🔱பூமியின் பூங்குழலி🔱

By Sakthriyan

10.5K 1.4K 1.1K

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕 More

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 9
பாகம் 10
பாகம் 11
பாகம் 12
பாகம் 13
பாகம் 14
பாகம் 15
பாகம் 16
பாகம் 17
பாகம் 18
பாகம் 19
பாகம் 20
பாகம் 21
பாகம் 22
பாகம் 23
பாகம் 24
பாகம் 25
பாகம் 26
பாகம் 27
பாகம் 28
பாகம் 29
பாகம் 30
பாகம் 31
பாகம் 32
பாகம் 33
💙பாகம் 34
💙பாகம் 35
💙பாகம் 36
💙பாகம் 37
💙பாகம் 38
💙பாகம் 39
💙பாகம் 40
பாகம் 41
பாகம் 42
பாகம் 43
பாகம் 44
பாகம் 45
P❤️R❤️O♥️M❤️O
பாகம் 46
பாகம் 47
பாகம் 48
பாகம் 49
பாகம் 50

பாகம் 8

232 30 23
By Sakthriyan

"தொடாதீங்க" என்று ஒரு குழந்தையின் குரல் கேட்டதும் பூமிநாதன் பூங்குழலியிடம் இருந்து தள்ளி செல்ல..பூங்குழலி சிரித்த முகத்துடன்

பூங்குழலி - என்ன பூமி பயந்துட்டீங்களா யாருன்னு தெரியல நம்ம பக்கத்து வீட்ல இருக்குற குட்டி பொண்ணு தான்

பூமி - ஏன் தெரியாம...பாப்பா இங்க வாங்க உங்க பேர் என்ன சொன்னீங்க

பூங்குழலி - என் பெயர் அம்மு

பூமி - ஒ....சரி அம்மு எப்ப வந்தீங்க

பூங்குழலி - நானும் பாப்பாவும் அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் நீங்க நல்லா தூங்கிக்கிட்டு இருந்தீங்க அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு டைனிங் டேபிளிலேயே உட்கார்ந்துட்டோம்

பூமி - அப்பா எங்க

பூங்குழலி - நம்ம ரெண்டு அப்பாவும் கடைக்கு போய் இருக்காங்க காபி ஆறிருக்கும் இருங்க வேற எடுத்துட்டு வரேன்

பூமி - நோ நோ பரவாயில்ல இதுவே போதும்

பூங்குழலி - இருக்கட்டும் இருங்க வேற காப்பி எடுத்துட்டு வரேன்

பூமி - வேணா குழலி நீ முதலில் இப்படி உட்காரு....என்ன ஆச்சு உனக்கு... இப்போ வயிறு வலி பரவாயில்லையா...

பூங்குழலி - என்ன வயிறு வலி... யாருக்கு வயிறு வலி

பூமி - உனக்கு தான்.... அப்பா சொன்னாரு உனக்கு வயிறு வலி வந்ததால தான் நேத்து நீ ஷாப்பிங் கூட முடிக்காமல் வீட்டுக்கு வந்துட்டேன்னு

பூங்குழலி - மாமா அப்படியா சொன்னாரு

பூமி - ஆமா ஏன் அப்போ உனக்கு வயிறு வலி இல்லையா

பூங்குழலி - இல்ல எனக்கு வயிறு வலி எல்லாம் இல்ல

பூமி - அப்போ ஏன் நேத்து அப்படி பிஹேவ் பண்ண...வேற ஏதாவது பிரச்சனையா

பூங்குழலி - அது வந்து எனக்கு அந்த ட்ரெய்லர்

என்ன பிரச்சனை சொல்லு குழலி..

என்று பூமி கேட்க.... பூங்குழலி ஏதோ சொல்ல வரும் முன் சந்திரன் உள்ளே நுழைய

சந்திரன் - என்னம்மா எந்திரிச்சிட்டானா உன் பூமிநாதன்.....என்னடா என் மருமகள் வீட்டுக்கு வந்தது கூட தெரியாம இப்படியா இழுத்து போத்திக்கிட்டு தூங்குவ

ராஜன் - எப்படி மாப்பிள்ளை இருக்கீங்க

பூமி - வாங்க அப்பா உட்காருங்க

ராஜன் - நல்லா தூங்குனீங்களா

சந்திரன் - எங்க...நைட் எல்லாம் குழலி ஞாபகத்திலேயே துரை தூங்கல அதான் காலையில இவ்வளவு நேரம் தூங்கி இருக்காரு...

