🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

10.4K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
💙பாகம் 34
💙பாகம் 35
💙பாகம் 36
💙பாகம் 37
💙பாகம் 38
💙பாகம் 39
💙பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 25

162 31 14
By Sakthriyan

❤️பூமியின்🔱பூங்குழலி❤️

❤️பாகம் 2️⃣5️⃣

தேவி - ஏங்க சூர்யா போன இடத்துல ஏதோ பிரச்சனையாம்... அதனால போன காரியம் நடக்கலன்னு எல்லா வக்கீலும் நாளை காலை return வராங்கலாம்.... நம்ம வேற இங்கே இருக்கோம்... அப்ப நாளைக்கு சூர்யா வந்தா...????

தேவராஜ் - ஐயோ தேவி சத்தம் போட்டு பேசாத... ராஜன் ஏதோ பூமி உடைய வாக்குக்கு கட்டுப்பட்டு நம்ப ரெண்டு பேரையும் நம்ம பேத்தி கல்யாணத்தை பாக்குறதுக்கு சம்மதிச்சு இருக்கிறான்...இப்ப மட்டும் நம்ப சூர்யாவை பத்தி பேச்சை எடுத்தா அவன் மறுபடியும் கோபப்பட்டு அவன் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும்...அதனால என்ன நடந்தாலும் பரவாயில்லை நாளைக்கு நம் சித்ராவுக்கு கல்யாணம் நடக்க போறது சூர்யாவுக்கு தெரிய வேண்டாம்...

தேவி - ஏங்க இவுங்க கல்யாணம் நடக்க போற இடமே நம்ம வீட்டு தெருவில் இருக்கும் முருகர் கோவில்ல தான்..... நம்ம ராஜன்க்கு தெரியாம சித்ராவுக்கு நாளைக்கு கல்யாணம்ன்னு சூர்யாக்கிட்ட சொன்னா.... ராஜன்க்கு தெரியாம சூர்யா வந்து சித்ரா கல்யாணத்தை பார்க்க ஒரு வாய்ப்பு இருக்கும் இல்ல...

தேவராஜ் - தேவி உனக்கு என்ன பைத்தியமா....

தேவி - இல்லிங்க........சூர்யா தானே நம்ப சித்ராவுக்கு இத்தனை காலம் அம்மா அப்பாவா இருந்து.........

தேவராஜ் - ஐயோ நான் சொல்றதை கேளு தேவி.....நமக்கு இப்போ ராஜனின் உயிரும் சித்ராவின் வாழ்க்கை தான் முக்கியம்

பூங்குழலி - தாத்தா.... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...பாட்டி சூர்யாவுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கும் உடன்பாடு இல்ல...ஆனா அப்பா...

தேவராஜ் - அம்மாடி சித்ரா.. கொஞ்சம் பொறுமையா பேசும்மா..அவன் காதுல விழுந்தா பெரிய பிரச்சனை ஆயிடும்....உன் கழுத்துல பூமி கற்ற தாலி ஏறனும் என்றது அவனுடைய கடைசி ஆசை... அவன் அதுக்காக உயிரையும் கொடுப்பான்... அதனால நம்ப எந்த கதையை பற்றியும் அவன் எதிர்க்க பேச வேண்டாம்..நாளைக்கு உங்க கல்யாணம் நல்லபடியா முடியட்டும்.. மத்ததை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்

என்று தேவராஜ் சொல்ல...அதேசமயம் பூமி வாசலில் இருந்து உள்ளே வந்தவன்

என்ன பாட்டி போன் பேசிட்டீங்களா....நேரத்தோடு போய் படுங்க...நாளைக்கு காலைல சீக்கிரம் கோவிலுக்கு போகனும் இல்ல

என்று பூமி சொல்ல..... அதே சமயம் சந்திரன் அவர் அறையில் இருந்து வெளியே வந்தவர்

சந்திரன் - என்ன இங்க இன்னும் பேசிகிட்டு இருக்கீங்க.....

பூமி - இல்ல பா... அது...

சந்திரன் - டேய் பேசாம தாலி கட்டுற வரைக்கும் பேசிக்கிட்டே இரு...அப்படியே இங்கேயே தாலி கட்டிடலாம்....

பூமி - அப்பா

சந்திரன் - உன்ன நான் எப்ப மேல போக சொன்னேன்...ஏன் இன்னும் மேல போல..

பூமி - ஐயோ அப்பா.... எனக்கு ஆனந்த் ராஜ் அண்ணன் போன் பண்ணுச்சு... அதுகிட்ட தான் பேசிட்டு வரேன்

சந்திரன் - என்னவாம் அந்த ஆனந்துக்கு

பூமி - அவரால கல்யாணத்துக்கு வர முடியாதாம்.... so நாளைக்கு நைட்டு கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வந்துருவாராம்....

