அத்தியாயம்-03

Start from the beginning
                                    

இருவரும் தனிமையில் கடற்கரையிலிருக்க அவன் கவிதை சொல்ல அவள் கேட்பாள்.எப்படியொரு கவிஞன் அந்த பாரதி.

ஒரு நாள் எழில் கவிதை சொல்ல அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினை யொத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும் பத்துமாற்றுப் பொன்னொத்த நின்
மேனியும் இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் எனை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே

நீயென தின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
என்றன் வாயினி
லேயமு தூறுதே கண்ணம்மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே...

உயிர்த்தீயினிலே வளர் சோதியே என்றன் சிந்தனையே என்றன் சித்தமே! "

எழிலின் ஆழ்ந்த குரலில் அவன் சொல்லச் சொல்ல அவள் அவனின் கண்ணம்மாவாகவே மாறிப் போனாள்.

அவளுள் என்னவோ செய்தது..எழில் ஐ லைக் திஸ் கண்ணம்மா வெரி மச்..நீ என்னை அப்டியே கூப்டறியா..ப்ளீஸ்..தன் கரம் பிடித்து அவள் கெஞ்சலாய் கேட்க சிரிப்புடன் ஒத்துக் கொண்டான்.அன்றிலிருந்து யசோதா அவனுக்கு மட்டும் கண்ணம்மாவாக ஆகிப் போனாள்.

யசோதாவின் மனதில் எழில் மீதான ஆசை வளர அவளின் பாட்டியே காரணம் சிறு வயதிலிருந்தே எழில் கொட்டினான் என அவள் கம்ப்ளெயின்ட் செய்தால் கட்டிக்கப் போறவன்தானேடி கொட்டினான்..என்பார் அவர்.சொல்லச் சொல்ல அவள் மனதில் ஆசை வளர்ந்து வேர்விட ஆரம்பித்தது.

எல்லாவற்றையுமே சொல்ல முடிந்த யசோவால் அவளின் காதலை சொல்ல முடியலை. அப்பாவை இழந்து அடைக்கலமாய் அத்தை வீட்டில் வாழ என்னதான் அவர்கள் சொத்தும் இருந்தாலும் மாமாவுக்கு ருத்ராவுக்கு நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் எழிலின் அம்மா இதையே சொல்லிக் காட்டி இவர்களை ஏளனமாகப் பார்ப்பார் அவனின் அப்பா மாமாவாய் இருந்தும் மனைவியை எதிர்க்கும் துணிவற்றவர். ஒரு நாள் யசோவிடமே என் மகன் பின்னால காசுக்கு ஆசப்பட்டு அலையுறியா என வக்கிரமாய் கேட்க அன்றோடு அவள் தன் காதலை அடி மனசில் புதைத்து விட்டாள்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now