ராஜன் - என்னமா நீ எழுப்பிட்டியா

பூங்குழலி - ஐயோ இல்லப்பா நான் அந்த ரூம் பக்கமே போகல அவரா தான் எழுந்து வந்தாரு.....மாமா என்னை நம்புங்க

சந்திரன் - சரி சரி நாங்க நம்புறோம்

பூங்குழலி - மாமா காப்பி எடுத்துட்டு வரட்டா

சந்திரன் - இல்லடா ம்மா காலையிலேயே நான் குடிச்சிட்டேன்....என்னடா அப்படி பாத்துக்கிட்டு இருக்க

பூமி - ஒன்னும் இல்லப்பா... இவங்க எப்ப வந்தாங்க

சந்திரன் - அரை மணி நேரத்துக்கு முன்னாடி தாண்டா வந்தாங்க..இன்னைக்கு என் மருமக வேலையை லீவு போட்டுட்டு உனக்காக வந்து இருக்கா

பூமி - எனக்காகவா

சந்திரன் - என்னடா கேள்வி இது?என் மருமக உன்னக்காக தான் வந்து இருக்கா

ராஜன் - சரி டா சந்திரா வா நம்ம கிளம்பலாம்

பூமி - அப்பா எங்க கிளம்புறீங்க

சந்திரன் - அடுத்த வாரம் உங்களுக்கு நிச்சயதார்த்தம்...இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு புடவை துணிமணி எல்லாம் வாங்க வேணாமா

பூமி - நிச்சியத்துக்கு யாரை எல்லாம் கூப்பிடனும்....

சந்திரன் - ஊரைக் கூட்டிலாம் நிச்சயம் பண்ணல நம்ப அக்கம் பக்கம் இருக்குறவுங்கள மட்டும் தான் கூப்பிட்டு இருக்கோம் அதனால பூங்குழலி வீட்டிலேயே நிச்சயத்தை வச்சுக்கலாம் ஓகேவா

பூமி - அப்பா நான் ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே

சந்திரன் - என்னப்பா சொல்லு

ராஜன் - என்ன மாப்ள சொல்லுங்க

பூமி - இல்ல நிச்சயதார்த்தம் இங்கே நம்ம வீட்ல நடக்கட்டும்

சந்திரன் - ஏம்பா

பூங்குழலி - அத்தை வாழ்ந்த வீட்டில் நடக்கட்டும்னு ஆசைப்படுறிங்களா

பூமி - உண்மை அது தான் குழலி

சந்திரன் - ராஜன் நீ என்ன சொல்ற

ராஜன் - என் மக நிம்மதியா வாழப் போற வீடு இதுதான்...மாப்பிள்ளை எப்படி சொல்றாரோ அப்படியே நிச்சயத்த வச்சுக்கலாம்

சந்திரன் - அம்மாடி நீ என்னமா சொல்ற

பூங்குழலி - பெரியவங்க நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான் மாமா

சந்திரன் - சரிமா ரொம்ப சந்தோஷம் அப்போ நானும் ராஜனும் போயி நிச்சயத்துக்கு தேவையான துணிமணி எல்லாம் வாங்கிட்டு வந்துடறோம்..நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருங்க

பூமி - அப்பா நாங்க வர வேண்டாமா?

சந்திரன் - நீங்க எதுக்கு வரணும்

பூமி - துணிமணி எல்லாம் செலக்ட் பண்ண தான்

சந்திரன் - ஏம்பா சின்ன வயசுல இருந்து உங்களுக்கு எது நல்லா இருக்கும்னு பாத்து பாத்து செஞ்ச எங்களுக்கு இப்பவும் எந்த டிரஸ் போட்டா நல்லா இருக்கும்னு தெரியும் நாங்களே டிரஸ் வாங்கிட்டு வரோம்.....கல்யாணத்துக்கு நம்ம காஞ்சிபுரத்துக்கு போயி பட்டுப்புடவை பட்டு வேஷ்டி எல்லாம் வாங்கிக்கலாம் ஓகேவா...ராஜன் வா கிளம்பலாம்

பூங்குழலி - மாமா டிபன் சாப்பிட்டு போங்க

சந்திரன் - இல்லம்மா உன் வருங்கால புருஷனுக்கு செஞ்சு கொடு நாங்க போகும்போது சின்ன பாப்பா கடையில இட்லி சாப்பிட்டு போறோம்