சந்திரன் - ஏன்டா கல்யாணத்துக்கு வராம நாளைக்கு நைட்டு வந்து இங்க என்ன கழட்ட போறானாம்

பூமி - என்ன அப்பா நீங்க மறந்துட்டீங்களா நம்மளுடைய காம்ப்ளக்ஸ் கட்ட போற விஷயமா ஆனந்த அண்ணன் இங்கேயே தங்கி அந்த காம்ப்ளக்ஸை கட்டிக் கொடுத்துட்டு போறேன்னு சொன்னதே பெரிய விஷயம்...

சந்திரன் - ஆமா அவன் ஒரு ஓட்டை என்ஜினீயர்....நீ அவன்கிட்ட போய் மாட்டுன பாரு.....

பூமி - அப்பா என்ன நீங்க இப்படி பேசுறீங்க.... நமக்காக ஊரு விட்டு ஊரு வந்து இந்த கட்டடத்தை முடிச்சு கொடுக்கிறேன்னு அவர் சொல்றதே பெரிய விஷயம்

சந்திரன் - டேய் நான் உன் பெரியப்பாவை தான் வர சொன்னேன்.....கடைசில அவர் இந்த தறுதலையை அனுப்பி வைக்கிறாரு......என்ன பண்றது ஏதோ அவர் முகத்துக்காக நானும் சரின்னு சொல்லிட்டேன்...

பூங்குழலி - என்ன மாமா என்ன ஆச்சு...

சந்திரன் - ஒன்னும் இல்லம்மா...இப்போ எனக்கு இருக்குற ஒரே சொந்தம் என் அண்ணன் ஒருவன் தான்....அவரு கட்டடக்கலையில் நல்ல பெயர் எடுத்த வல்லவரு.. அவரு நம்ம பூமி கட்டப் போற காம்ப்ளக்ஸ்க்கு நம்ம வீட்டிலேயே தங்கி அந்த கட்டட வேலையை முடிச்சு தரணும்னு நான் கேட்டுகிட்டேன்...ஆனா அவரால் உடம்புக்கு முடியலைன்னு அவருடைய பையனை அனுப்பி வைக்கிறாராம்.... அவன் நம்ம பூமிக்கு உறவு முறையில அண்ணன் வேணும்..... எங்க அண்ணன் வருவாருன்னு பார்த்தா இவனை அனுப்புறாரு.....அவர என்னால மறுத்து பேசவும் முடியல.....அவனை கல்யாண நேரத்துல வர சொன்னா...அந்த கிறுக்கு பையன் நாளைக்கு நைட்டு தான் வருவேன்னு சொல்லறான் போல...அதை பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கிறோம்

தேவராஜ் - ஏன் சந்திரா... இந்த ஊர்ல இல்லாத இன்ஜினியரா

சந்திரன் - ஆமாப்பா பேசாம இங்கேயே ஆளுங்கள வச்சு முடிச்சிருக்கலாம் நாங்க பூமியுடைய கல்யாண விஷயமா என் பெரியப்பா கிட்ட பேசும்போது அவரு ஆனந்த் இந்த ஊர்ல சும்மா சுத்திக்கிட்டு இருக்கான் இவன கூப்ட்டு வேலை கொடுன்னு சொல்லிட்டாரு..மறுப்பு பேச முடியல அதான் நானும் கிளம்பி வர சொல்லிட்டேன்...அந்த வீணா போனவன் என்னடானா கல்யாணத்துக்கு வரல போல

தேவி - ஐயோ அப்ப உங்க சொந்தத்துல இருந்து யாரும் கல்யாணத்துக்கு வரலையா

சந்திரன் - இல்ல அம்மா....நம்ம நம்ம வீட்டு அக்கம் பக்கத்தினர் மட்டும் தான்....ஆனா நாளைக்கு யார் வந்தாலும் வரலைனாலும் பூமி பூங்குழலி கல்யாணம் நடந்தே ஆகும்

என்று சந்திரன் சொல்ல... அன்றைய இரவு பூமிநாதன்..மறுநாள் பூங்குழலியின் கழுத்தில் தாலி கட்ட போகும் தருணத்தை எண்ணியபடி மனதளவில் மகிழ்ந்து மாடிக்கு செல்ல... கலக்கம் நிறைந்து மனதோடு இவர்கள் அனைவரும் உறங்க போக........
சித்ராவிற்கு மட்டும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் கையில் தன் கைபேசியை எடுத்தப்படி தன் பாட்டியை அழைக்க..

பூங்குழலி - பாட்டி... பாட்டி

தேவி - என்ன மா என்னாச்சு

பூங்குழலி - ஏன் பாட்டி நான் வேணும்னா சூர்யாவுக்கு ஒரு வாய்ஸ் message வைக்கவா

தேவி - என்னனு

பூங்குழலி - நாளைக்கு காலையில எனக்கு ஏழு மணிக்கு முருகர் கோவில்ல கல்யாணம் நடக்குது... உன்னோட ஆசிர்வாதம் எனக்கு வேணும்... அதனால நீ கோவிலுக்கு வான்னு மெசேஜ் வைக்கவா

தேவி - வேணா மா... உன் அப்பனுக்கு தெரிந்தா சாமி ஆடிடுவான்... அதனால இப்போதைக்கு சூர்யாவுக்கு எதுவும் தெரிய வேணா....

