன் ஆளையுமா வாங்கப் போறாள் உன் புருஷன் என்ன தட்டுமுட்டு சாமானா..போவியா மேகா அலுத்துக் கொள்ள ராதா நீ வரப்போறியா இல்லையா..அவள் அத்தான் ஆபிஸ்ல வர்க் பண்றாளா அதுவும் பீஏவா வர்க் பண்றாளானு எனக்கு தெரிஞ்சே ஆகனும்.

விடுடீ மீசையை அவள் செட் பண்ணாள்னா நீ ப்(f)ரீரீ...ராதா உளறி வைக்க மேகா இவளை வாயை மூட சொல்லு இருக்கிற கடுப்புக்கு இவளை கொன்னுடப் போறேன்..இளா கொதித்தாள்.

அய்யய்யோ சும்மா லுலுலாயிக்கி சொன்னேன்..அவள் சும்மா உன்னை கடுப்பேத்தியிருப்பாள்டீ மீசைக்கிட்டே மாட்டினா அவ்ளோதான்..ஏன் வந்தீங்க எதுக்கு வந்தீங்கனு குடைஞ்செடுக்குமே..உன் அத்தான் நெருப்புடீ அவரை போய் நெருங்க முடியுமா...ராதா போகாமல் இருக்க எவ்வளவோ தாஜா செய்தும் பலிக்கவில்லை. மேகா சிரிப்பை அடக்கிக் கொண்டு கையசைக்க  பின்னால் பரிதாபமாய் ராதா அமர்ந்திருக்க ஸ்கூட்டி பறந்தது.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now