அத்தியாயம்-20

Start from the beginning
                                    

அது ஒரு ப்ளோல வந்துடிச்சி..
அத்தான்
ஹேய் அதான் சாரி சொல்றன்ல
மெஸேஜ்ஸ் பார்த்துட்டு ரிப்ளை பண்ணாம இருந்தா எப்டி..
அவளின் மெஸேஜ்களை பார்த்துவிட்டு ரிப்ளை போடாமல் ஆன்லைனிலேயே இருந்தான்.
யோவ் மாமா இப்போ ரிப்ளை பண்ண போறியா இல்லையா
😨😨😨😨😨..
அவள் கடுப்பாகி போனாள்.

ஹேய் ரொம்ப நேரமா போன்ல என்னடி செய்ற மேகா கேட்க ஆ..சேனையும் பயிரும் செய்றேன் இளாவிடமிருந்து கடுப்பாய் பதில் வந்தது. இவளுக்கென்னடி ஆச்சு இப்டி சிலுத்துக்கிட்டு நிக்கறா..மேகா ராதாவிடம் கிசுகிசுக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ருத்ராவை எப்படி ரிப்ளை பண்ண வைக்கலாம் என தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள் இளா.
சட்டென தோன்றிய ஐடியாவில் உற்சாகமானவள் அவன் fb யில் இருந்து அவள் காலரியில் சுட்டு வைத்திருந்த போட்டோகளில் ஒன்றை எடுத்து ப்ரொபை(f)லாய் போட்டவள் மவனே இப்போ போடுவ ரிப்ளை...ஹாஹா...ஹா..ஹா வெற்றியாய் ஒரு வில்லச் சிரிப்பு சிரித்துவிட்டு ஆப்லைன் வந்தாள். போனை வைத்துவிட்டு அவள் நிமிர எல்லோரும் இவளையே ஒரு மார்க்கமாய் பார்த்தனர்.

அச்சோ..விடு..அங்கே இலக்கியால மீட்டிங்னு சொல்லிட்டு அரை மணி நேரமா இங்கே வில்லங்கம் பண்ணிட்டிருக்க....எழிலின் அணைப்பில் கட்டுண்டு அவஸ்தையாய் நெளிந்தாள் யசோ.
என் ஆசை பொண்டாட்டிக்கு புருஷனுக்கு எப்டி ஷர்ட் பட்டன் போர்ரது எப்டி டை கட்ரதுன்னு சொல்லிக் கொடுத்துட்டிருக்கேன்..நீ என்னடாண்ணா வில்லங்கம்னு சொல்ற..அவளை அருகிழுத்து நெற்றியில் முட்டி மூக்கோடு உரசினான். ஆமாமா இவர் சொல்லித்தர்ர லட்சணமெல்லாம் எங்களுக்கு தெரியாதாக்கும் அவனிடமிருந்து வலுக்கட்டாயமாய் தன்னை பிரித்தெடுத்தவள் தள்ளி நின்று கெளம்பு கெளம்பு...அறை வாயிலுக்கு கை காட்டினாள்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன..ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே அவன் கண் சிமிட்டி பாடினான்.

அவள் இடுப்பில் கை வைத்து மிரட்டலாய் பார்த்து எழில்ல்ல்ல்...இப்ப நீ போகலைனு வை..என்ன ஆஹ் மிரட்டலெல்லாம் பலம்ம்மாருக்கு அவன் தோரணையாய் கேட்க அவன் பின்னால் கை வைத்து தள்ளி அறை வாயிலுக்கு கொண்டு வந்து விட்டவள் பொண்டாட்டி சொல்றதை புருஷன் கேட்டாதான் புருஷன் சொல்றதை பொண்டாட்டி கேட்டுக்குவா...இல்லைனா எழில் சார் ரொம்ப கஷ்டம் அவள் உதடுபிதுக்கி சொல்ல அப்டின்ட்ர நமக்கெதுக்கு வம்பு அப்றம் நான் சொல்றதை நீ கேக்கலைனா எனக்குதான் பின்னாடி கஷ்ஷ்ஷ்ஷ்டம். கஷ்டத்தை அழுத்தி அவன் கண்சிமிட்ட அட போப்பா.. அவள் சிரிப்புடன் சொல்ல அவளுக்கொரு பறக்கும் முத்தத்தை அனுப்பிவிட்டே அவன் இலக்கியாவிற்கு கிளம்பினான்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now