பூங்குழலி - ஆனா சூர்யா என்னை தப்பா நினைச்சுட்டா..

தேவி - உன் சூர்யாவாது...... உன்னை தப்பா நினைக்கிறதாவது.... அதெல்லாம் ஒன்னும் ஆகாது மா.. நீ நிம்மதியா படு... விடிந்தா கல்யாணம்... இந்நேரம் உன் அம்மா இருந்து இருந்தா உனக்கு நலங்கு வைத்து எல்லா சடங்கும் சீரும் சிறப்புமா பண்ணி இருப்பா...ஹ்ம் என்ன பண்ண சொல்ற... இப்போ பாரு இந்த வீட்ல ஒரு பந்தக்கால் கூட நட முடியல.... உன் அப்பன் எதுக்குமே நேரம் தராமல் உன் கல்யாணம் நடந்தா போதும்ன்னு நினைக்கிறான்

என்று தேவி கண்கள் கலங்கிய நிலையில் சொன்னதும்... பூங்குழலியின் கண்களும் கலங்கியப்படி தன் பாட்டியின் மடியில் படுத்தவள்... கலக்கமான குரலில்

பாட்டி அப்பா என் கழுத்துல தாலி எரினா போதும்... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்ன்னு தப்பா நினைக்கிறாரு... ஆனா அது தான் பிரெச்சனையின் ஆரம்பம் என்று அவருக்கு எப்படி நான் புரிய வைப்பேன்

என்று சித்ரா மீண்டும் கண்கள் கலங்கியடி சொன்னவளின் கூந்தலை வருடிய தேவி பாட்டி சாந்தமான குரலில்

உண்மை தான் மா... நாளை போல பூமிக்கு நம்ம எல்லாம் ஒரே சொந்தம் தான் எல்லோரும் சேர்ந்து அந்த பிள்ளைக்கிட்ட பொய் சொல்லி இருக்கோம்ன்னு அவருக்கு தெரிந்தால் அவர் மனசு எவ்வளவு கஷ்டப்படும்

என்று தேவி கேட்டதும்.... கட்டிலில் ஒரு பாதி ஓரத்தில் படுத்து இருந்த தேவராஜ் இவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டு இருந்தவர்

ஆமா மா சித்ரா... இன்னைக்கு கூட பூமி தம்பி எனக்கு பொய் சொன்னா பிடிக்காது... தாம்பத்திய வாழ்க்கையின் அஸ்திவாரம் நம்பிக்கை தான்னு சொல்லும் போது எனக்குமே ஒரே கலக்கமா தான் இருந்துச்சு

என்று தேவராஜ் அவர் பங்குக்கு புலம்ப.... பூங்குழலி மீண்டும் பயந்தவள்

பூங்குழலி - ஏன் தாத்தா பேசாம நான் மாடிக்கு போய் பூமி கிட்ட நடந்த எல்லா உண்மையையும் சொல்லிடவா

தேவி - என்ன சொல்ல போற...

பூங்குழலி - நான் ஜெயிலுக்கு போனது... நீங்க யாரு... தாத்தா யாரு... சூர்யா யாரு.... நான் எதுக்காக பொய் சொன்னேன்.... எதுக்காக எங்க அப்பா உங்கள எல்லாம் ஒதுக்கி வச்சி இருக்காருன்னு எல்லா உண்மையையும் சொல்லிடவா

தேவராஜ் - சொல்லிட்டு..... சொல்லு மா சொல்லிட்டு என்ன பண்ண போற.... நீ இந்த உண்மையை சொல்லி உங்க கல்யாணம் நின்னுட்டா உன் அப்பன் உசுரோட இருக்க மாட்டான்....

பூங்குழலி - 🙄

தேவி - ஆமா சித்ரா நடக்குறது நடக்கட்டும் நீ நிம்மதியா தூங்கு டா.... உன் அம்மா ஆசிர்வாதம் உனக்கு இருக்கு... வா வந்து படு...

என்று தேவி பாட்டி சொல்ல....இவர்கள் மூவரும் மனதில் பல்லாயிரம் குழப்பதுடன் படுத்து இருக்க.... சில மணி துளிகள் கடந்த நிலையில் பூங்குழலிக்கு பூமியிடம் இருந்து மெசேஜ் வர... அதை எடுத்து வாசித்த பூங்குழலியின் இதலோரத்தில் புன்னகை பூக்க....
அந்த குறுஞ்செய்தியில் எழுதி இருந்தது...

பூமி - HI குழலி...தூங்கிட்டியா...????

