காதல் தின்ற மீதி...! ( முடிந்...

Av NiranjanaNepol

55.1K 3.2K 398

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில்... Mer

1 ருத்ரன்
2 அந்த பெண்
3 ஜெராக்ஸ் காப்பி
4 சக்தி
5 சக்தியின் நிச்சயதார்த்தம்
6 திட்டப்படி...
7 மாறிப்போன திரைக்கதை
8 சமாதானம்
9 எது எப்படி இருந்தாலும்...
10 பணமா, சிறையா?
11 ருத்ரனின் முடிவு
12 சென்னையில் சக்தி
13 சந்தர்ப்பம்
14 தந்திரம்
15 வில்லன்
16 தாலியின் மதிப்பு
17 கைபேசி அழைப்பு
18 சக்தியின் திட்டம்
19 ருத்ரனின் வீட்டில் சக்தி
20 மாயா
21 முடிவு
23 எதிர்பாராத கேள்வி
24 சந்தேகம்
25 அவநம்பிக்கை
26 அவனுக்காக
27 சுமங்கலி பூஜை
28 நல்லவன்
29 ருத்ரனின் கோபம்
30 இது உண்மையா?
31 சக்தி தான் குறி
32 ஓசூர்
33 மனக்கிளர்ச்சி
34 உத்திரவாதம்
35 தூய்மை காதல்
36 சிவாவின் யூகம்
37 யூகதிற்க்கு அப்பாற்பட்டவன்
38 பிடிபட்டான் ருத்ரன்
39 ஓசூரில் சிவா
40 சக்திக்காக...
41 மறைக்கப்பட்ட உண்மை
42 இனிய இதயம்
43 மீண்டும் சென்னைக்கு
44 எதிர்பாராத திருப்பம்
45 சிங்கப்பெண்
46 முன்னுரிமை
47 ருத்ரனுக்கு வலை
48 சந்தேகம்
49 சிந்திக்கும் திறன்
50 சக்தியின் அதிரடி
51 சூழ்ச்சிக்காரன்
52 புதுவரவு
53 இறுதி பகுதி

22 நடவடிக்கையில் மாற்றம்

943 61 8
Av NiranjanaNepol

22 நடவடிக்கையில் மாற்றம்

காரில் ஏறாமல் எதையோ யோசித்தபடி நின்றாள் சக்தி.

"என்ன ஆச்சு சக்தி?" என்றாள் துர்கா.

"நான் இந்த ட்ரெஸ்ஸோட போனா, அவர்கிட்ட மாட்டிக்குவேன். நான் இதை மாத்திடறது நல்லது"

அவள் உரைப்பது சரி என்பது போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட துர்காவும், பரமேஸ்வரனும், ஆம் என்று தலையசைத்தார்கள். மீண்டும் அதே அறைக்கு ஓடிச்சென்ற சக்தி, தனது பழைய உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தாள்.

"இந்த டிரஸ் கிழிஞ்சிருக்கு" என்றாள் துர்கா.

"நான் பார்த்துக்கிறேன் கா" என்றாள் சக்தி.

துர்கா தன்னிடம் கொடுத்த பாட்டிலில் இருந்து, பத்து தூக்க மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த பாட்டிலை துர்காவிடம் திருப்பிக் கொடுத்தாள் சக்தி.

"என்னால இந்த பாட்டிலை அவருக்கு தெரியாம மறைக்க முடியாது. நான் இந்த மாத்திரையை கொண்டு போய் அந்த பாட்டில்ல போட்டுடுறேன்" என்றாள்.

டேஷ் போர்டில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள் துர்கா. அந்த மாத்திரைகளை அந்த காகிதத்தில் மடித்து வைத்துக் கொண்டாள் சக்தி. ஃபார்ம் ஹவுஸை நோக்கி காரை கிளப்பினான் பரமேஸ்வரன்.