பூமி - அது யாருப்பா சின்ன பாப்பா

சந்திரன் - ம் உன்னோட சித்தி

பூமி - அப்பா

சந்திரன் - பின்ன என்னடா கேள்வி இது? சின்ன பாப்பா இட்லி கடை வெச்சிருக்கிற பாட்டி...ஏதோ போனா அவங்களுக்கு ஒரு பத்து ரூபாய் லாபம் கிடைக்கும்னு நினைச்சேன் நீ என்ன உங்க அம்மாக்கு மேல கேள்வி கேக்குற முதல்ல என் மருமக என்ன செஞ்சு கொடுக்கிறாளோ அவளுக்கு கூட மாட இருந்து உதவி பண்ணு புரியுதா

என்று சொன்னபடி ராஜனும் சந்திரனும் கடைக்கு கிளம்ப...பூங்குழலியும் பூமி நாதனும் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த நேரம்

அம்மு - என்ன ரெண்டு பேரும் பார்த்துகிட்டே இருக்கீங்க எனக்கு பசிக்குது டிபன் செய்யலையா

பூமி - பாப்பாக்கு என்ன பிடிக்கும்

அம்மு - ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுங்க..

பூங்குழலி - வாயாடி

அம்மு - மாமா அங்க ஒரு டிவி இருக்கே அதை நான் போட்டு பாக்கட்டா

பூமி - ஒ yes போங்க போய் டிவி பாருங்க

என்று பூமிநாதன் சொன்னதும் குழந்தை அம்மு அந்த இடத்தை விட்டு ஹாலை நோக்கி செல்ல

பூங்குழலி - என்ன டிபன் செய்யட்டும்

பூமி - எனக்கு பசிக்கல குழலி நீ சாப்டியா

பூங்குழலி - நான் வரும்போதே சாப்டுட்டு தான் வந்தேன்

பூமி - அப்போ எனக்கு எதுவும் வேண்டாம் காபி மட்டும் போதும்

பூங்குழலி - என்ன நீங்க காலையில சாப்பிட மாட்டீங்களா

பூமி - இல்லையே வேலை செய்யும் போதும் சரி நான் காலையில சாப்பிட மாட்டேன்

பூங்குழலி - காலைல சாப்பிடற சாப்பாடு தான் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க நான் தோசை ஊத்துறேன் நீங்க சாப்பிடுங்க

பூமி - இல்ல குழலி பரவால்ல

பூங்குழலி - பூமி....

பூமி - ம்...

பூங்குழலி - மாமா சொன்னாரு நேத்து கைய வெட்டிக்கிட்டிங்களாமே பாத்து வேலை செய்யக்கூடாதா

பூமி - பார்த்து தான் வேலை செஞ்சுகிட்டு இருந்தேன் என்ன ஒன்னு உன் நினைப்பில் இருந்த நான் கத்தியை கவனிக்கல

பூங்குழலி - என் நினைப்பு உங்களுக்கு ஏன்

பூமி - என்ன நீ இப்படி சொல்ற நீ எனக்கு பொண்டாட்டியா வரப்போறவ உன் நினைப்பு இல்லாமல் வேற யாரோட நினைப்பு இருக்கணும்

பூங்குழலியின் இதழ்கள் மலர்ந்து இருக்க......

பூமி - என்ன சிரிக்கிற

பூங்குழலி - ஒன்னும் இல்ல சரி நான் தோசை ஊத்தட்டா

பூமி - இல்ல எனக்கு காலையில டிபன் வேணாம்.

பூங்குழலி - அப்போ மதியான சாப்பாடு செய்யலாமா

பூமி - ம் செய்யலாமே

பூங்குழலி - என்ன செய்யலாம்

பூமி - நீ சமையல் எல்லாம் செய்வியா

பூங்குழலி - ஹலோ பாஸ் ஏன் என்ன பாத்தா சமைக்கிற பொண்ணு மாதிரி தெரியலையா

பூமி - அச்சோ நான் அப்படியெல்லாம் சொல்லல நீ நல்லா சமைப்பியான்னு தான் கேட்டேன்

பூங்குழலி - நான் சமைச்சு தரேன் நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க

