போட்டி 7 # 8 - ஜல்லிக்கட்டு

52 11 7
                                    


புழுதி தீயாய் பறக்க

குருதியால் மண்கள் சிவக்க

உழவர் பொங்கலின் கதாநாயகனும்

சிங்காமான எம் வீரத் தமிழர்களும்

வீரப் போர் நடத்திட

எங்கள் தமிழ்த்தாய் அளித்தாலே

அற்புதமாய் வாய்ப்பொன்றை

வரலாற்று காப்பியத்தை

அதை நாங்கள் ஜல்லிக்கட்டென்கிறோம்

பீட்டாவோ அதை வேண்டாமென்கிறது

பீட்டாவிற்கும் கூறலாமே ஒரு நன்றி

பலதமிழனை ஒரு தமிழர்களாய் சேர்த்தமைக்கு

போதும் தமிழனே வந்தோரை வாழவைத்து

இனியேனும் நம்மவர்க்கு வாய்ப்பு கொடுத்திடு

நம் கலாச்சாரத்தை வாழ விடு

************

Contest EntriesWhere stories live. Discover now