என்று பூமி casual ஆக ஒரு மெசேஜ் அனுப்ப...... ஏனோ பூங்குழலிக்கு அவன் குறுஞ்செய்தியை கண்டு குறுன்னகை புரிந்தவள் சட்டென்று அவனுக்கு பதில் தர....

பூங்குழலி - ம் ஆமா தூங்கிட்டேன்.... தூக்கத்துல தான் மெசேஜ் பண்றேன்

என்று பூங்குழலி அவள் பங்குக்கு message அனுப்ப....சட்டென்று பூமி பூங்குழலியை கைபேசி மூலம் அழைக்க.... இதனையே எதிர்பார்த்த பூங்குழலி போர்வைக்குள் தன்னை முழுகி கொண்டவள் அந்த அழைப்புக்கு பொறுமையாக பதில் கொடுக்க

பூமி - குழலி......

பூங்குழலி - சொல்லுங்க பூமி

பூமி - ஏன் இன்னும் தூங்கலையா

பூங்குழலி - புது இடம் அதான் தூக்கம் வரல.

பூமி - தாத்தா பாட்டி என்ன பன்றாங்க

பூங்குழலி - அவுங்க படுத்துட்டாங்க.... சரி நீங்க ஏன் இன்னும் தூங்கலையா

பூமி - இல்ல... தூக்கம் வரல...

பூங்குழலி - ஏன் தூக்கம் வரல

பூமி - ஏன்னு உனக்கு தெரியாதா

பூங்குழலி - தெரியாம தானே கேக்குறேன்

பூமி - நாளைக்கு விடியலை நினைச்சா ஒரே பதட்டமா இருக்கு

பூங்குழலி - ஏன் நாளைக்கு என்ன

பூமி - ம் நாளைக்கு எனக்கு கல்யாணம்

பூங்குழலி - அப்படியா.... நாளைக்கு உங்களுக்கு கல்யாணமா....சொல்லவே இல்ல..... சரி சரி உங்க கல்யாணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

பூமி - ம் கிண்டல் பண்றியா

பூங்குழலி - பரவாயில்லையே கண்டு பிடிச்சிட்டீங்க

பூமி - சரி சரி நீ தூங்கு... நாளைக்கு காலையில சந்திப்போம்

பூங்குழலி - ம்

பூமி - குழலி

பூங்குழலி - ம்

பூமி - உன்கிட்ட ஒன்னு சொல்லணும்

பூங்குழலி - என்ன பூமி சொல்லுங்க

பூமி - உனக்கு japanese மொழி தெரியுமா

பூங்குழலி - ஹ்ம் ஹ்ம் தெரியாது... ஏன் கேக்குறிங்க

பூமி - சரி நான் ஒன்னு சொல்றேன் நீ அதை திருப்பி சொல்றியா

பூங்குழலி - என்ன சொல்ல

பூமி - அந்த "நிலா ரொம்ப அழகா இருக்கு" ன்னு சொல்லு...

பூங்குழலி - எந்த நிலா.... இங்கே எங்க இருக்கு நிலா....

பூமி - நீ நம்ம ரூம்ல படுத்து இருக்க இல்ல.... அங்கே right side window ல பாரு.... இங்க மொட்டை மாடியில நான் எப்படி தனியா இருக்கேனா அதே போல வானில் நிலவும் தனிமையா நிக்கும்..... அந்த நிலவை பார்த்து... நிலா ரொம்ப அழகா இருக்குன்னு சொல்லு....

பூங்குழலி தன் போர்வையை விலக்கி.. அவள் விழிகளை ஜென்னாலோரத்தின் வழியே தெரியும் வானில் வட்டமாக காயும் நிலவினை பார்த்தவள்

பூங்குழலி - ஆமா... இங்க இருந்து பார்த்தா அழகான நிலவு தெரியது தான்... ஆனா நீங்க ஏன் அந்த நிலவை பற்றி இப்போ பேச சொல்றிங்க....

பூமி - அட.... நான் தான் சொல்றேன் இல்ல.... அந்த நிலா அழகா இருக்குன்னு நீ என்கிட்ட சொல்லு

பூங்குழலி - ஹ்ம் ஹ்ம் நான் மாட்டேன்..... நீங்க என்னமோ என்னை கொத்து விட பாக்குறீங்க...

பூமி - ஐயோ அதெல்லாம் இல்ல குழலி.... japanese மொழியில் அந்த நிலா ரொம்ப அழகா இருக்குன்னு சொன்னா...
💕நான் உன்னை காதலிக்கிறேன்னு💕அர்த்தம்....

பூங்குழலி - ஏ..... என்ன சொல்றிங்க

பூமி - ம்.... நான் உன்னை காதலிக்கிறேன்னு சொன்னேன்...

