🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

10.5K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
💙பாகம் 34
💙பாகம் 36
💙பாகம் 37
💙பாகம் 38
💙பாகம் 39
💙பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

💙பாகம் 35

164 23 16
By Sakthriyan

🔱பாகம் 3️⃣5️⃣

பூமி - SJ சூர்யா இதுக்கு மேல சொல்ல வாய்ப்பு கிடைக்காது போல....அதனால நான் என் காதலை சொல்ற நிலைமையில் இல்லைன்னு அவனே சொன்னான்... அதுக்கு நான் தான் அப்படி எல்லாம் மனச விட்டுறாத...உனக்குன்னு எழுதி வச்ச உயிர் உன்னையே வந்து சேரும் என்று ஆறுதல் சொனனேன்....

என பூமிநாதன் சொல்ல.... பூங்குழலியின் முகம் முழுதும் வினாக்கள் மட்டுமே நிறைந்திருக்க...

பூமி - என்ன பூங்குழலி என்ன ஆச்சு?

பூங்குழலி -

பூமி - ஏன் சட்டுனு அமைதியா ஆகிட்ட

பூங்குழலி - இல்ல பூமி நீங்க என்ன சொன்னீங்க...சூர்யா யாரையோ காதலிக்கிறாரா...

பூமி - ஒய் மக்கு....யாரையோ இல்ல.. SJ சூர்யா அவருடைய மாமன் மகளை சின்ன வயசுல இருந்து காதலிக்கிறானா...ஆனா அந்த பொண்ணு கிட்ட இவன் இது நாள் வரை காதலை சொன்னதே இல்லையாம்....சரி இவன்தான் சொல்லல ஆனா சொந்த மாமன் மகன்தான இவன் மனசுல இருக்குறது... அந்த பொண்ணுக்கு தெரியாமையா இருந்திருக்கும்

பூங்குழலி -

பூமி - ஒருவேள தெரிஞ்சும் ஒரு சில பெண்கள் எல்லாம் ஆம்பளைங்கள அலைய விடுறாங்களே அந்த மாதிரி அலையவிட்டு வேடிக்கை பாக்குறாங்களோ என்னவோ

பூங்குழலி - பூமி.. பெண்களைப் பற்றி அப்படியெல்லாம் தப்பா நினைக்காதீங்க...ஒருவேளை SJ.சூர்யா மனசுல இப்படி ஒரு நினைப்பு இருந்திருந்தால் கண்டிப்பா இதுக்கு நானே ஒரு தீர்வை சொல்லி இருப்பேனே

பூமி - என்ன சொன்ன...நீ சொல்லுவியா..ஏய் அவருடைய மாமன் பொண்ண அவரு காதலிக்கிறாரு.... இதுக்கு நீ என்ன தீர்வு சொல்ல முடியும்

பூங்குழலி - அது....நான்....இல்ல நான் வந்து...

பூமி - ஓ சூர்யா உன்னுடைய கேசை எடுத்து நடத்தினதால நீ அவருக்கு கிட்டத்தட்ட friend மாதிரி ஆயிட்ட போல.... but நட்பாய் இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல நம்ம அவங்களுடைய பர்சனல் லைஃப்ல தலவிட முடியாது குழலி....அவன் வாழ்க்கையை அவன் தான் பாத்துக்கணும்...அந்த பொண்ண காதலிக்கிறேன்னு அவன்தான் போய் தைரியமா சொல்லணும்....அது வெற்றியா இருந்தாலும் சரி தோல்வியா இருந்தாலும் சரி அந்த நிமிஷமே அந்த விஷயத்தை பேசி கிளியர் பண்ணிக்கணும்....இல்லனா பாரு இத்தனை வருஷம் அந்த பொண்ண மனசுல நினைச்சுகிட்டு இருந்திருக்கிறான்....இப்போ ஏன்டா காதலை சொல்லலன்னு கேட்டா அதுக்கு வழி இல்லன்னு சொல்றான்...பாவம் தான் இல்ல குழலி

பூங்குழலி - ம் பாவம் தான்

பூமி - என்ன சொன்ன

பூங்குழலி - இல்ல நீங்க சொன்னதுக்கு நானும் ஆமான்னு சொன்னேன்...

பூமி - சரி சரி நானும் பாவம்தான்

பூங்குழலி - என்ன சொன்னீங்க

பூமி - பசிக்குதுமா வா சாப்பிடலாம்

பூங்குழலி - ம் வாங்க

என்று குழலி சொன்னவள் மனதில் SJசூர்யாவை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க....மேசை மேல் அனைவரும் இரவு உணவிற்காக காத்துக் கொண்டு இருந்த சமயம் சந்திரன் அவர்கள் அவர் அறையில் கையில் கைபேசியை வைத்து உற்று உற்றுப் பார்த்து இருந்தவரை பூமிநாதன் அழைக்க....

பூமி - அப்பா வாங்கப்பா,பசிக்குது பா, இன்னும் என்னப்பா பண்றீங்க

சந்திரன் - டேய் இருடா போன்ல சார்ஜ் இருக்கான்னு பார்க்கிறேன்

பூமி - அப்பா நீங்க அதை ஆன் பண்ணி ஆன் பண்ணி பார்க்கிறதிலேயே அந்த போன் உடைய சார்ஜர் போயிடும் போல....