பூமி - சொல்லிட்டா போச்சு... அப்புறம்

பூங்குழலி - ம் என்ன அப்புறம்

பூமி - நான் ஏதாவது உதவி செய்யட்டா

பூங்குழலி - ம் செய்ங்க

பூமி - வேணா வேணா.... ஏன் நான் உதவி செய்றன்ற பேர்ல என்னுடைய கை உன் மேல பட்டா அதுக்கு அப்புறம் அந்த குட்டிச்சாத்தான் தொடாதீங்க அப்படின்னு வந்து நிக்கிறதுக்கா

பூங்குழலி - ஏன் அப்படி எல்லாம் சொல்றீங்க. பாவம் அவ குழந்தை

பூமி - யார் சொன்னது... அம்மு பெரிய ஆளு.... அதனால தான் உன் அப்பாவும் என் அப்பாவும் அவங்கள உனக்கு துணையா விட்டுட்டு போயிருக்காங்க

பூங்குழலி - அதுக்காக எல்லாம் ஒன்னும் விட்டுட்டு போல இன்னைக்கு அவளுக்கு ஸ்கூல் லீவு அதனால தான் நான் அழைச்சிட்டு வந்தேன்

பூமி - நம்புறேன் madame....நீங்க என்ன சொன்னாலும் நான் நம்புறேன்.....சரி நீ இரு நான் இதோ வரேன்...

பூங்குழலி - எங்க போறீங்க

இரு வரேன்...

பூமிநாதன் வேகமாக தன் அறைக்குள் சென்றவன் அவன் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே வர

பூங்குழலி -  என்ன ஏன் இவ்வளவு வேகமா போனீங்க

பூமி - ம் உன்னோட போட்டோ என்கிட்ட இல்ல நம்ப ரெண்டு பேரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா

பூங்குழலி - போட்டோவா

பூமி - என்ன இவ்வளவு யோசிக்கிற

பூங்குழலி - இல்ல அதெல்லாம் வேணாமே

பூமி - சரி வேணாம் என்கூட சேர்ந்து நீ போட்டோ எடுக்க வேண்டாம்...அட்லீஸ்ட் உன்ன மட்டும் தனியா ஒரு போட்டோ எடுக்க வா.....துபாய்ல என் கூட வேலை செய்த என் friends எல்லாம் கேட்டாங்க நீ கட்டிக்க போற பொண்ணு எப்படி இருப்பாங்கன்னு அதான் உன் போட்டோவ அனுப்பலாம்னு

பூங்குழலி - கோச்சிக்காதீங்க பூமி... என்னுடைய ஃபோட்டோஸ் எல்லாம் யாருக்கும் அனுப்ப வேண்டாம்

பூமி - ஏன்... ...

பூங்குழலி - வேணாம்னா விடுங்களேன்

பூமி - சரி அது உன்னுடைய இஷ்டம்... ஆனா உன் போட்டோ எனக்கு கூட தர மாட்டியா

பூங்குழலி - என் போட்டோ உங்களுக்கு எதுக்கு sir

பூமி - என்னை கட்டிக்க போற என் குழலியோட போட்டோவ நான் போன்ல வச்சுக்கலாம் இல்ல

பூங்குழலி - அதான் நிச்சயதார்த்தம் ஆக போகுது இல்ல அப்ப எடுத்துக்கலாம்

பூமி - அப்போ இப்ப எனக்கு போட்டோவும் தர மாட்ட இல்ல

பூங்குழலி - அப்படியெல்லாம் சொல்லல ஆனா இப்போதைக்கு வேண்டாம்ன்னு தான் சொன்னேன்

பூமி - சரி உன் இஷ்டம்

பூங்குழலி - என்ன பூமி கோச்சிக்கிட்டிங்களா

பூமி - இல்ல இல்ல எனக்கு என்னமோ உன்னோட விஷயத்துல எதையும் கரெக்டா ஜட்ஜ் பண்ண முடியல

பூங்குழலி - என்ன ஜட்ஜ் பண்ண போறீங்க

பூமி - நீ ஒரு நேரம் ஒரு ஒரு விதமா பேசுற மாதிரி இருக்கு

பூங்குழலி - புரியல நான் எப்படி பேசுறேன்

பூமி - இல்ல ஒரு நேரம் நீ என்கிட்ட காதலா பேசுற மாதிரி இருக்கு

பூங்குழலி - அப்படியா

பூமி - ஓ இல்லையா

பூங்குழலி - அப்படி சொல்லல .... நீங்க மேல சொல்லுங்க....