மீண்டும் ருத்ரனிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்று தான் எடுத்த முடிவு சரியானது தானா என்பதை பற்றி ஆலோசித்தபடி இருந்தாள் சக்தி. அங்கு செல்லாவிட்டால் அவள் வேறு எங்கு செல்ல முடியும்? ஒருவேளை, நடராஜனின் குடும்பம், அவள் நடராஜனை திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்று அவளை கட்டாயப்படுத்தினால் அவளால் என்ன செய்ய முடியும்? தான் ருத்ரனிடம் பணம் கேட்டதாய் நிச்சயம் நடராஜன் ஒப்புக்கொள்ள போவதில்லை. அவன் ஒரு சுயநலவாதி. அவனுக்கு தேவையெல்லாம் பணம் மட்டுமே. அவனிடம் இருந்து நிச்சயம் சக்திக்கு பாசமோ, சந்தோஷமோ கிடைக்கப் போவதில்லை. அவளை பயன்படுத்தி மேலும் பணம் சம்பாதிக்கவே அவன் திட்டமிடுவான். அவள் தான் இனிப்புகள் செய்வதில் வல்லவள் ஆயிற்றே...! அந்த ஒரு திறமை போதாதா அவனுக்கு பணம் ஈட்ட?

துர்கா கூறியது போல் ருத்ரன் ஒரு ஜென்டில்மேன் என்பதை அவள் புரிந்து கொள்ள தவறி தான் விட்டாள். அவளை அவன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டானே தவிர, கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட அவன் ஒருபோதும் முயலவில்லை. அவன் நினைத்திருந்தால் அதை செய்திருக்க முடியாதா? அவனிடம் அதற்கு தேவையான பலம் தான் இல்லையா? தன் கழுத்தில் ஆடிய மங்கலத்தை தொட்டுப் பார்த்த அவள், கலாச்சார பின்னணியில் இருந்து வந்த தான், இந்த தாலிக்கு மதிப்பு அளிக்காமல் போனது ஏன் என்று எண்ண விழைந்தாள். அதற்கு காரணம், அவள் ருத்ரனின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தது தான். கோபம் அவள் கண்ணை மறைத்திருந்தது. அவன் தன்னை ஏன் திருமணம் செய்து கொண்டான் என்ற காரணம் அவளுக்கு புரியாமல் இருந்தது தான். அவள் மனதில் ருத்ரனை பற்றி எந்த ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையில் அவள் இருந்தாள். அவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதன். அவனை கையாள்வது என்பது அவ்வளவு சுலபமாய் இருக்கப் போவதில்லை...! உண்மை என்னவென்றால் அவள் வேறு எந்த முடிவெடுத்தாலும் அவளது வாழ்க்கை சுலபமாய் இருக்காது என்பது தான்...! அவள் சேலத்திற்கு திரும்பி சென்றாலும் சரி,  சேலம் அல்லாத வேறு எங்காவது சென்று புது வாழ்க்கையை துவங்க நினைத்தாலும் சரி, அவள் வாழ்க்கை கடினமாகத் தான் இருக்கும். ஆனால் ருத்ரனை தன் கணவனாக அவள் ஏற்றுக் கொண்டால், அவளுக்கு  அங்கீகாரத்துடனான ஒரு முகவரி கிடைக்கும். கணவன்...! அவள் கழுத்தில் இருக்கும் அந்த மங்கள சின்னத்தை அவள் மதிக்க துவங்கினால், ருத்ரன் அவளுக்கு கணவன் ஆவான். ஆம், மதிப்பு என்பது ஒரு மனிதனின் நடத்தையில் இருந்து தானே வருகிறது...! அவனை மதிக்கும்படி நடந்து கொள்ள, அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தாள் சக்தி.

இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த சக்தியை, முன்னோக்கி தள்ளி அந்த கார் நின்றது. ருத்ரனின் பண்ணை வீட்டுக்கு அருகில் கார் நிற்பதை கவனித்தாள் சக்தி. கதவை திறந்து கொண்டு அவள் காலை கீழே வைக்க முயன்ற பொழுது,

"நாங்க உங்களை சீக்கிரமாக எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர முயற்சி செய்றோம்" என்று கவலை தோய்ந்த குரலில் கூறினாள், அதை எப்படி செய்வது என்ற வழி புரியாத துர்கா.

"நீங்க என்னை பத்தி கவலைப்படாதீங்க கா" என்று புன்னகை சிந்தினாள் சக்தி.