ராஜன் - இப்போ போன்ல சார்ஜ் இல்லன்னா என்ன வந்துச்சு

சந்திரன் - டேய் போனும் சரி
நானும் சரி எப்பவும் ஃபுல் சார்ஜ்ல்ல இருக்கணும்....அப்பதான் எப்பவும் ஆக்டிவா இருப்போம் புரியுதா...

பூமி - புரியுதுப்பா புரியுது... இத்தனை நாள் அந்த போனை நீங்க சீண்டவே இல்ல... இன்னைக்கு இந்திரா அம்மா உங்களுக்கு எங்க போன் பண்ணிட போறாங்கன்னு நீங்க போனையே பார்த்துக்கிட்டு இருக்கீங்களா..

சந்திரன் - டேய் தெரியுது இல்ல... தெரிஞ்சே நீயும் மடப்பையன் மாதிரி கேள்வி கேட்காத நீ உக்காந்து சாப்பிடு நான் இதோ வரேன்

ஆனந்த் - என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க யாரு இந்திரா...

சந்திரன் - டேய் பேர் எல்லாம் சொல்லி கூப்பிட்ட வாய ஒடச்சிடுவேன்...அவங்கள மரியாதையா கூப்பிடனும்

ஆனந்த் - யாருன்னு தெரியாதவங்கள நான் எப்படி சித்தப்பா மரியாதையா கூப்பிடுறது

சந்திரன் - தெரியுதோ தெரியலையோ வயசுல பெரியவங்கள மரியாதையோட தான் கூப்பிடனும் புரியுதா

பூமி - புரியுது புரியுது நீங்க குடுக்குற ரெண்டு இட்லிக்கு என்னெல்லாம் பேச்சு வாங்கி கட்டிக்க வேண்டியதா இருக்கு

சந்திரன் - என்னது நீ இரண்டு இட்லி தின்றியா...மனசாட்சியோட சொல்லுடா ரெண்டு குண்டான் இட்லிய முழுங்குற

பூமி - அப்பா என்னப்பா நீங்க சாப்பிடுற விஷயத்தில் எல்லாம் இப்படி பேசக்கூடாது.. சரி சரி நீங்க வாங்க வந்து உட்காருங்க எல்லாரும் சாப்பிடலாம்....குழலி உட்காரு.. குழலி உன்னை தான்

பூங்குழலி - என்ன பூமி

பூமி - வா சாப்பிடலாம்

சந்திரன் - என்னம்மா உடம்பு சரியில்லையா ஏன் ஒரு மாதிரி இருக்க

பூங்குழலி - ஏதும் இல்ல மாமா

ராஜன் - என்னமா மருந்து போட்டியா

பூங்குழலி - இல்லப்பா சாப்பிட்டு தான் போடணும்

பூமி - அப்பா குழலி விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கவலைப்படாதீங்க.. வாங்க எல்லோரும் சாப்பிடலாம்

என்று பூமி சொன்னதும் அனைவரும் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்த வேளையில் சந்திரனின் கைபேசி அழைப்பு அவரை அழைத்த அடுத்த நொடி சந்திரன் கைபேசி அழைப்புக்கு உயிர் கொடுத்தவர்

சந்திரன் - ஹலோ சொல்லுங்க...

ஒருவன் - ஹலோ

சந்திரன் - என்ன வேணும் சார்

ஒருவன் - நீங்க ராஜாங்களா

சந்திரன் - இங்க பாரு இங்க ராஜாவும் இல்ல கூஜாவும் இல்ல யார் நீங்க

ஒருவன் - இல்ல மிஸ்டர் ராஜாவுடைய போன் நம்பர் தான் இது

சந்திரன் - சொல்றேன்ல இது ராஜா நம்பர் எல்லாம் இல்ல போனை வைங்க

பூமி - என்ன பா யார் போன்ல

சந்திரன் - எந்த மாக்கான்னு தெரியல..இந்த நேரத்தில் எவன் எவனோ போன் பண்றான்.. பண்ண வேண்டியவ பண்ண மாட்றா

பூமி - அப்பா ஏன் இப்படி புலம்புரிங்க.. இந்திரா அம்மாவுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்.. அவங்க போனதும் உங்களுக்கு எப்படி போன் பண்ணுவாங்க

சந்திரன் - டேய் இப்ப நான் என்ன குடும்பத்தை விட்டுட்டு என்கூட வானா சொல்றேன்...ஏதோ ஒரு நட்பின் ரீதியில இன்னைக்கு பார்த்தோமே பேசணும்னு போன் நம்பர் கொடுத்தேன்...ஏன் உடனே போன் பண்ணி பேசுறதுக்கு madame க்கு முடியாதா....

பூமி - அப்பா என்ன நீங்க சின்ன பிள்ளைத்தனமா இருக்கிறீங்க முதல்ல சாப்பிடுங்கப்பா

என்று பூமி சொல்ல இவர்கள் அனைவரும் இரவு உணவை சாப்பிட்டு முடிக்க

பூமி - குழலி உட்காரு... நான் போய் இதெல்லாம் எடுத்து சமையல் கட்டுல வச்சிட்டு வந்துடறேன்..

பூங்குழலி - இருங்க பூமி நானும் வரேன்..

பூமி - நீ உட்கார்..உனக்கு தான் கால் சரி இல்லல்ல..

பூங்குழலி - அதெல்லாம் இல்ல எனக்கு உடம்பு சரியாகிவிட்டது...வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்து வைக்கலாம்.