பூமி - ஒரு நேரம் இனம் புரியாத ஒரு தயக்கத்திலேயே பேசுற மாதிரி இருக்கு அதான் உன்னை என்னால ஜட்ஜ் பண்ண முடியலன்னு சொன்னேன்.

பூங்குழலி - நான் இயல்பா தான் பேசுறேன்

பூமி - சரி நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டா

பூங்குழலி - இல்ல நீங்க போய் பாப்பா கிட்ட உட்கார்ந்து பேசிகிட்டு இருங்க நான் கொஞ்ச நேரத்துல சமைச்சு முடிச்சிடுவேன்

பூமி - no no நானும் ஹெல்ப் பண்றேன்

என்று இவன் சொல்ல பூமிநாதனும் பூங்குழலியும் சேர்ந்து மதிய உணவை தயார் செய்து கொண்டிருக்க டிவியில் பாட்டு கேட்டுக் கொண்டே அம்மு அவளை மீறி சோபாவில் கண்ணுறங்க

பூமிநாதன் -  குழலி குழந்தை தூங்கிட்டா நான் வேணா அவளை அப்பா ரூம்ல படுக்க வைக்கட்டா

பூங்குழலி - இல்ல பரவால்ல ஷோபாலயே படுக்கட்டும்.

பூமி - அட இருக்கட்டும்...உள்ள வந்து கட்டில் படுக்கட்டுமே

பூங்குழலி - இல்ல பரவால்ல இவ இங்கேயே என் எதிரிலேயே இருக்கட்டும்

என்று சொன்னபடி பூங்குழலியும் அம்முவின் அருகில் அமர
அவளை ரசித்தப்படி பூமி அவள் எதிரில் அமர......

நீ இன்னைக்கு வீட்டுக்கு வருவன்னு நான் நினைச்சு கூட பாக்கல...

என்று பூமி நாதன் சொன்னதும்..... பூங்குழலி அவள் கை வளைவியை சுற்றிக்கொண்டே அவனை பார்த்து....

பூங்குழலி - ஏன் அப்படி

என்று கேட்டதும் அவன் சிரித்து கொண்டே...

பூமி - இல்ல நேத்து நம்ம ஜாலியா ஷாப்பிங் போனோம் திடீர்னு நீ டென்ஷன் ஆயிட்ட அத பத்தி நான் கேட்க வரும்போது அதுக்குள்ள அப்பா வந்துட்டாரு உனக்கு என்ன ஆச்சு

பூங்குழலி - அது வந்து

பூமி - என்னன்னு சொன்னாதானே எனக்கும் தெரியும்..நான் எதாவது உனக்கு டென்ஷன் வர மாதிரி நடந்துக்கிட்டனா

பூங்குழலி - ஐயோ அப்படியெல்லாம் இல்ல

பூமி - பின்ன

பூங்குழலி - உண்மைய சொல்லனும்னா எனக்கு அந்த ட்ரெய்லர் அளவெடுத்தது பிடிக்கல

பூமி - அப்படின்னா

பூங்குழலி - அது உங்களுக்கு சொன்னா புரியாது

பூமி - குழலி....அவருடைய வேலையை அவர் பாக்குறாரு இதுல பிடிக்கறதுக்கு என்ன இருக்கு

பூங்குழலி - நான் தான் சொல்றேனே உங்களுக்கு அதெல்லாம் புரியாது

பூமி - அப்போ புரியிற மாதிரி சொல்லு

பூங்குழலி - இல்ல வேண்டாம் அது என்னோட பிரச்சனை

பூமி - என்ன நீ உன் பிரச்சனை என் பிரச்சனைன்னு பிரிச்சு பேசுற உனக்கு ஏதாவது ஒன்னுனா நான் தானே கேட்கணும்..

என்று பூமி சொன்னதும்.... பூங்குழலி அவன் அருகில் சென்றவள் சட்டென்று அவன் கரம் பிடித்து அவள் விழிகளில் கண்ணீர் ததும்பியப்படி..

