அத்தியாயம்-17

Start from the beginning
                                    

ஏன்டீ நீ திருந்தவே மாட்டியா சின்ன பிள்ளை மாதிரி ஓ..காட் அவன் தலையிலடித்துக் கொள்ள ஹலோ..இப்போ என்ன நடந்து போச்சு வாய் நமநமனு இருக்கேனு சாப்டேன் சரி பக்கத்துல இருக்கீங்களே பாவமேனு ஒன்னை தந்தேன் பாருங்க எனக்கு இதுவும் தேவை இதுக்கு மேலேயும் தேவை.அவள் முறுக்கிக் கொண்டாள். உனக்கு சென்டர் ப்(f)ரஷ் சாப்டுர வயசா அது மதுவுக்கு வாங்கி வச்சது. இதைப் பாருடா அதெல்லாம் சாப்டறதுக்கு வயசிருக்கா என்ன..எங்கிட்ட யாரும் சொல்லாம பொய்ட்டாய்ங்களே..அவள் சொன்ன தினுசில் அவன் புன்னகைத்தான்.

ஐயோடா சும்மாவே மழை இப்போ இன்னும் அதிகமாகிடுமே அவள் கவலை கொள்ள..ஏன் அவன் புரியாமல் பார்த்தான்.அதான் அத்தி பூத்தாப்போல சிரிச்சு வச்சீங்களே..மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டாதா பின்னே..அவள் நொடித்துக்கொள்ள ஹாஹா.ஹா அவன் சத்தமாய் சிரித்தான். அதற்கேற்றாற் போல் மழையும் சற்றே வலுக்க இருவரும் ஆளை ஆள் பார்த்து சிரித்தார்கள்.

சோம்பலாய் எழில் புரண்டு படுத்தான்.வெளியே மழையின் சடசட சத்தம் கேட்டது. உடம்பெல்லாம் அசதியாய் கண்களை கஷ்டப்பட்டு திறந்தான். சற்றே தலையை திருப்பிய போது அவள் தெரிந்தாள். கண்ணாடி முன்னே தலைமுடியை துவட்டிக் கொண்டு..வேறு நைட்டிக்கு மாறி ஈரமாய் நின்றிருந்தாள். கண்ணாடியில் பார்த்தவாறே வேகமாய் துவட்டியவளின் கை சட்டென நின்றது..மெதுவாய்..மெதுவாய்..துவட்டினாள்..காரணம் கண்ணாடி வழியாக அவன் பார்வை அவள் பார்வையை கவ்வியிருந்தது.
இருவரும் கண்ணாடி வழியே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டிருந்த போது..அவன் கண் சிமிட்டினான். சட்டென சிவந்தவள் பார்வையை திருப்பிக் கொண்டாள். அவன் சிரித்தான். இப்போவா குளிச்ச..அவனின் கேள்விக்கு ஹ்ம்ம்..என்றாள். குளிரலை?....ம்ஹும்..தலையாட்டினாள்.என்ன பேசமாட்டீங்களா மேடம்..பே..பேசுவேனே..வார்த்தைகள் தந்தியடித்தன. எழுந்து நிதானமாய் நடந்து அவளருகில் நெருங்கினான். கூந்தலை சுற்றி கட்டிக்கொண்டிருந்தவள் கையிலிருந்து டவள் நழுவியது.

குனிந்து அதை எடுத்து கட்டிலில் போட்டுவிட்டு அவளை பின்புறமாக நெருங்கினான்.உடல் வெடவெடக்க அசையாது நின்றாள்.அவளை பின்புறம் அணைத்தவாறு தன் முகத்தை அவள் தோளில் பதித்தவன் அவள் முகத்தோடு இளைந்தவாறே தன் கைகளால் அவள் கைகளைப் பற்றி குளிரலைனு சொன்ன ஜில்லுன்னு இருக்க..என்றவாறே அவள் கழுத்தில் மூச்சை இழுத்து.. வாசம் ஆளைத் தூக்குது..அவன் அனுபவித்து சொல்ல அவள் நெளிந்தாள்.

அவன் கண்ணாடியில் அவளை பார்த்துக் கொண்டே பேச அவள் கண்கள் தரையை பார்த்திருந்தது..அவள் கன்னத்தில் அவன் பதித்த 'இச்'சில் சட்டென அவள் நிமிர மீண்டும் கண்களை சிமிட்டினான். நா..நான் கீழே போ..போனும்..அவள் தட்டுத்தடுமாறி வார்த்தைகளை கோர்த்துச் சொல்ல என்னடா இது என் பொண்டாட்டிக்கு பேச்சு மறந்து போச்சு போல இருக்கே..அவன் மீண்டும் நெருங்க சட்டென அவனை தள்ளி விட்டு அவள் ஓட அவன் எட்டி அவள் கையைப் பிடித்து அருகிழுத்தான். ஐயோ விடுங்க..அவள் சிணுங்கினாள். ம்ஹும்..அவன் அவளைப் போல தலையாட்டி மறுத்தான். ச்சீ..போடா அவனை இன்னும் வேகமாய் தள்ளிவிட்டு வெளியே ஓடினாள்.

சிரித்தவாறே டவளை தோளில் போட்டுக் கொண்டு விசிலடித்தவாறே குளியலறை நோக்கி நடந்தான்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now