ஆனந்த் - நான் வேணா சேர்ந்து எடுத்து வைக்கட்டா. m

சந்திரன் - நீ சேர்க்க எல்லாம் மாட்ட.. வேணா வேனா நல்லா இருக்கிறவங்களை பிரிக்க வேணா செய்வ... அதனால ஒழுங்கு மரியாதையா மேல போய் படு போ..

ராஜன் - ஏன் சந்திரா...இப்போ தான் பூங்குழலிக்கு உடம்பு கொஞ்சம் பரவாயில்லல்ல...நம்ம ஏன் நாளைக்கு ஐயர போய் பார்த்து பூமி பூஜை போடுறதுக்கு தேதி குறிச்சுட்டு வரக்கூடாது.....

சந்திரன் - ம் ஆனா இப்போ இந்த ஒரு வாரத்துக்குள்ள பூமி பூஜை நடந்தா நம்ம எப்படி டா வெளியூருக்கு போக முடியும்..

ராஜன் - வெளியூரா.... யார் இப்ப வெளியூருக்கு போறாங்க..

சந்திரன் - அட வீணா போனவனே...என்ன நகைக்கடையில் இந்திரா சொன்னது மறந்துட்டியா.. நம்ம எல்லாம் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டூர் போலாம்னு சொன்னாளே

ராஜன் - அவங்க சொன்னா போதுமா.. நான் வரல

சந்திரன் - ஏன் வரல

ராஜன் - நான் எப்படிடா வரருது வேணும்னா நீ போயிட்டு வா..

சந்திரன் - அது எப்படி டா உன்ன விட்டுட்டு நான் போவேனா....

ராஜன் - இல்லையே நீ என்னை காரணம் இல்லாம கூப்பிட மாட்டியே...

சந்திரன் - உண்மையா தான் சொல்றேன்... வா எல்லாரும் ஒண்ணா போயிட்டு வருவோம்

பூமி - அப்பா இருங்க இருங்க முதல்ல இந்திரா மா உங்களுக்கு போன் பண்ணி உங்கள கூப்பிடட்டும்...அதுக்கப்புறம் நீங்க போகலாம்..

பூங்குழலி - உனக்கு வயித்தெரிச்சல் டா...அதெல்லாம் அவ போன் பண்ணுவா...
நீ பூங்குழலியை அழைச்சுக்கிட்டு போய் தூங்கு போ..

என்று சந்திரன் சொல்ல..அன்றைய தினம் முழுவதும் இந்திரா அவர்களின் அழைப்பிற்காக சந்திரன் காத்திருக்க...பூமியும் பூங்குழலியும் தன் படுக்கை அறைக்கு சென்றதும் பூமிநாதன் கதவை தாழிட்டபடி கட்டிலில் வந்து அமர... பூங்குழலி ஏதோ யோசனையில் அமர்ந்திருப்பதை பார்த்தவன்

பூமி - என்ன பூங்குழலி ஏன் ஒரு மாதிரி இருக்க....

பூங்குழலி - இல்ல சும்மாதான்....ஏன் பூமி நான் பாட்டிகிட்ட போன்ல பேசட்டா

பூமி - தேவி பாட்டிக்கிட்டியா

பூங்குழலி - ம்

பூமி - தாராளமா பேசு...அதை ஏன் என்கிட்ட கேக்குற....

பூங்குழலி - சரி பூமி..நான் தோட்டது பக்கம் போய் போன் பேசிட்டு வரேன்

பூமி - ஓ சரி சரி லேடிஸ் மேட்டர் போல..நான் வெளியே இருக்கிறேன் நீ பேசு

பூங்குழலி - ஐயோ இல்ல இல்ல நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க இருங்க

பூமி - இருக்கட்டும் குழலி....எனக்கும் என் பிரண்டு கார்த்திக் கிட்ட பேச வேண்டியது இருக்கு...நான் பேசிட்டு வரேன் நீ பாட்டி கிட்ட பேசு..

என்று பூமி சொன்னவன் பூங்குழலிக்கு இயல்பான நிலையை உருவாக்கியபடி அவன் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்ற அடுத்த நொடி பூங்குழலி தன் பாட்டி தேவியை அழைக்க

தேவி - ஹலோ என்னம்மா இந்த பாட்டி ஞாபகம் எல்லாம் வந்து இருக்கு எப்படி இருக்க..

பூங்குழலி - பாட்டி உங்களுடைய குத்தி காட்டுற பேச்சை எல்லாம் நிறுத்துங்க.. முதல்ல எனக்கு ஒரு சந்தேகம் அத தீர்த்து வைங்க..

தேவி - என்னமா உனக்கு என்ன சந்தேகம்

பூங்குழலி - பாட்டி விஷயம் தெரியுமா...உங்க பேரன் சூர்யா காதலிக்கிறாராம்..அதுவும் சொந்த மாமன் பொண்ணையே காதலிக்கிறாராம்

தேவி - என்ன மா சொல்ற..

பூங்குழலி - அட ஆமா பாட்டி....Mr. SJ. சூர்யா அவுங்க மாமன் மகளை காதலிக்கிறாராம்... எவ்வளவு திமிரு இந்த சூர்யாக்கு ....

தேவி - என்னமா புது புது கதை சொல்ற

பூங்குழலி - ஏன் உங்களுக்கு விஷயம் தெரியாதா...