பூங்குழலி - என்ன சொல்றீங்க பூமி எனக்கு ஏதாவது ஒன்னுனா நீங்க கேப்பீங்களா

பூமி - ஆமா நான் தான் கேட்கணும் நான் தானே உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்

பூங்குழலி - உண்மையாவா பூமி எனக்கு என்ன நடந்தாலும் நீங்க வந்து கேப்பீங்களா

பூமி - உனக்கு என்ன நடக்குது..எனக்கு புரியல என்ன ஆச்சு உனக்கு

பூங்குழலி - இல்ல ஒன்னும் இல்ல

பூமி - குழலி இங்க பாரு ஆர் யூ ஓகே ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட...என்ன குழலி ஏன் கண் கலங்குற

பூங்குழலி - ஒன்னும் இல்ல பூமி... சரி அப்பா வர லேட் ஆகுமோ

பூமி - ஏன் என்ன ஆச்சு பசிக்குதா

பூங்குழலி - இல்ல பசிக்கலா.... சரி நான் வீட்டுக்கு கிளம்பவா

பூமி - என்ன வீட்டுக்கு போறியா ஏய் அப்பாங்க நேரா இங்க தான வரேன்னு சொல்லி இருந்தாங்க நீ வீட்டுக்கு போய் என்ன பண்ண போற அதுவும் இல்லாம குழந்தை தூங்கிக்கிட்டு இருக்கா

பூங்குழலி - ஆமா இல்ல...சரி அவ தூங்கட்டும்

பூமி - சரி இங்க வந்து உக்காரு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்

பூங்குழலி - என்ன பேசணும்

பூமி - நீ எந்த ஸ்கூல்

பூங்குழலி - நான் எட்டாவது வரைக்கும் சென்னையில தான் படிச்சேன் அம்மா இறந்ததுக்கு அப்புறம் சொந்த ஊரிலேயே வாழலாம்ன்னு அப்பா எங்கள பக்கத்து ஊருக்கு அழைச்சிட்டு வந்துட்டாரு

பூமி - எங்களன்னா  புரியல

பூங்குழலி -  இல்ல என்னையும் அப்பாவையும் தான் எங்கள nnu  சொன்னேன்...

பூமி - அதானே...நானும் யோசிப்பேன் எங்க  அப்பாவும் ராஜு அப்பாவும் சின்னதுல இருந்து பிரிண்டுன்னு சொன்னாங்க ஆனா எனக்கு தெரிஞ்சு அவங்கள பத்தி நான் ரொம்ப கேள்விப்பட்டது இல்ல அதனால தான் கேட்டேன்

பூங்குழலி - எனக்குமே இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் தான் சந்திரன் மாமாவை தெரியும்

சந்திரன் - என்ன என் பேச்சு அடிபடுது

பூங்குழலி - வாங்க மாமா

பூமி - என்ன அப்பா...எங்கே ராஜா அப்பா

சந்திரன் - அவனுக்கு வீட்ல ஏதோ வேலை இருக்குன்னு அவன் வீட்டுக்கு போயிட்டான் பா..

பூங்குழலி -  அய்யோ என்ன மாமா உங்களுக்கும் அப்பாவுக்கும் சேர்த்துதானே நான் சமைச்சு இருக்கேன்

சந்திரன் -  இல்லமா நாங்க ரெண்டு பேருமே சாப்பிட்டுட்டோம் நீங்க சாப்பிடுங்க..... ஆனா நீ செஞ்ச சாம்பார் மணம்  தெரு முனை வரைக்கும் வீசுது.. நான் இன்னைக்கு நைட்டு ஒரு புடி புடிக்கிறேன்

பூங்குழலி - ம் சரி மாமா

சந்திரன் - என்ன இது குட்டி பொண்ணு தூங்கிட்டாளா

பூங்குழலி -  ஆமா மாமா..... இந்தாங்க தண்ணி

குடுமா.... உஷேப்பா என்ன வெயில் தெரியுமா மண்டையை பொளக்குது....இந்தா அம்மாடி உங்க நிச்சியதுக்கு புடவை....

என்று சொன்ன சந்திரன் அந்த புடவையை தன் வருங்கால மருமகளிடம் தர.......

