அத்தியாயம்-15

Start from the beginning
                                    

இதோ வந்துட்டேன் மாமா போனவள் நின்று உ..உனக்கு டீ தயக்கமாய் வினவினாள். அவன் எதுவுமே சொல்லாது அவளையே பார்த்து நின்றான். கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு அவள் சென்றுவிட்டாள்.

அவனுக்கு நடந்தது எதுவுமே புரியவில்லை..எப்படி நடந்தது..நான் அவளை..அவன் எண்ணத்தை ஊடறுத்து அவன் உடலின் உஷ்ணம் மழையை தோற்கடித்தது.

கண்ணம்மா.. ஐ நீட் யூ..அவன் கைவளைவிற்குள் அவள் வந்தே ஆக வேண்டும் தவித்தது மனசு. மாடிப் படிகளில் அவள் காலடிச் சத்தம்.

எழில் கன்ட்ரோல் யுவர்செல்ப்(f)
என்னாச்சுடா உனக்கு மடையா..அவனுக்கு அவனே திட்டிக் கொண்டிருந்த போது எழில் டீ என்றவாறே நீட்டினாள். பாக்டரிக்கா போறே மாமா வந்து.. ஏதோ டாக்குமென்ட்ஸ் தாரதா சொன்னார் உன்னை வந்துட்டு போக சொன்னார்..அவளும் சகஜமாய் பேச தயங்குவது புரிந்தது.

ஈரமாய் மாறிப்போன ஷர்ட் பட்ன்களை அவன் கழட்டிப் போட அவன் அலமாரியிலிருந்து ஒரு ஷர்ட்டை எடுத்து அவள் அயர்ன் செய்தாள். இருவரிடையே மௌனம்..தனிமையான அந்த அமைதியை தாங்காமல் அவன் டிவியை ஆன் செய்தான்.

அடை மழை வரும் அதில்
நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்..
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்..
எங்கேயும் போகாமல் தினம்
வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்..

ரீமாசென் மாதவனோடு  மழையில் நனைந்து கொண்டிருந்தாள் சட்டென டீவியை அணைத்துவிட்டான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிகள் சந்திக்க வேகமாய் விலக்கிக் கொண்டனர். கண்ணம்மா..அவன் குரலில் எதுவோ இருந்தது.
இதோ முடிஞ்சிது வர்ரேன்..அவன் அயர்ன் பண்ணுவதை கேட்பதற்காகவே அழைத்தது போல் பதிலளித்தாள்.

ஷர்ட்டின்றி இருந்தவனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்தவாறே அயர்ன் பண்ணிய ஷர்ட்டை நீட்டினாள்..ஆனால் அவனோ அதை வாங்காமல் அவளையே பார்த்தான்..மெதுவாய் அவளை நெருங்கினான்.

கண்ணம்மா..அவனின் அழைப்பில்
நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் வேகமாய் பின்னடைந்து கதவில் மோதி நின்றாள் அவன் இன்னும் நெருங்கினான். அவன் மூச்சுகாற்று அவளை சுட்டது. அவள் கதவை திறக்க குமிழில் கை வைத்தாள் அவன் அவள் கை மேல் கை  வைத்து அழுத்தினான்..அவள் கண்களுக்குள் அவன் பார்வை ஊடுருவ குனிந்து அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

எ..எழில்..அவளுக்கு குரல் எழும்பவில்லை. ஹ்ம்ம்..அவன் குரலில் அதனிலும் மென்மை இருந்தது. பாக்ட்ரி..போ..போக வேணாமா..வேணாம் அவன் மறுத்தான். அப்போ..அவள் காற்றாகிவிட்ட குரலில் கேட்டாள். நீ தான் வேணும்..ஐ நீட் யூ..காதோரமாய் கிசு கிசுத்தான். அவள் கைகளிலிருந்த அவனின் ஷர்ட் கசங்கி கீழே விழுந்தது. வெளியே இன்னும் மழை விடாமல் பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now