தேவி - சத்தியமா தெரியாது....நீ ஏன் என் மேல கோவப்படுற..

பூங்குழலி - என்ன பாட்டி இது...இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா..

என்று சொன்ன பூங்குழலி பூமிநாதனின் இடம் விஷயமாக இவர்கள் அனைவரும் SJசூர்யாவை போய் பார்த்ததும், SJ சூர்யா இவர்களுக்காக அந்த இடத்தின் பிரச்சினையை சுலபமாக முடித்து தந்ததையும், SJ சூரியா தன் மாமன் மகளை காதலிக்கிறார் என்று பூமிநாதன் சொன்னதையும்,பூங்குழலி தேவி பாட்டியிடம் சொன்னதும்,தேவி பாட்டி வார்த்தை தடைப்பட்ட நிலையில் இவள் பேசும் வார்த்தைகளை கேட்டுக்கொண்டு இருக்க

பூங்குழலி - என்ன பாட்டி நான் பேசறது உங்க காதுல விழுதா இல்லையா.. ஏன் பதில் சொல்லாம அமைதியா இருக்கீங்க சொல்லுங்க... என்ன அப்போ உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா

தேவி - சத்தியமா தெரியாதுமா

பூங்குழலி - என்ன பாட்டி இது.. இப்ப என்ன பண்றது.. முதல்ல நீங்க என்ன ஏதுன்னு சூர்யாவை கூப்பிட்டு கேளுங்க

தேவி - ஏய் நீ ஏன் பயப்படுற.. இங்க பாரு... பூமி நாதனுக்கு நம்ம குடும்பத்தை பத்தி எதுவுமே தெரியாது.. அதனால கண்டிப்பா மத்த விஷயம் எல்லாம் தெரிய வர வாய்ப்பே இல்ல.... அதனால நீ உன் வாழ்க்கையை இயல்பாகவே கொண்டுட்டு போற வழிய பாரு..... இங்க நடக்குற விஷயத்தை நான் பார்த்துக்கிறேன் அப்புறம் முக்கியமான விஷயம்..

பூங்குழலி - என்ன பாட்டி

தேவி - இங்க பாரு... நீ என்னையும் சேர்த்து கொஞ்ச நாள் எந்த விஷயத்தையும் யோசிக்காம இரு..அதுதான் உனக்கு நல்லது....

பூங்குழலி - ஏன் பாட்டி இப்படி எல்லாம் சொல்றீங்க

தேவி - சொல்றத கேளுமா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு....யாரு யார வேணா காதலிக்கட்டும் அது அவுங்க அவுங்க மனசை பொறுத்தது... நம்ம சுத்தமா இருக்கோம் இல்ல அது போதும்....உனக்கு மற்றவை எல்லாம் தேவையில்லாத விஷயம்..

பூங்குழலி - எப்படி பாட்டி....பூமி சொன்னதும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..

தேவி - உனக்கு எப்படியும் இருக்க வேண்டாம்...ஒரு சில விஷயம் தெரிஞ்சும் தெரியாமல் இருப்பதும்..கேட்டும் கேட்காமல் இருப்பதும்... பார்த்தும் பார்க்காமல் இருக்கறதும் தான் உன் வாழ்க்கைக்கு நல்லது....அதனால நான் சொல்றதை கேளு இந்த விஷயத்தை நீ மறந்துடு....பூமி அடுத்த தடவை இத பத்தி பேசினா கூட அடுத்தவங்க விஷயத்தை நம்ம ஏங்க பேசணும்னு சொல்லிடு

பூங்குழலி - இல்ல பாட்டி எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா ஆயிடுது

பூமி - உன் மனச தூக்கி குப்பையில் போடு.. போ போய் ஒழுங்கா பூமிக்கு நல்ல பொண்டாட்டியா வாழற வழிய பாரு இதுக்கு மேற்பட்டு நீ இந்த விஷயத்தை பற்றி என்கிட்ட பேசவே கூடாது புரியுதா

என்று பாட்டி கட்டாயமாக சொன்னபடி கைபேசி அழைப்பை துண்டிக்க.. பூங்குழலியின் சிந்தையில் பூமிநாதன் SJசூர்யாவை பற்றி பேசிய வார்த்தைகள் மட்டுமே ஓடிக்கொண்டு இருக்க...சில நிமிடங்கள் கடந்த நிலையில் பூமிநாதன் கதவைத் தட்டிக்கொண்டு அறைக்குள் நுழைந்தவன்..

பூமி - என்னம்மா பேசிட்டியா

பூங்குழலி - ம் பேசிட்டேங்க

பூமி - பாட்டி எப்படி இருக்காங்க

பூங்குழலி - பாட்டி தாத்தா ரெண்டு பேருமே நல்லா இருக்காங்களாம்..

பூமி - சரி படுத்துக்கலாமா

பூங்குழலி - ஏன் பூமி... நாங்க என்ன பேசணும்னு எல்லாம் கேட்க மாட்டீங்களா

பூமி - ஏய் நீ என்ன ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி கேக்குற.... ஒரு விஷயம் உனக்கு என் கிட்ட சொல்லனும்னா நீயே சொல்ல போற.. அதை நான் ஏன் குழலி கேட்டு தெரிஞ்சுக்கணும்

பூங்குழலி - இல்ல பாட்டிகிட்ட சும்மாதான்

பூமி - போதும் குழலி..நீ என்ன பேசினன்னு இப்ப என்கிட்ட சொல்லணும் என்ற அவசியமே இல்ல புரியுதா....சரி இந்தா மாத்திரை போடு...