பூங்குழலியின் முகத்தில் கவலைகள் மறந்து புன்னகை பூக்கள் மலர தொடங்க.... வெட்கத்தில் அவள் விரல் நிகத்தில் உள்ள வர்ணம் எல்லாம் அவள் இதழ்களில் பதிய... மீண்டும் அவள் அந்த நிலவினை பார்த்தவள் அந்த நிலவின் வட்டத்துக்குள் பூமியை பொறுத்தி பார்த்தவள் தன்னை மறந்து அவன் முகத்தை கற்பனையில் ரசிக்க தொடங்க..... இருவரும் சில நொடி மௌவனத்தை உடைத்தவர்கள்

பூமி - குழலி லைன் ல இருக்கியா

பூங்குழலி - ம் இருக்கேன்

பூமி - சரி இப்போ சொல்லு

பூங்குழலி - என்ன சொல்லணும்

பூமி - நிலா அழகா இருக்குன்னு சொல்லு

பூங்குழலி - ஹ்ம் ஹ்ம் நான் சொல்ல மாட்டேன்

பூமி - ஏன் அப்ப நீ என்னை love பண்ணலையா

பூங்குழலி - ம் இப்போதைக்கு என்கிட்ட உங்க கேள்விக்கு உண்டான ஒரே பதில்...

பூமி - என்ன..

பூங்குழலி - அது... நான்

என்று பூங்குழலி அவனிடம் ஏதோ சொல்ல வருவதற்குள் பூங்குழலியின் ரூம் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க

பூங்குழலி - பூமி மாமா தான் கதவை தட்டுறாரு போல .

பூமி - ஐயோ நான் தூங்கிட்டேன்னு சொல்லு......

பூங்குழலி - ம் நான் போனை cut பண்றேன்

பூமி - குழலி குழலி

பூங்குழலி - ம்

பூமி - கூடிய சீக்கிரம் உன் கண்ணுக்கும் அந்த நிலவு அழகா தெரியும்..... அப்ப நீ என்கிட்ட அந்த மூணு வார்த்தையை சொல்லணும் புரியுதா

பூங்குழலி - ம் பாப்போம்

பூமி - சரி சரி அப்பா கதவை உடைச்சுகிட்டு உள்ளே வந்துடுவாரு நான் போனை வைக்கிறேன்...

பூங்குழலி - ம்

பூமி - gud n8

என்று சொன்ன பூமி அவன் கைபேசி அனைப்பை துண்டிக்க..... பூங்குழலி சிரித்தபடியே அவள் இருக்கும் அறையின் கதவை திறக்க.... வாசலில் ராஜன் தலையில் கட்டுடன்...கண்களில் கண்ணீருடன் நின்று இருக்க... அவரை கண்டதும் பூங்குழலி குழம்பிய மனநிலையில்

பூங்குழலி - என்னப்பா என்ன ஆச்சு நீங்க இன்னும் தூங்கலையா...தலை வலிக்குதா

ராஜன் - இல்லம்மா தலை வலி எல்லாம் இல்ல மனசுல இனம் புரியாத ஒரு சந்தோஷம் அதன் கூடவே ஒரு சின்ன பயம்

பூங்குழலி - என்னப்பா.... உங்க சந்தோஷத்துக்கு காரணம் என்னன்னு எனக்கு தெரியும்.....ஆனா எதுக்கு பயப்படுறீங்க

ராஜன் - என் பயம் என்னன்னு உனக்கு தெரியாதா

பூங்குழலி - தெரியும்பா பயப்படாதீங்க நீங்க ஆசைப்பட்ட மாதிரியே எனக்கு நாளைக்கு கல்யாணம் நடக்கும்...நீங்க அதை கண்ணார பாப்பிங்க

ராஜன் - அப்பா உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேனாமா

பூங்குழலி - இல்லப்பா இந்த நொடி வர நீங்க எனக்காக தானே இருக்கீங்க....

ராஜன் - அது உனக்கு தெரியுதா

பூங்குழலி - தெரியாம என்னப்பா... தெரியும்.... உங்களை எனக்கு நல்லாவே தெரியும்... அம்மா இறந்ததுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே நீங்க தானே..

ராஜன் - நான் சாகுற வரைக்கும் அப்படி தான் இருப்பேன் மா

பூங்குழலி - தெரியும் பா

ராஜன் - சரி நேரத்தோடு தூங்கு... காலைல உனக்கு கல்யாணம் இல்ல...உன் கல்யாணத்தை பத்தி உனக்கு எவ்வளவோ கற்பனை இருக்கும்..ஆனால் என்னால உனக்கு அவசர அவசரமா கல்யாணம் நடக்குதில்ல

பூங்குழலி - அப்பா எனக்கு எல்லாம் கல்யாணம் நடக்கும் என்று நான் நினைச்சு கூட பார்க்கல உங்களுடைய பிடிவாதத்தால தான் நாளைக்கு எனக்கு கல்யாணமே நடக்க போகுது..

ராஜன் - ஏன்மா உனக்கு பூமி மாப்பிள்ளையை...

