அத்தியாயம்-08

Start from the beginning
                                    

எழுந்து நின்றுவிட்டாள் அவள். தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டாள் நான் சரியாய்த்தான் கேட்டேனா அவன் என்னையா கேட்டான்..எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற என்னை கல்யாணம் பன்னிக்கறியானுதான் கேட்டேன் உன் காதுல ஒரு கோளாறும் இல்லை..எனக்கு தெரியும் நீ இப்டி ஒரு இடத்துல என்னை நினைச்சி கூட பார்த்திருக்க மாட்டேன்னு நான் கூடதான் நினைக்கலை..சிவாவின் நினைவில் அவன் முகம் கடினமுற்றது. திரும்பி அவள் முகத்தை பார்த்தான் நல்லா யோஸி..பாஸிடிவ் ஆன்சரை எக்ஸ்பெக்ட் பண்றேன்..அவன் பார்வை அவளை என்னமோ செய்தது.

கொஞ்ச தூரம்தான் நடந்திருப்பான்
எழில்...அவளின் அழைப்பில் திரும்பினான். அத்தை மனசை தயார் படுத்திக்க சொல்லு ஏன்னா என்னை மருமகளாய் ஏத்துக்கற மனப்பக்குவம் அவங்களுக்கில்லை.அவள் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள் என்பதை புரிந்து கொள்வதற்கு அவனுக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

வீடே அமர்க்களமாய் சளசளவென்ற பேச்சுக்கள் பாடல் ஒலி விலையுயர்ந்த ஆடைச் சரசரப்புக்கள் சமையல் வாசனை என ஒரு திருமண வீட்டிற்கேயுரிய கோலாகலத்துடன் இருக்க ஐயோ.. இந்த கொசுவம் நிற்க மாட்டேங்குதே..வேற ட்ரஸ் போட்டுக்கறேன்மான்னாலும் விடலை..அம்ம்ம்ம்ம்மா..எல்லாம் உன்னாலேதான்.. கண்ணாடி முன் புலம்பிக்கொண்டிருந்தாள் இளா. நேற்று அக்காவின் திருமணம் இனிதாய் நிறைவெய்தியிருக்க இன்றோ நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் வீட்டில் சின்னதாய் விருந்து ஏற்பாடு பண்ணியிருந்தார்கள்.அதற்கு இளா சேலைதான் கட்ட வேண்டுமென்பது சிவகாமியின் உத்தரவு.ஏனெனில் சிவகாமி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவள் திருமணத்திற்கு லாங் ப்ராக் அணிந்ததன் விளைவுதான் இது.

யசோக்கா...ஆசம் ஆசம்..ராதா சூரி ஸ்டைலில் சொல்ல மேகா என் கண்ணே பட்டுடும் போல இருக்கு என்றாள் அவர்களால் அலங்கரிக்கப் பட்ட யசோ புன்னகைக்க இந்த ஸ்மைல் போதும் மேகா நம்ம எடிட்டர் ஸார் டோடல் ப்(f)ளாட் ஆயிடுவார். இருவரும் சிரிக்க ரதாவின் செல் வைப்ரேட் மோடில் கிர்ரியது. இளாவின் நம்பரை பார்த்த ராதா திகிலுடன் அச்சோ அவள் சாரி கட்டிவிட வர சொன்னாளே சாமியாடப் போராள் இருவரும் இளா அறைக்கு ஓட யசோவின் புன்னகை விரிந்தது.

அறைக்குள் நுழைந்தவர்களை இளா முறைக்க சாரி.. சாரி.. அங்கே பொண்ணை ரெடி பண்ண லேட் ஆயிடுச்சுடீ..பாவிங்களா எவ்ளோ நேரமாடீ வெய்ட் பண்றது...மன்னிச்சுக்கோடி செல்லம் அதான் வந்துட்டோமுல்ல...எல்லாம் இந்த ராஜமாதாவால் வந்தது. யாரது..என்ற ரேஞ்சில் அவர்கள் அவளை பார்க்க அதான் எங்கம்மா சிவகாமி தேவியார் என அவள் நொடித்துக் கொள்ள அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

வேஷ்டி சட்டையில் தடுக்கி தடுக்கி விட்டது ருத்ராவுக்கு. இந்த எழில் எப்டிதான் இந்த ட்ரஸ்ஸை போட்டுட்டு இயல்பா இருக்கறானோ..அப்பாவின் நண்பர் ஒருவரோடு சிரித்துப் பேசியவாறு நின்று கொண்டிருந்த எழிலை நோக்கி நடந்தவனின் கைபற்றி யாரோ இழுக்க திரும்பியவன் சிரிப்புடன் அவளை தூக்கி தோளில் வைத்துக் கொண்டான்.

இரட்டை ஜடை பட்டுப்பாவாடை சட்டை பொட்டு கன்னத்தில் சின்னதாய் மச்சத்துடன் அப்பா..நான் நல்லாதுக்கேனா என கேட்டுச் சிரித்த மதுவின் கன்னத்தில் முத்தமிட்டு சூப்பர்..ஆ இருக்கே கண்ணா..என்றவனிடம் ராதா ஆந்திதான் போத்து விட்டா..அப்பா இளா..குழந்தை காட்டிய திக்கில் திரும்பியவன் கொஞ்ச நேரம் கண்சிமிட்ட மறந்து நின்றான்.பியூட்டிபுஃல்..அவன் உதடுகள் தானாகவே தன்னை மறந்து உச்சரித்தன.

சந்தன நிறமும் மெரூனும் கலந்த மெல்லிய தங்க வண்ண ஜரிகை இழையோடிய அழகிய ஸில்க் காட்டன் புடவை கழுத்தில் காதில் கையில் கல்பதித்த நகைகள் தளரக் கொண்டையிட்டு ஆங்காங்கே கலைந்து கிடந்த முடி முகத்திற்கு லேசான ஒப்பனை உதடுகளை மெலிதான மெரூன் லிப்ஸ்டிக்கால் ஈரப்படுத்தியிருந்தாள். அருகே மேனகாவுடன் கமண்ட் அடித்துச் சிரித்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தாள் இளா.

பார்வையை அவளை விட்டு நகர்த்த முடியாமல் அவன் நின்றிருக்க அருகே வந்து அவனின் கையிலிருந்த மதுவிற்கு அவள் முத்தம் வைத்த போது அவளின் வாசனையை அவன் சுவாசிக்க நேர்ந்தது..கலக்குற குட்டீ...செம்மையா இருக்குல்ல என்று அவனிடம் வேறு கேட்டாள்.தலையாட்டியவனிடம் சின்ன சிரிப்புடன் அவள் சென்றுவிட அப்போதுதான் அவனுக்கு மூச்சு வந்தது.

ஊப்ப்ப்ப்ப்(f) எப்போதிருந்து இவள் இவ்ளோ அழகாய் மாறி தொலைச்சாள்...மது வழுக்கி இறங்கி மற்ற குழந்தைகளுடன் விளையாட ஓட இவன் பார்வையோ மீண்டும் இளா பின்னால் ஓடியது.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now