அவளை நோக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலை நீட்டினான் பரமேஸ்வரன்.

"இது என்னது?" என்றாள் சக்தி.

"இது ருத்ரனுடைய டாக்டர் கொடுத்தது. ஒருவேளை தூக்க மாத்திரையோட டோஸ் அதிகமாகி, அவர் ரொம்ப நேரம் தூங்கிக்கிட்டே இருந்தா, இதை அவரோட முகத்தில் தெளிக்க சொல்லி டாக்டர் கொடுத்திருந்தார். ஆனா,  இதுவரைக்கும் இதை யூஸ் பண்ற சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கவே இல்ல. ஒருவேளை, இன்னும் அவங்க தூங்கிக்கிட்டு இருந்தா, நீங்க இதை அவங்க முகத்துல ஸ்பிரே பண்ணுங்க. இல்லன்னா அவருக்கு உங்க மேல சந்தேகம் வரும்"

"சரி" என்று அதை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டாள் சக்தி.

"கவனமா அந்த பாட்டிலை தூக்கி போட்டுடுங்க சக்தி" என்றாள் துர்கா.

"சரிங்க கா" என்று காரை விட்டு கீழே இறங்கி, பண்ணை வீட்டை நோக்கி நடந்தாள் சக்தி.

வீட்டிற்குள் நுழைந்த அவள், வாட்ச்மேன் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு, அந்த ஸ்பிரேவை அவர் முகத்தில் தெளித்துவிட்டு வீட்டினுள் ஓடினாள். சமையலறையுயின் தரையில் படுத்த படி, காமாட்சியும் உறங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது கணவன் அங்கு இருக்கவில்லை. அவன் ஒருவேளை அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கலாம். அவளது முகத்தில் அந்த ஸ்ப்ரேவை தெளித்த பின், நேரே ருத்ரனின் அறைக்கு விரைந்தாள் சக்தி.

சோபாவில் சரிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தான் ருத்ரன். அவனது கால்களை பிடித்து, அவனை நீட்டிப் படுக்க வைத்து விட்டு, அந்த ஸ்ப்ரேவை அவன் முகத்தில் தெளித்தாள். அந்த ஸ்ப்ரே பாட்டிலை, அலமாரியில் இருந்த தன் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்துவிட்டு, ஓடி சென்று தன்னை போர்த்திக் கொண்டு படுத்துக்கொண்டாள். சில நொடிகளுக்கு பிறகு ருத்ரனிடம் லேசான அசைவு தென்பட்டது. கண்களை கசக்கிய அவன், திடுக்கிட்டு கண் திறந்தான். கட்டிலை ஏறிட்டவன், அங்கு சக்தி உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான். மெல்ல கட்டிலை நோக்கி நடந்தவன், தன் தலை பாரமாய் உணர்ந்ததால், கட்டிலில் படித்துக் கொண்டான். மெல்ல அவள் தலையை கோதி விட்டு, அவள் கரத்தை பற்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

கண்களை திறக்காமல் உறங்குவது போல் பசாங்கு செய்து கொண்டிருந்த சக்தியை, ருத்ரனின் அந்த மென்மையான அணுகுமுறை, வாயடைக்க செய்தது. அவனுக்கு கட்டிலை விட்டு எழும் எண்ணமே இல்லை போல் தெரிகிறது. தன் உடலை லேசாய் முறுக்கியபடி கண் திறந்தாள் சக்தி. அவளது அசைவு, ருத்ரனையும் கண் விழிக்க செய்தது. அவளது கரத்தை தான் பற்றிக் கொண்டிருப்பதை சக்தி கவனிப்பதைக் கண்ட அவன், சற்று சங்கடப்பட்டான். அவள் தன்னை தவறாக நினைத்துக் கொள்வாளோ?

"நான்... வந்து..."