பூங்குழலி - ஐயோ இல்லப்பா அவரை விட எனக்கு ஒரு நல்ல துணையை அந்த கடவுளால கூட கொடுக்க முடியாது....எனக்கும் இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம் பா...

ராஜன் - சந்தோஷமா....நீ போய் நிம்மதியாக தூங்கு..

என்று ராஜன் சொல்ல இவர்கள் அனைவரும் நிம்மதி இருந்தும் இல்லாமலும் கண்ணுறங்க...மறுநாள் காலைப் பொழுது மலர்ந்த நிலையில்.. இவர்கள் அனைவரும் அக்கம் பக்கத்தினரை அழைத்து கொண்டு  காரில் முருகர் கோவிலுக்கு செல்ல.....

சந்திரன் - அம்மா..

தேவி - சொல்லு சந்திரா

சந்திரன் - நீங்க இதோ நம்ப பக்கத்து வீட்டு பெண்களை வைத்து பூங்குழலியை அலங்காரம் பண்ணி அழச்சிட்டு வாங்க....

தேவி - ம் சரி பா

என்று சொன்ன தேவி... பூங்குழலியை அழைத்து கொண்டு மணப்பெண் அலங்காரம் செய்யும் இடத்துக்கு போக.....

சந்திரன் - அடேய் மாப்ள இங்க வா

பூமி - என்ன அப்பா..

சந்திரன் - ரெடி ஆகல..

பூமி - அப்பா..நான் பட்டு வேட்டி பட்டு சட்டை தான் பா போட்டு இருக்கேன்....நான் ரெடியா தான் இருக்கேன்...

சந்திரன் - அதுக்குன்னு இப்பவே உன்ன தாலி கட்ட சொல்ல முடியுமா... நீ கிளம்பிடுவ டா என் மருமகள் கிளம்ப வேண்டாம்

பூமி - அப்பா...குழலி சாதா புடவையிலேயே அழகா தான் பா இருப்பா.. அவளுக்கு எதுக்கு மேக்கப் எல்லாம்

சந்திரன் - இருந்தாலும் அதெல்லாம் ஒரு பார்மாலிட்டி டா.. சரி என்ன இது உன் பிரண்டு யாரோ வரேன்னு சொன்னாங்க வரலையா

பூமி - எனக்கு இங்க ரெண்டு friend தான்.....ஒருத்தவன் work விஷயமா வெளியூர் போயிருக்கான்.....இன்னொரு பிரிண்ட் கோயிலுக்கு வரேன்னு சொல்லி இருந்தான்..... அதோ அங்க வரான் பாருங்க.....டேய் கார்த்திக்..... இந்த பக்கம் வா

சந்திரன் - நீ உன் நண்பனை பாரு... நான் ராஜன்கிட்ட போய் தாலி வாங்கிட்டு வந்து ஐயர் கிட்ட தரேன்

என்று சொன்ன சந்திரன் அந்த இடத்தில் இருந்து ராஜனை பார்க்க செல்ல.....SJ.சூர்யா மற்றும் பூமியின் நண்பன் கார்த்திக்..பூங்குழலி பூமியின் திருமணத்திற்கு வந்தவன்

கார்த்தி - ஹாய் பூமி..... வாழ்த்துக்கள் டா......என்னடா உனக்கு கல்யாணமுன்னு சொன்ன.... but இங்க என்ன சொந்த பந்தம்ன்னு ஒரு 10 பேர் கூட இல்லையே

பூமி - இல்லடா இது ஒரு அவசர கல்யாணம்.. அதான் பக்கத்து அக்கத்து வீட்ல இருக்கறவங்களை மட்டும் கூப்பிட்டு அவங்க முன்னிலையில் கல்யாணத்தை நடத்துறோம்..

கார்த்தி - அப்படி என்ன அவசரம்..

பூமி - அது ஒரு ஜாதக பிரச்சனை டா.....சரி அத விடு... சூர்யா மட்டும் இந்த நேரத்தில் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் இல்ல.... ஆமா சூர்யா வர எத்தனை மாசமாகும் ?

கார்த்தி - டேய் உனக்கு விவரம் தெரியாதா.. அவன் போன இடத்துல ஏதோ பிரச்சனையாம்.....அதனால வக்கீல்ங்க எல்லாரும் ரிட்டர்ன் வராங்க....நேத்து நைட்டே எனக்கு சூர்யா மெசேஜ் அனுப்பிச்சுட்டேன்...

பூமி - என்ன கார்த்தி சொல்ற... அப்ப அவனும் ரிட்டர்ன் வந்துகிட்டு இருப்பானா

கார்த்தி - அநேகமா இன்னைக்கு அவன் இங்க தான் இருப்பான்

பூமி - really...அப்போ அவனுக்கு call பண்ணேன்... நான் அவனை என் கல்யாணத்துக்கு போன்ல invite பண்றேன்

கார்த்தி - hei இப்போவா invite பண்ண போற....பரவால்ல விடு கல்யாணம் முடிஞ்ச உடனே ஒரு நாள் நம்ப போன் பண்ணிட்டு உன் wife கூட அவன் வீட்டுக்கு போகலாம்.....

