போட்டி 5 # 3 - மன்னிப்பாயா

74 16 11
                                    


இருப்பதோ இன்னும் 25 நிமிடங்கள் தான்

புதுவருடம் பிறந்து என் ஆசையை அலங்கரிக்க

என்னவனின் முன் ஆசையை நான் கூற!

நான் கூறும் மூன்றெழுத்து வார்த்தையை கேட்டு

என் மேல் அவனுக்கு ல்தகா சைஆ ஏற்படுமா!

பலமுறை அவனிடம் நான் சொல்ல முயன்றும்

வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவரவில்லையே

என் இதயத்தில் உள்ள அந்த இதமான வார்த்தைகள்

மிதமான சூட்டுடன் என் இதழ்களை வந்து சேர்ந்த போதும்

மீண்டும் தொண்டைக்குள் சென்று தஞ்சம் கொள்வது ஏனோ

உள்ளம் சொல்ல தவிக்கும் அந்த உன்னதமான வார்த்தைகள்

உதட்டை விட்டு வெளிவர மறுப்பது ஏனோ! தெரியவில்லை

இனிமேலும் என் இதயத்தை நம்பி ஒரு பலனும் இல்லை

என் உதட்டின் உச்சியில் பெரும் போட்டி தான்

காதல் என்ற அந்த மூன்று எழுத்துக்கும் வெட்கத்திற்கும்

இருப்பினும் எப்பொழுதும் ஜெயிப்பது வெட்கம் மட்டுமே

காதல் எவ்வளவு முன் வந்தாலும் வெட்கமே உதட்டை விட்டு வெளிவந்து

முதலில் வெற்றி மாலை சூடிக்கொண்டு காதல் முன் நிற்கிறது

காதலோ! தோல்வி என்ற மூன்றெழுத்தை சுமந்துகொண்டு

கவலையுடன் பின் நோக்கி செல்கிறது இதயத்தின் ஓரத்திற்கு

இனிமேலும் இதயத்தை நம்பாதே என என் மூலை நரம்புகள் கூற

இதயமோ புதிதான ஒரு தொடக்கத்திற்காக காத்திருக்கிறேன் என்கிறது

இந்த முறையாவது என்னவன் முன்பு என் காதலை கூறுவேனா நான் என

என் இதயத்தை கேட்க

அதுவோ இந்த புத்தாண்டு யாருக்கு புதிதோ இல்லையோ உனக்கு புதிது

என்கிறது

கடும் சொற்களால் என்னை அன்று அவன் காயப்படுத்த

இதயத்தை விட்டு அவன் நினைவுகளை கலைத்தேன்

நரை முடியுடன் நாகரிகமற்று அவன் இருந்த போதும்

எனக்கு பிடித்த ஒன்றை தர அவன் இதயம் மறுக்கவில்லை

மூன்றெழுத்து கொண்ட அவன் என் வாழ்வில் சர்வதிகாரம் புரிய

நானோ! என் சுதந்திரத்தை சூரையாடுகிறான் என்று கோபம் கொண்டேன்

ஆனால், இன்று உணர்ச்சிகள் பொங்க உருகி நிற்கிறேன் அவனை காண

2017 முதல் வன் சொல்லால் உன் இன்மனதை காயப்படுத்தமாட்டேன்

என்னை மன்னித்து ஏற்றுக்கொள் என் ஆசை அப்பாவே என்ற மனதுடன்

*******************

Contest EntriesWhere stories live. Discover now