பூங்குழலி - பூமி pain எல்லாம் குறைஞ்சிடுச்சு.... வலி இல்லாமல் மாத்திரை போட்டா அது ஸ்டொமக் அப்செட் பண்ணிடும்...

பூமி - are u sure...அப்ப மாத்திரை வேண்டாமா?

பூங்குழலி - வேண்டாம் பூமி

பூமி - சரி படுத்துக்கோ....

பூங்குழலி - நீங்களும் படுங்க

என்று பூங்குழலி இயல்பாக சொன்னதும் பூமியும் பூங்குழலியும் ஒரே கட்டிலில் படுத்து இருக்க....

பூமி - குட் நைட் குழலி

பூங்குழலி - குட் நைட் பூமி

என்று சொன்னவர்கள் அந்த இரவை நல்ல முறையில் முடித்து மறுநாள் பொழுதை இன்பமாக வரவேற்க.... பூங்குழலியின் அறையில் பூமி குளித்து முடித்து விட்டு வெளியே வந்தவன்...

பூமி - குழலி நான் கோவிலுக்கு போயிட்டு பூமி பூஜை எப்ப போடலாம்னு கேட்டுக்கிட்டு வந்துடறேன்..

பூங்குழலி - இல்ல பூமி...அப்பாவும் மாமாவும் காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க

பூமி - என்னம்மா சொல்ற

பூங்குழலி - ஆமா நீங்க குளிக்க போயிருந்தீங்க இல்ல.... அப்பவே அவங்க கிளம்பி போயிட்டாங்க...இன்னும் பத்து நிமிஷத்துல அவங்களே வந்துடுவாங்க

என்று பூங்குழலி சொல்லி கொண்டு இருந்த சமயம்....ஆனந்த் பூமியை அழைக்க.. பூமி அந்த அறையில் இருந்து வெளியே செல்ல....பூங்குழலி அவள் அறையிலேயே இருந்தவளை ஆனந்த் எட்டி எட்டி பார்க்க...

ஆனந்த் - என்ன டா பூமி..எவ்வளவு நேரம் கூப்பிடுறது...ஏன் வெளியே வரல

பூமி - அண்ணன் நான் தான் வெளியே வந்துட்டேனே....நீ யாரை பார்த்து பேசிகிட்டு இருக்க

ஆனந்த் - இல்ல உன்ன பார்த்து தான் பேசுறேன்...

பூமி - என்ன அண்ண என்ன விஷயம்..

ஆனந்த் - இல்லடா என்னோட பிரண்டு ஊர்ல இருந்து வந்திருக்கான் அதனால இன்னைக்கு என்னால உன் கூட எங்கேயும் வர முடியாது...நான் போயி அவனை இங்கே அழைச்சிட்டு வந்துர்றேன்

என்று ஆனந்த் சொல்லிக் கொண்டிருந்த சமயம் சந்திரனும் ராஜனும் வீட்டிற்குள் நுழைந்தவர்கள்

சந்திரன் - இங்க பாரு இந்த வீட்ல உனக்கு இடம் கொடுத்து வச்சிருக்கறதே பெருசு.. இந்த பிரண்டு நண்டு எல்லாம் இங்க வரக்கூடாது.. உனக்கு தேவையா வெளியே போய் உன்னுடைய நட்பை வளர்த்துக்கோ..நீ இங்க யாரையும் அழைச்சிட்டு வரக்கூடாது

என்று சந்திரன் கடுமையாக சொன்னதும் ஆனந்த் கோவத்தோடு வீட்டை விட்டு கிளம்ப...

சந்திரன் - பூமி இன்னும் ஒரு வாரத்துல நல்ல நாள் இருக்காம்.. அன்னைக்கு பூமி பூஜையை வச்சுக்கலாம்

பூமி - சரிப்பா தாராளமா

ராஜன் - டேய் எனக்கு வீட்ல கொஞ்சம் வேலை இருக்குடா....மாப்ள நான் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்...அம்மாடி உனக்கு ஏதாவது வேணுமா?

பூங்குழலி - அப்பா அடுத்த வாரத்தில் இருந்து நானும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்.... அதனால எனக்கும் யூனிஃபார்ம் எல்லாம் தேவைப்படுது

சந்திரன் - ஏம்மா பேசாம இந்த வீக் end நம்ம எல்லாரும் கிளம்பி உங்க வீட்டுக்கு போயிட்டு அங்க ரெண்டு நாள் தங்கிட்டு வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணிட்டு அதுக்கப்புறம் நீ அங்க இருந்து அப்படியே உன் வேலைக்கு போ...ok வா

பூமி - ம் நல்ல ஐடியா அப்பா...அப்படியே செய்யலாமே..

என்று பூமிநாதனும் சொல்ல..இவர்கள் அனைவரும் அன்றைய தினத்தை இயல்பாக கடந்த நிலையில்.. அன்றைய இரவு மேகம் இருள் சூழ்ந்து வானத்தில் இருந்து மழை நீர் பூமி நிலத்தை நினைத்துக் கொண்டு இருந்த சமயம்.....பூங்குழலியின் நினைவிலும் ஏதேதோ எண்ணங்கள் தோன்றியபடி இவர்கள் அறையில் பூங்குழலி ஜன்னல் பக்கத்தில் நின்றிருந்தவள் அருகில் வந்த பூமி...........