பூமி - no no அவன் தான் அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பான்..... நான் இல்லாம உனக்கு கல்யாணம் நடக்காதுன்னு... so அதுக்கேற்ற மாதிரி அவன் இப்போ நம்ம ஊருல தானே இருக்கான்.... நீ உன் போன்ல இருந்து அவனுக்கு call பண்ணு... நான் அவன்கிட்ட பேசி அவனை எப்படியாவது கல்யாணத்துக்கு வர வைக்கிறேன்

என்று பூமி சொல்ல.... கார்த்தி SJ வுக்கு call பண்ண..... நீண்ட நேரம் ரிங் போன பிறகும் SJ callai எடுக்க தவறியதால்.. கார்த்திக் callai cut செய்தவன்

கார்த்தி - இல்ல டா அவன் call attend பண்ணல....

பூமி - ok அவன் miss call பார்த்துட்டு உனக்கு call பண்ணா இந்த கோவில் adress சொல்லி அவனை என் marriage க்கு வர சொல்லு...

கார்த்தி - ம் சரி..... ஆமா எங்கடா கல்யாண பொண்ணு

பூமி - மேடம் ரெடியாயிட்டு இருக்காங்க..

கார்த்தி - எப்ப முகூர்த்தம்..

பூமி - இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு டா..... இங்க தாலி கட்டிட்டு....நேரா ரெஜிஸ்டர் ஆபீஸ் ல போயிட்டு ரிங் மாற்றிட்டு register பண்ணிட்டு கிளம்ப வேண்டியது தான்......

கார்த்தி - பரவாயில்ல டா.. இந்த காலத்துல அப்பா அம்மா முன்னிலையில் இவ்வளவு சிம்பிளா நடக்கிற கல்யாணம் ரொம்ப ஆச்சரியமா இருக்குடா

பூமி - நமக்கு யாருன்னே தெரியாத பல நூறு பேர் கூடி நின்னு ஆசீர்வதிக்கிறதும்.. அம்மாவும் அப்பாவும் ரெண்டே பேர் ஆசீர்வதிக்கிறதும் ஒன்னு தானே... ஆனா எங்க விஷயத்துல எனக்கும் சரி குழலிக்கும் சரி... அப்பா அம்மா friend சொந்தம் இது எல்லாமே எங்க ரெண்டு அப்பாங்க தான்..... இந்த கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் நடக்க காரணமும் அவுங்க தான்.....

என்று பூமிநாதன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில்....

ஐயர் - மன பெண்ணையும் மணமகனையும் அழைத்துட்டு வந்து மனவரையில் உக்கார வையுங்க

என்று ஐயர் சொல்ல....பூங்குழலியை மணப்பெண் கோலத்தில் கண்ட பூமிநாதன் அவளை பார்த்து ரசித்தவன் சிலை என நின்றிருக்க.....கார்த்திக் பூங்குழலியை பார்த்ததும்

கார்த்தி - டேய் இந்த பொண்ணு..... டேய் இந்த பொண்ண நானு

பூமி - என்னடா....

கார்த்தி - நான் SJ.வோட ஆபீஸ் ல ஒரு முறை இந்த பொண்ண பார்த்து இருக்கேன்...

பூமி - என்னடா சொல்ற...

சந்திரன் - பூமி வாப்பா... மாப்பிள்ளையை அழைச்சிட்டு வந்து மனமேடையில் உக்கார வைக்க சொல்ராங்க பாரு..

பூமி - ஆங் இதோ வரேன் பா... டேய் கார்த்தி இவரு தான் டா ஹீரோ... என் அப்பா

கார்த்தி - ஹாய் அங்கிள்

சந்திரன் - hi டூட்.... hru...??

கார்த்தி - 🙄🙄

பூமி - ஆமா டா என் அப்பாவுக்கு அவர யாரும் அங்கிள்ன்னு சொன்னா பிடிக்காது

கார்த்தி - ஒ sorry sorry

சந்திரன் - its ok... சரி வா பா வந்து முன்னாடி நில்லு.... டேய் பூமி நீ வா ஐயர் கூப்பிடுறாரு பாரு

என்று சந்திரன் பூமியை அழைக்க.. அதே தருணம் கார்த்திக்கின் cell போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டு கார்த்திக் அந்த கைபேசியை கையில் எடுத்தவன்

கார்த்தி - டேய் பூமி.... SJ தாண்டா...