பூமி - அப்பா..குழலி நேத்து ஆசைப்பட்டது இந்த saree தான் பா

சந்திரன் - என்னப்பா சொல்ற உண்மையாவா

பூமி -ஆமா அப்பா  இதே புடவை தான்...... குழலி இங்க பாரு இந்த புடவை தானே நீ ஆசைப்பட்ட

பூங்குழலி - ஆமா இதே புடவை தான் எப்படி மாமா உங்களுக்கு தெரியும்

சந்திரன் - தெரியலமா நாங்க கடைக்கு போயி உனக்கு புடவை பாத்துகிட்டு இருந்தோம்... அப்போ திடீர்னு உனக்கு இந்த கலர் புடவை எடுக்கனும்னு உன் அப்பனுக்கு தோணுச்சு... அப்படியே என் மகனுக்கும் இதே கலர்ல ஒரு ஷர்ட் எடுக்கணும்ன்னு எனக்கு தோணுச்சு ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்டு வந்துட்டோம்.. இந்தமா உங்க வீட்டு பக்கத்திலேயே அம்முவுடைய அம்மா பிளவுஸ் தைச்சு தராங்கலாமே அவங்க கிட்ட தச்சிக்கோ  உனக்கு பிடிக்கலைன்னா சொல்லுமா வேற கூட மாத்திக்கலாம்

பூங்குழலி - இல்ல மாமா இதுவே நல்லா இருக்கு

சந்திரன்- சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க நான் இதோ வரேன்

என்று சொன்னபடி சந்திரன் அவர் வாங்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு அவர் அறைக்கு செல்ல சிறிது நேரம் கடந்த நிலையில் பூமிநாதனும் பூங்குழலியும் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்க தூக்கத்தில் இருந்து அம்மு எழுந்து வர

அம்மு - என்ன எனக்கு சாப்பிட கொடுக்காம நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுறீங்களா

பூங்குழலி - நீதான் தூங்கிக்கிட்டு  இருந்த அதனால் தான் உனக்கு சாப்பிட கொடுக்கல வா இப்படி வந்து உட்காரு

என்று பூங்குழலி அழைத்ததும் அம்மு அவள் அருகில் அமர மூன்று பேரும் சேர்ந்து மதிய உணவை உண்டு முடிக்க சிறிது நேரம் இவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்த சமயம்

பூமிநாதன் - குழலி மாடியில் நமக்கு கூட நீ வந்ததுக்கு அப்புறம் நிறைய செடி கொடி வளர்க்கணும் புரியுதா

பூங்குழலி - ம் கண்டிப்பா வளர்க்கலாம் சரி நான் கிளம்பவா அப்பா வேற வீட்ல தனியா இருப்பாரு

பூமி - ம் and ரொம்ப தேங்க்ஸ்

பூங்குழலி - எதுக்கு தேங்க்ஸ்

பூமி - எனக்காக நீ லீவ் போட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்த பாரு அதுக்கு தான் thanks

பூங்குழலி - இதுல என்ன இருக்கு...சரி மாமா எங்க  நான் சொல்லிட்டு கிளம்புறேன்

சந்திரன் - என்ன மா கிளம்புறியா

பூங்குழலி - ம் ஆமா மாமா

சந்திரன் - இருமா நம்ம கார்ல போயிடுவோம்...நாளைக்கு நான் வந்து உன் வண்டிய உன் வீட்டுல விட்டுர்றேன்

பூங்குழலி - இல்ல மாமா இருக்கட்டும்

சந்திரன் - அட இருமா நானே உன்னை அழிச்சிட்டு போயி வீட்ல விடுறேன்
பாப்பா வா போகலாமா

அம்மு - ம் போகலாம்

என்று அம்மு சொல்ல... பூமி பூங்குலழியை பார்த்து கொண்டு இருக்க....சந்திரன் இவர்களுக்கு நடுவே நந்தி போல நில்லாமல் அவர் அம்முவை அழைத்து கொண்டு காரை நோக்கி செல்ல...பூங்குழலியின் விழிகள் பூமியை பார்த்தப்படி அவன் அருகில் சென்றவள்

நான் கிளிபம்பட்டுமா...

என்று பூங்குழலி அவனிடம் இருந்து விடை பெற அவனின் சம்மததை கேட்க..... அவன் இன்னும் நெருக்கமாக அவளை நெருங்கியவன்

Actually குழலி... நான்.... நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.... But நீ அதை எப்படி எடுத்துப்பன்னு தான் தெரியல

என்று பூமியின் விழிகள் இரண்டும் நம் பூமி மாதாவை பார்த்தப்படி நாணத்துடன் பேசும் அழகை ரசித்த பூங்குழலியின் செவிகள் இரண்டும் அவன் சொல்லுக்காக காத்து இருக்க...

நான் நேத்தே உன்கிட்ட இத சொல்ல தான் உன்னை கடைக்கு அழைச்சிகிட்டு போனேன்....

