அத்தியாயம்-04

Start from the beginning
                                    

"என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா..
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா..
நெஞ்சின் அலை உறங்காது

உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா..உன் இமை கொண்டு விழி மூடவா..
உன் உடல்தான் என் உடையல்லவா..."

சித்ராவின் உருகலான குரலா..ரஹ்மானின் இசையா வைரமுத்தின் வரிகளா இல்லை யசோவின் கண்ணீரும் இரவின் தனிமையுமா..எதுவென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று மனசைப் பிசைந்தது. மேலே நடக்க முடியாமல் மங்கிய நிலவொளியில் தெரிந்த யசோதாவை பார்த்துக் கொண்டே நின்றாள்.பாடல் தொடர்ந்தது...

" நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காண கண்ணில்லையா...
உன் கனவுகளில் நான் இல்லையா.."

அந்த வரிகளை கேட்டவள் பாடலை நிறுத்தி மடிந்தமர்ந்து குலுங்கி அழுதாள்..இளாவின் கண்களிலும் கண்ணீர். அவளுக்கு ஆறுதல் சொல்ல மனம் தவித்த போதும் அக்காவின் பர்சனல் ஸ்பேசை தாண்ட அவள் விரும்பவில்லை.
தவிர அவள் மனம் விட்டு அழுவது நல்லது..அக்கா யாராலோ மனம் நொறுங்கியிருப்பது புரிந்தது..

வந்த சுவடே தெரியாமல் திரும்பி வந்து அறையில் அமர்ந்தாள். எதிரே அவளின் திருமண போட்டோ..இளா கொஞ்சமாய் நலுங்கிய தோற்றத்தில் சன்னமாய் முறுவலித்திருக்க அவன் யாருக்கு வந்த விருந்தோ என்ற தினுசில் நின்றிருந்தான். இருவர் தோள்களையும் வளைத்துப் பிடித்தபடி வாயெல்லாம் பல்லாக மது. மீண்டும் அவனை அவள் கண்கள் ஆழமாய் பார்க்க..ஏனோ அவள் மனதில் சட்டென அந்த பாடல் வரிகள்...

" நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காண கண்ணில்லையா...
உன் கனவுகளில் நான் இல்லையா.."

கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.காலையில் யசோ தலைவலி எனப் படுத்துக் கொள்ள இளா அம்மாவிடம் சொல்லி சாப்பிட வைத்து மாத்திரை போட்டு தூங்க வைத்து விட்டே வெளியேறினாள்.

ருத்ராவிற்கோ ஒரே ஆச்சர்யம் காரணம் இளா அவனுக்காக பறந்து பறந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.ஷுவை தேடினால் ஸாக்ஸுடன் வந்து நின்றாள் காலைத் தேநீர் கொடுத்தாள்..திரும்பும் பக்கமெல்லாம் எள் எனும் முன் எண்ணெயாக நின்றாள். அவன் பைல் தேட வேகமாய் கொண்டு வந்தவளை இழுத்து அமரவைத்து..சொல் என்ன வேண்டும்..என்றான். என்னன்ன்னா...அவள் இழுக்க பறந்து பறந்து பணிவிடை செய்கிறாயே..ஏதோ இருக்கு..சொல்லு.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now