பூமி - குழலி தூங்கலையா... குழலி உன்னை தான்...

என்று பூமி கேட்டதும்... ஜன்னல் கம்பிகளின் நடுவில் தன் கைகளை வெளியே நீட்டி மழை சாரல் தன் கரங்களை தொடும் உணர்வை ரசித்து கொண்டு இருந்த பூங்குழலி இயல்பாக பூமியை பார்த்தவள்

பூங்குழலி - என்ன பூமி கூப்பிட்டீங்களா

பூமி - என்ன.. madame க்கு தூக்கம் வரலையா

பூங்குழலி - இல்ல

பூமி - ஏன் என்னாச்சு..

பூங்குழலி - பூமி வெளிய மழை வருது

பூமி - ஆமா மழை வருது ஏன் அதுக்கு என்ன

பூங்குழலி - நம்ம வெளிய போகலாமா

பூமி - என்ன வெளிய போகணுமா

பூங்குழலி - ம்

பூமி - ஏன்

பூங்குழலி - எனக்கு மழையில ஒரு சின்ன walk போய் சூடா tea குடிக்க ஆசை

பூமி - என்ன madame சினிமா எதாவது பாத்திங்களா

பூங்குழலி - நான் என் ஆசையை சொன்னேன்

பூமி - உன் ஆசை ரசிக்கும் படி தான் இருக்கு... but

பூங்குலழி - என்ன

பூமி - இன்னொரு முறை போகலாமா

பூங்குழலி - ம்

பூமி - என்ன madame கோவமா

பூங்குழலி - அச்சோ இல்ல இல்ல.

பூமி - சரி படுத்துக்கோ

என்று பூமி சொன்னதும் பூங்குழலி மறுத்து பேசாமல் படுத்து கொள்ள...சில மணி நேரங்கள் கடந்த நிலையில் பூங்குழலி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை பூமி தட்டி எழுப்ப

பூமி - குழலி.... குழலி....

பூங்குழலி - ம்.... என்ன... என்ன பூமி

பூமி - எழுந்துடு

பூங்குழலி - என்ன

பூமி - எழுந்துடு மா

பூங்குழலி - பூமி அதுக்குள்ள விடிந்துடுதா

பூமி - இல்ல.... நீ வா நம்ம வெளிய போகலாம்

பூங்குழலி - வெளிய வா

பூமி - ம்

பூங்குழலி - ஐயோ வேணா வேணா பூமி...

பூமி - அட வா... நான் நம்ம ரூமை விட்டு தான் வெளிய போகலாம்னு சொல்றேன்

பூமி விடா பிடியாக பூங்குழலியை அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து போனவன்..

பூமி - வா குழலி மாடிக்கு போகலாம்

பூங்குழலி - மாடிக்கா

பூமி - ம் ஆமா மொட்டை மாடிக்கு

பூங்குழலி - ஏன் பூமி... அங்க ஏன்

பூமி - சொல்றேன் வா...

பூங்குழலியை...பூமி மாடிக்கு அழைத்து போக.... பூங்குழலி கால்களை தாங்கியப்படி படிகளை ஏற...

பூமி - படி ஏற முடியுதா.. இல்ல நான் தூக்கிட்டு போகவா

பூங்குழலி - பாரு டா.... நீங்க என்னை தூக்கிடுவீங்களா

பூமி - என்ன நீ.. நானெல்லாம் நிறைய வீர சாகசம் பண்ணி இருக்கேன் தெரியுமா.. நீ என்ன பூ போல இருக்க.. உன்னை நான் தூக்க மாட்டேனா..

பூங்குழலி - வேணா வேணா நான் நடந்தே வரேன் வாங்க

பூமியும் பூங்குழலியும் மொட்டை மாடிக்கு போக.... அங்கே அழகான பூச்செடிகள் மழையில் குளித்து கொண்டு இருக்கும் அழகை ரசித்த பூங்குழலி முகம் மலர...

பூமி - வாங்க madame... ஏன் அங்கேயே நிக்குறிங்க... நீங்க தானே மழையில நடக்கணும் சொன்னிங்க... வாங்க மழை வருது இல்ல நல்லா நடங்க... ஓடுங்க... ஆடுங்க.... அப்புறமா தூங்க கூட பண்ணுங்க..

பூங்குழலி - என்ன பூமி கிண்டலா

பூமி - ஏன்

பூங்குழலி - நான் ரோட்டுல WALK பண்ணனும்னு சொன்னேன்..

பூமி - ம் I KNOW குழலி... BUT நைட் நேரத்துல ஒரு ப்ரோப்லத்துக்கு நாமே வழி தேட கூடாது...

பூங்குழலி - என்ன PROBLEM

பூமி - இப்போ நம்ம ரோட்ல போய் மழையில நடப்போம்.... ஆளே இல்லாத tea கடையில நம்ம tea வாங்கி குடிப்போம்.. அந்த நேரம் பார்த்து தூரமா நின்னுகிட்டு ரெண்டு பேர் உன்னை போட்டோ எடுப்பாங்க... அப்போ நான் அவுங்கள ஏன்னு கேக்க போய் வாய் தகராறு கை கலப்புல முடியும்.. So இதெல்லாம் avoid பண்ண தான் இந்த பிளான்..