தன் கரத்தை அவன் பிடியிலிருந்து உருவி எடுத்துகொண்டு, எழுந்து அமர்ந்தாள் சக்தி. அவள் முகத்தை படித்தவாறு ருத்ரனும் எழுந்து அமர்ந்தான். தன் உடையில் இருந்த கிழிசலை இருக்கமாய் பற்றி கொண்டு கட்டிலை விட்டு கீழே இறங்கிய அவள், மேலும் அந்த உடையை லேசாய் கிழித்து, ருத்ரனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள், அது அப்பொழுது தான் கிழிந்தது என்பதைப் போல.

"இது எப்படி கிழிஞ்சதுன்னு தெரியல" என்று பயத்துடன் அவள் கூற,

"பரவாயில்ல விடு" என்றான் ருத்ரன்.

"இது புது டிரஸ் ஆச்சே..."

"பரவாயில்ல. நான் உனக்கு வேற டிரஸ் வாங்கி தரேன்"

"இல்ல இல்ல, என்கிட்ட ஏற்கனவே நிறைய டிரஸ் இருக்கு. நீங்க வாங்கி கொடுத்த டிரஸ்ஸையே இன்னும் நான் போடாம இருக்கேன்"

மென்மையாய் சிரித்தான் ருத்ரன். அலமாரிக்குச் சென்ற சக்தி, அதிலிருந்து வேறொரு உடையை எடுத்துக்கொண்டு, குளியலறை நோக்கி சென்றாள். எப்படியோ நிலைமையை சமாளித்து விட்டதால், அப்பாடா என்று இருந்தது அவளுக்கு. கிழிந்த உடையை, தண்ணீரில் நனைத்துவிட்டு, உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவள், நேரே சமையலறை நோக்கி சென்றாள். அங்கு காமாட்சி இருக்கவில்லை. ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தவள், அதே வளாகத்தில், காமாட்சிக்கும் அவளது கணவனுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த சிறிய வீட்டின் வெளியே காமாட்சி முகம் அலம்பிக் கொண்டிருந்ததை கவனித்தாள். நிம்மதி பெருமூச்சு விட்டு,
காபி கலப்பதற்காக பாலை கொதிக்க வைத்தாள்.

இரண்டு கோப்பைகளில் காபி கலந்து கொண்டு, மீண்டும் தங்கள் அறைக்கு வந்தாள் சக்தி. ஒரு கோப்பையை மேஜையின் மீது வைத்துவிட்டு,மற்றொரு கோப்பையை எடுத்து அந்த காப்பியை பருகினாள். காப்பி மிகவும் சூடாக இருந்ததால், அவள் பின்வாங்கிய போது, சில  காப்பி துளிகள் தரையில் கொட்டியது. சிறிது ஆறட்டும் என்று அந்த குவளையை மேஜையின் மீது வைத்தாள்.

குளியலறையில் இருந்து வெளியே வந்த ருத்ரன், அங்கு இரண்டு குவளைகளில் இருந்த காப்பியை பார்த்து ஆச்சரியமடைந்தான். கீழே சிந்தியிருந்த காப்பியை கவனிக்காமல் அவன் அதில் கால் வைக்க, அது வழுக்கியது.

அவசரமாய் அவனை நோக்கி சென்ற சக்தி,

"பாத்து...." என்று அவன் கரத்தை பற்றினாள்.

நடப்பதை நம்ப முடியாத ருத்ரன், அவளை பார்த்து எச்சில் விழுங்கினான்.

"ஜாக்கிரதை இருக்க முடியாதா?" என்று அவனை கடிந்து கொள்ளவும் செய்தாள்.

குறுநகையுடன் தன் கைகளைக் கட்டிக் கொண்ட ருத்ரன்,

"இங்க காபியை கொட்டினது யாரு?" என்றான்.

விழிகளை விரித்து, நகம் கடித்த சக்தி, தன்னை சுதாகரித்துக் கொண்டு,

"ஆங்... நான் இப்படித் தான்... எதையும் எனக்கு உருப்படியா செய்ய தெரியாது. என்னோட இருக்கிறது எப்பயுமே ரொம்ப டேஞ்சர். எப்போ எதை எங்க கொட்டுவேன்னு தெரியாது. என்னோட *எடாமடி* தனத்தை பொறுத்து போறது ரொம்ப கஷ்டம்"

கடகடவென கூறியவள், நிலையான முறுவலுடன் நின்றிருந்த ருத்ரனை விட்டு அங்கிருந்து அவசரமாய் தரைதளம் ஓடிச் சென்றாள். அவள் திரும்பி வந்த போது, அவள் கையில் ஒரு ஈரமான மாப் இருந்தது. காபி கொட்டி இருந்த இடத்தை துடைத்துவிட்டு அந்த மாப்பை கொண்டு சென்று பால்கனியில் காய வைத்தாள்.