சந்திரன் - யாரு பூமி

கார்த்தி - எங்க friend தான் அப்பா... actually இன்னைக்கு பூமிக்கு marriage ன்னு அவனுக்கு தெரியாது... அதான் அவனையும் கல்யாணத்துக்கு வர சொல்லலாம்னு பூமி அவனுக்கு call பண்ணினான்... but அவன் இப்போ தான் அந்த call க்கு answer பண்ண மறுபடியும் call பண்ணுறான்

பூமி - கார்த்தி நீ குடு போனை... நான் பேசுறேன்

சந்திரன் - பூமி நீ போய் மனமேடையில் உக்காரு பா.... அந்த புள்ளையே விவரத்தை சொல்லி உன் நண்பனை இங்க சரியான நேரத்துக்கு வர வைப்பான்

கார்த்தி - ஆமா டா நீ போய் மனமேடையில் உக்காரு நான் அவன்கிட்ட பேசுறேன்

என்று கார்த்திக் சொல்ல.... மணமகன் கோலத்தில் இருந்த பூமி நாதன் மனமேடையில் அழகிய பட்டுடுத்தி தலை குனிந்து அமர்ந்து இருக்கும் தன் மனைவியாக வர போகிறவள் இவள் தான் என்று இந்த நொடி வரை இவன் நம்பும் அவன் தங்கதாரகை பூங்குழலி அமர்ந்து இருந்தவள் அருகில் சென்று இவனும் அமர.....
இவர்கள் இருவரின் மனகோலத்தை பார்த்து பூங்குழலியின் தாத்தா பாட்டி மற்றும் அவளின் அப்பா முதற்கொண்டு அனைவரும் ஆனந்த கண்ணீர் சிந்த.... அதே சமயம் SJ விடம் கார்த்திக் cell போனில் பேசும் காச்சி....

கார்த்தி - ஹலோ SJ....

SJ சூர்யா - சொல்லுடா...

கார்த்தி - என்ன SJ ஊருக்கு வந்துட்டியா

SJ - ம் just now..... எல்லோரும் கார்ல வீட்டுக்கு போயிக்கிட்டு இருக்கோம்...
என்னாச்சு இந்த நேரத்துல call பண்ற

கார்த்தி - SJ நம்ம பூமிக்கு இன்னைக்கு கல்யாணம் டா....

SJ - டேய் நம்ம நாதனுக்கு இன்னைக்கு கல்யாணம் இல்ல நிச்சியம்ன்னு நினைக்கிறேன்

கார்த்தி - இல்ல SJ இன்னைக்கு அவனுக்கு திடீர் கல்யாணம்

SJ - really... எந்த மண்டபம்

கார்த்தி - நம்ம சங்கரதாஸ் வீதி முருகர் கோவில்ல

SJ - ஏய் என் தாத்தா பாட்டி வீடு கூட அங்கே தான் இருக்கு... actually இப்போ நான் அந்த street ல தான் இருக்கேன்

கார்த்தி - அப்ப உள்ள வந்து கல்யாணத்தை attend பன்னிட்டு போ SJ

SJ சூர்யா - ம் ok but நான் வரத அவன்கிட்ட சொல்லாத.... ok

என்று SJ சொல்ல.... கார்த்தி SJ வின் வருகைக்காக காத்து இருக்க....
மணமேடையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை பூமிநாதனும் பூங்குழலியும் மாறி மாறி உச்சரித்துக் கொண்டிருக்க..

ராஜனின் கண்கள் தன் மகள் கழுத்தில் மணமகன் கோளத்தில் தன் கண்ணெதிரில் அமர்ந்திருக்கும் பூமிநாதன் தாலி கட்ட போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்க.....

தேவி மற்றும் தேவராஜ் ஆகிய இருவரும் தன் பேத்தியின் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று கடவுளை பிராத்தனை செய்து கொண்டிருந்த வேளையில்.....

சந்திரன் ராஜன் தேவராஜ் மற்றும் தேவி ஆகிய நால்வரும் மணமேடையில் வந்து நிற்க.....

ஐயர் தேவியிடம் தாலியைத் தந்து சுற்றி இருக்கும் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கச் சொல்ல......

தேவி ஆசீர்வாதம் வாங்கியவர்கள் அந்த தாலியை ஐயரிடம் கொடுக்க...

ஐயர் தேங்காயில் சுற்றி இருந்த மாங்கல்யத்தை பூமிநாதனின் முன் நீட்டியவர்

ஐயர் - புள்ளையாண்டா தாலி எடுத்து பொண்ணு கழுத்துல கட்டுங்க.....கெட்டி மேளம் கெட்டி மேளம்

என்று அவர் உச்சரித்த அடுத்த நொடி...

"" ஒரு நிமிஷம் இருங்க"

என்று ஒரு குரல் கேட்க....... இவர்கள் அனைவரின் விழிகளும் ஒருவரின் உருவத்தை உள்வாங்கியது...

யார் அந்த ஒருவர்????

Continue Reading

You'll Also Like

395K 25.7K 125
An imaginary plot of Kathir and Mullai before their marriage!!!!! This story is completely a breezy one with no negatives , no twists and no turns...
25.6K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
131K 6K 25
சொல்லாத அவன் காதல் உணர்வாளா அவள்..
137K 4.8K 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வ...