பூங்குழலி - பரவாயில்ல பூமி..நான் கூட மாமா பேசினதை வச்சு நீங்க ஒரு அம்மாஞ்சி ன்னு தான் நினைச்சேன்... ஆனா இப்போ தான் தெரியுது உங்க கண்ணாடி பின்னாடி இப்படி ஒரு அறிவு ஞானம் இருக்குன்னு

பூமி - ஏய் என்ன சொன்ன... அம்மாஞ்சியா... நான் உனக்கு அம்மாஞ்சியா.. இரு உன்னை...

பூங்குழலி - ஐயோ நான் இல்ல பா..

பூங்குழலி அவன் வசம் இருந்து மொட்டை மாடியின் மத்திக்கு ஓட.... அவளை இவன் துரத்தி பிடிக்க.... பூங்குழலியின் தேகத்தில் மழை நீர் பட்டதும் அவள் புதிதாக பூத்த மலரை போல மகிழ்ச்சி அடைந்தவளை துரத்தி வந்த பூமியின் கை பட்டதும் இவள் தேகம் சிலிர்த்து அவன் பிடியில் சிக்கி கொண்டவளின் கண்கள் வண்ணத்து பூச்சியின் சிறகை போல துடிக்க...

பூமி - மாட்டிக்கிட்டியா... உன் மாமாவுக்கும் உனக்கும் என்னை டீஸ் பண்றதே வேலையா போச்சு இல்ல

பூங்குழலி - நான் என்ன பண்ணேன்...

பூமி - ம் நீ ஏதும் பண்ணலையா

பூங்குழலி - ஹ்ம் ஹ்ம் இல்ல

பூமி - எனக்காக இவளோ அழகா பிறந்து இருக்கியே..இத விட நீ என்ன பண்ணனும்

பூங்குழலி - நான் அழகேல்லாம் இல்ல

பூமி - ம் ஆமா... நீ பேரழகு

பூங்குழலி - போதும் போதும்... நீங்க போய் ஓரமா நில்லுங்க....

பூமி - ஏன் நீங்க என்ன பண்ண போறீங்க

பூங்குழலி - நான் மழையில நடக்க போறேன்

பூமி - அப்போ நானும் நடக்குறேன்

பூங்குழலி - உங்களுக்கு சளி பிடித்தால்

பூமி - அதான் nurse பொண்டாட்டி இருக்காங்களே அப்புறம் என்ன

பூங்குழலி - ம் சரி எனக்காக மழையில நடக்க ஏற்பாடு பண்ணிட்டீங்க... இப்போ எனக்கு tea குடிக்கணும் போல இருக்கு... என்ன பண்ணுவீங்க

பூமி - just few mins baby... இரு வறேன்

பூமி மொட்டை மாடியில் இருக்கும் அறைக்குள் சென்றவன் கையில் falsk உடன் வெளியே வர...

பூங்குழலி - பூமி என்ன இது

பூமி - நீங்க தானே madame ஆசை பட்டிங்க... கொட்டுற மழையில ஒரு walk and tea குடிக்கணும்னு அதான் tea போட்டு மேல கொண்டு வந்து வச்சிட்டு உன்னை எழுப்பி இங்க அழைச்சுட்டு வந்தேன்

பூமியின் வார்த்தைகளை கேக்க கேக்க பூங்குழலியின் கண்கள் கலங்குவதை பூமி அந்த மழை நீரிலும் கண்டு கொண்டவன்

பூமி - ஏய் என்ன அழரியா

பூங்குழலி - இல்ல

பூமி - என்ன மா என்னாச்சு

பூங்குழலி - நான் சும்மா தான் கேட்டேன் பூமி... but நீங்க ஏன் இவ்வளவு மேனக்கேட்டு
இதெல்லாம் பண்ணீங்க

பூமி அவள் கண்ணங்களை தன் கரங்களால் தாங்க.... மேகத்தில் இருந்து வெளி வரும் மழை நீர் இவர்கள் தேகத்தை தொட்டு தழுவ...

பூமி - நீ என் பொண்டாட்டி குழலி.... நீ ஆசை பட்ட ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடமை உரிமை இது ரெண்டுமே எனக்கு தானே இருக்கு..

பூங்குழலி - thanks பூமி... உங்களோட ஒரு ஒரு செயலும் என்னை மெயிசிலிர்க்க வைக்குது...

பூமி - சரி சரி நீ பொறுமையா சிலிர்த்து போகலாம்... இப்போ இந்தா tea குடி..

பூங்குழலி - ம் நம்ம அங்க ரூம்ல போய் உக்காந்து tea குடிக்கலாம்

பூமி - ம் why not வா...

இருவரும் மொட்டை மாடியின் அறைக்குள் சென்றவர்கள் நண்பர்களை போல அந்த மழை சாரலை ரசித்தப்படி டீயை ருசிக்க ... பூங்குழலியின் விழிகள் இரண்டும் அசராமல் பூமியின் பிம்பத்தை உள் வாங்கி இருக்க....

பூமி - என்ன குழலி tea எப்படி இருக்கு

பூங்குழலி - செம்மையா இருக்கு....சுக்கு ஏலக்காய்ன்னு செம்ம டேஸ்ட் பூமி...