தான் வைத்து விட்டு சென்ற காப்பியை பருகுவதற்காக அவள் உள்ளே வந்த போது, அவள் அங்கு வைத்திருந்த குவளையை காணவில்லை. அந்தக் குவளை, ருத்ரனின் கையில் இருந்தது.

"அது என்னோட காபி" என்று அவன் கையில் இருந்து அதை அவள் பிடுங்க முற்பட்டாள்.

"அதனால என்ன?" என்று தன் கையை பின்னால் இழுத்தான் ருத்ரன்.

"நான் அதை எச்சில் பண்ணிட்டேன்"

"அதனால என்ன?"

"ஆனா..." அவன் முகத்தில் தவழ்ந்த குறும்பு புன்னகையை பார்த்து பேசுவதை நிறுத்திவிட்டு, தன் முகத்தை சட்டென்று வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு யோசித்தவள், தன்னை விரும்பாத பெண்ணை காதலிக்க வைக்க வேண்டும் என்பது தான் ருத்ரனின் விருப்பம் என்பதை நினைவு கூர்ந்தாள். செயற்கையான கோபத்தை வரவழைத்துக் கொண்டு,

"அந்த காபியை நீங்க குடிக்கக்கூடாது. அதை என்கிட்ட திருப்பி கொடுங்க" என்று அவனிடமிருந்து அதை பிடுங்குவது போல் பாசாங்கு செய்தாள்"

தன்னிடமிருந்து குவளையை பறிக்க முயன்ற அவளது இரண்டு கரங்களையும் தன் வலது கையால் பற்றிக்கொண்டு, மனதை மயக்கும் புன்னகை சிந்திய படி, தன் இடது கையால் ஆவாசமாய் அந்த காப்பியை பருகினான் ருத்ரன்.

"குடிக்காதீங்கன்னு சொல்றேன்ல?" என்ற அவள் கத்தலை அவன் காதில் வாங்கவில்லை.

முகத்தை சுளுக்கு என்று அவள் வைத்துக் கொள்ள,

"இப்போ என்ன ஆச்சி? நீ என்னோட வைஃப் தானே?" என்று மீதியை குடித்து முடித்தான்.

குடித்து முடிக்கும் வரை அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அவள் கரங்களை விடுவித்து, குவளையை மேஜையின் மீது வைத்தான்.

"குட் காபி" என்றான்.

மற்றொரு குவளையை எடுத்து, அவனை ஏறிட்டும் பார்க்காமல் காபியை குடித்து முடித்தாள் சக்தி. தான் குடித்த காப்பியை, அவள் அவனைக் குடிக்க விடாமல் தடுத்த போதும் கூட, அவளிடம் ஏதோ ஒரு மாற்றத்தை உணரத்தான் செய்தான் ருத்ரன். பொய் என்றும் உண்மையாகி விட முடியாது அல்லவா, அது கோபமாகவே இருந்தாலும் கூட...! கோபமாக இருப்பதற்கும், கோபமாக இருப்பது போல் நடிப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்? அந்த வித்தியாசத்தை நன்றாகவே உணர்ந்தான் ருத்ரன். அவள் மறுபடியும் அங்கிருந்து தப்பிச்செல்ல திட்டம் தீட்டுகிறாளோ என்று எண்ணி, அவன் திகில் அடைந்தான்.

தொடரும்...

Fortsett å les

You'll Also Like

57.3K 1.4K 33
நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி
23.6K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
25.7K 1.1K 94
ஒரு விபத்தால் ஒருவொருக்கொருவர் உதவிக்கரம் நீட்டிக் கொள்ளும் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலையில் அந்த உதவிக்கரம்...
12K 1.2K 33
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...