என்று மீண்டும் அவன் தயங்கி தயங்கி பேசும் அழகை ஒரு  தாய் முதல் முறை தன் தலை பிள்ளை பேசும் போது அவன்  அழகை ரசிக்கும் மனநிலையோடு இவள் அவனை ரசித்து இருக்க

குழலி நான்...... நான் உன்னை...
நான் உன்னை காதலிக்கிறேன்

என்று அவன் அவளின் கண்களை பார்த்து சொன்னவனின் வார்த்தையில் உள்ள ஆழமான அன்பை உணர்ந்த பூங்குழலி அவள் இதழ்கள் மலர்ந்து புன்னகை புரிந்தவள்

இதுக்கு தான் இவ்வளவு தயக்கமா.....

என்று இவள் அவனை கேட்டதும் தன் நெற்றியில் உள்ள வியர்வை துளியை துடைத்தவனை பார்த்து இவள் மீண்டும் சிரித்து கொண்டே தன் கை பையை எடுக்க போக

என்ன நீ பதில் ஏதும் சொல்லாமல் நீ பாட்டுக்கிட்டு கிளம்புற

என்று அவன் கேட்டதும் இவள் அவன் காதின் அருகில் வந்தவள்..

உங்க காதலை நான் உணர்ந்ததால தானே இங்க வந்து இருக்கேன்... இன்னும் என்ன சொல்லணும்..

என்று அவள் அவனை கேட்க.... அவன் அவளை மேலும் நெருங்கியவன்

என் காதலை நீ உணர்ந்தது எனக்கு தெரியும்....ஆனா என் காதலை நீ ஏற்றுக்கொண்டதற்க்கு அடையாளமா நீ எனக்கு ஒரே ஒரு....

என்று மீண்டும் அவன் வார்த்தைகள் தடுமாற......

பூங்குழலி - என்ன வேணும் சொல்லுங்க பூமி....

பூமி - ஒரே ஒரு photo....

பூங்குழலி - மாட்டேன்....

பூமி - ஏன்

பூங்குழலி - அது அப்படி தான்..... சரி நான் கிளம்புறேன்...

என்று சொன்னவள் மின்னல் வேகத்தில் பூமியின் வீட்டை விட்டு சந்திரனின் காரை நோக்கி பறந்தவளின் அழகை ரசித்தப்படி பூமி தனக்குள் சிரித்து கொள்ள....

சில நிமிடங்கள் கடந்த நிலையில் மேசை மேல் இருக்கும் பூங்குழலியின் கைபேசி அலறும் சத்தம் கேட்டு பூமி நாதன் அந்த போனை கையில் எடுக்க....கைபேசியின் திரையில் SURYA
என்ற பெயரை பார்த்தவன்

என்ன இது குழலி போனை விட்டுட்டு போயிட்டாளா..... போன் வேற ring ஆகிகிட்டே இருக்கே.... நம்ம எடுத்து என்னனு கேப்போமா..

என்று தனக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே பூமிநாதன் அந்த கைபேசியில் உள்ள பச்சை நிற பொத்தனை அமுக்க....

எதிர் முனையில் இருந்து ஒரு ஆணின் குரல் பதட்டமாக

Hello CHITHRA....

என்று ஒலித்ததும்....

பூமி - ஹலோ சித்ராவா....??? அப்படி யாரும் இல்லைய...
இது mrs. பூங்குழலி யோட போன்....

என்று பூமி சொன்னதும் எதிர் முனையில் இருக்கும் அந்த நபர்.....

உங்களுக்கு அவங்க பூங்குழலியா இருக்கலாம்.... எங்களுக்கு அவுங்க சித்ரா தான்.... Pls போனை சித்ராகிட்ட தாங்க....

என்று பூமியிடம் கராரான குரலில் பேசும் நபர் யாரென்று வியாழன் சொல்கிறேன்

Continue Reading

You'll Also Like

241K 6.2K 150
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
20.5K 428 58
❤️❤️❤️இது என்னோட இரண்டாவது கதை...❤️ ❤️ முதல் கதைக்கு தந்த ஆதரவை போல இந்த கதைக்கும் நீங்க தரணும்னு ஆசைபடுறேன்.... ❤️ 💘💘💘அப்புறம்.. இந்த கதை கறுப்பா...
345K 22.3K 50
#ashaangi . . this is purely fiction..... the characters in the story are real....but the story is entirely fictional. This is an ashaangi story. Ca...
107K 3K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...