பூமி - சரி நீ முழுசா ஈரமா இருக்கிற... வா கீழ போகலாம்

பூங்குழலி - என்ன கீழயா...வேணா வேணா இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்

பூமி - சொன்னா கேளு மா.. நம்ம இன்னோர் முறை நீ ஆசைப்பட்டது போல ரோடு ல walk போகலாம் ok வா...

பூங்குழலி - மாட்டேன்... நான் இன்னும் கொஞ்ச நேரம் போய் மழையில நடக்க போறேன்...

பூமி - வேணா குழலி நான் சொல்றதை கேளு...

பூங்குழலி - முடியாது

பூமி - வேணா...நான் கோவப்பட்டேன் வை...

பூங்குழலி - என்ன பண்ணுவீங்க...

பூமி - வேணா குழலி...எனக்கு கோவம் வந்தா....என்ன பண்ணுவேன் தெரியுமா

பூங்குழலி - என்ன...அடிப்பீங்களா..

பூமி - ஏய் ச்சி ச்சி... பெண்களைன்னு இல்லம்மா... எனக்கு ஆம்பளைங்களை கூட அடிக்க பிடிக்காது

என்று பூமி சொன்னதும் பூங்குழலி அவள் நாக்கை கடித்தப்படி செல்லமான குரலில்

அடிக்க பிடிக்காதா இல்ல..

என்று பூமியை கேட்டதும்...

பூமி - ம் புரியல...

என்று மீண்டும் பூமி இவளை கேள்வி கேட்க... பூங்குழலி அவள் இருக்கையில் இருந்து எழுந்தவள் அவன் மூக்கை செல்லமாக பிடித்து...

இல்ல... SIR க்கு அடிக்க பிடிக்காதா....இல்ல என் மாமனார் சொன்னது போல அம்மாஞ்சி பையலுக்கு அடிக்க தெரியாதா..

என்று அழகாக அவள் கண்களை சிமிட்டி கேட்டதும் பொய் கோபத்துடன் பூமி அவன் இருக்கையை விட்டு எழுந்தவன்

பூமி - ஏய் என்ன சொன்ன இரு உன்னை...

என்று அவள் காதின் மடலை பிடித்தவன்...

பூமி - என்ன மறுபடியும் சொல்லு...

பூங்குழலி - ஆ... ஆ... வலிக்குது... ம்.. ம்.. வலிக்குது

பூமி - ஏய் ஏய் ஏன் அழுவுற நான்... நான் சும்மா தான் பிடிச்சேன்... வலிக்குதா..

என்று பூமி பயந்தப்படி கேட்க.... பூங்குழலி அவன் நெற்றியை தன் நெற்றியை கொண்டு முட்டியவள்..

பூங்குழலி - சும்மா சொன்னேனே.... என் அம்மாஞ்சி புருஷா....

என்று பூங்குழலி சொல்ல....பூமி அவளை துரத்த பார்க்க... உள்ளங்கை பிடியில் இருந்து தப்பித்த பட்டாம்பூச்சியாக மாறிய பூங்குழலி அந்த அறையை விட்டு வெளியே ஒடியவள்..

பூங்குழலி - நான் கீழே போறேன் புருஷா.... எனக்கு தூக்கம் வருது... நீங்க flask எல்லாம் எடுத்திட்டு சீக்கிரம் வாங்க Mr.அம்மாஞ்சி

என்று விளையாட்டாக சொன்ன பூங்குழலி மாடியில் இருந்து ஈர சேலையுடன் கீழே ஓட....

பூமி - இரு இரு உன்னை கீழ வந்து பேசிக்கிறேன்..

என்று தனக்குள் சிரித்து கொண்டே பேசிய பூமி கையில் பிளாஸ்க்கை எடுத்து கொண்டு அறையின் கதவை பூட்டி கொண்டு இருக்க...
அதே சமயம் மன மகிழ்ச்சியில் நிறைந்து இருந்த பூங்குழலி மான் குட்டியை போல துள்ளி குதித்து கீழே ஓடியவள் தன் எதிரில் வந்த ஆனந்தை பார்த்ததும் சட்டென்று நின்றவள் அவனை கடந்து மெதுவாக செல்ல...குடி போதையில் இருந்த ஆனந்த்..

ஆனந்த் - ஏய் அழகி... இப்போ கூட நான் உன் நினைவாவே தான் டி இருந்தேன்....

என்று சொல்லிக்கொண்டே பூங்குழலியின் மேல் கை வைத்தவனின் கன்னத்தில் பூங்குழலி ஒரு அறை விட்டதும் ஆனந்த் படிக்கட்டில் இருந்து உருண்டு போய் கீழே விழுந்தவன் கழுத்தை வேகமாக மிதித்த பூங்குழலி ...

என்னை மறுபடியும் கொலைக்காரியா மாத்திடாத......

என்று பூங்குழலி கண்கள் இரண்டும் சிவந்து.. அனல் தெறிக்கும் வார்த்தையில் உச்சரித்த சொற்களை இரண்டு கண்களும் இரண்டு செவிகளும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தது....
🙏உங்கள் நான் 🔱







Continue Reading

You'll Also Like

166K 6.7K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
9.2K 696 43
ASHANGI'S FF FIRST TRY......Cop with Forensic 🚔👮🕵️ The girl looked at the boy longingly.. "Athana...antha ponnuku kalyanam pesiyachi...leave here...
107K 3K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
241K 6.2K 150
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...