போட்டி 11 # 2 - இருள் விட்டு வெளியில் வா

49 8 3
                                    

வனம் நோக்கிக் கால்கள் நடையாய் நடக்க

பினம் ஒன்று நிற்பதை தொலைவில் கண்டான்

மனமற்ற அவள் மயிர்கள் மண்ணைத் தொட

இனம் புரியாதொரு ஏக்கம் கண்டான்

தனம் என்ற சொல்லை அவள் முன் உதிர்க்க

கன நொடியில் அவள் பற்கள் நீள்வதனைக் கண்டான்

தினம் பொழுது உனக்காகத் தான் நான் என அவன் கூற

சினம் கொண்டு அவள் மார் முன் வரக் கண்டான்

பணம் இருக்க, பிழை ஒன்று செய்தேன் என அவன் சொல்ல

காணக் குரல் அழுகையொடு கலந்து கேட்பதைக் கண்டான்

தினம் தினம் சாகிறேன் குற்றம் கொண்டு என அவன் கத்த

குணம் கொண்டு மனம் மாறி உற்றவள் உருகக் கண்டான்

வானம் பார்த்து அவன் கண்ணீருடன் கலங்கி நிற்க

பாணா காத்தாடி போல் தன்னவள் பறந்து செல்வதனைக் கண்டான்

பாணம் முகத்தில் பட்டு வேகமாக திரையில் தெறிக்க

மானம் போக மனைவித் திட்டுவதனை கண்களால் கண்டான்

சாணம் வைத்து மீத்தேன் வேண்டுமென புலம்பிக் கொண்டு

கையில் பந்து போல், தன்னவள் உருட்டிக்கொண்டிருப்பதனை கண்டான்

ஊணம் மறந்து உற்றவள் தன்னையே இவ்வுலகிற்கு தானம் செய்ய

சனம் நூறு சூழ்ந்து வேடிக்கைப் பார்ப்பதனை வெளியில் வந்து கண்டான்

ஈனப்பிறவியா நான், இல்லத்தரசி இருளை நோக்கி வெளிச்சம் ஏற்ற

தொலைக்காட்சி இப்பொழுது அவசியமா என மனம் ஏசுவதை கண்டான்

Contest EntriesWhere stories live. Discover now