போட்டி 6 # 9 - என் சுவாசகாற்றே..

97 12 10
                                    

சில்லென்ற குளிர் காற்று முகத்தில் மோதி உடலைச் சிலிர்க்க வைத்தது. பச்சை பசேலென்ற இயற்கை அழகு கண்களைப் பறித்தது. மெல்லிசையாய் பாட்டுக் கச்சேரி நடத்திய குயில்களின் ஓசை மனதினை ரம்மியமாக்கியது.

சூரியன் தன் மேகத்துப் போர்வையைவிட்டு மெல்ல துயில் களைந்து எழுந்தான்.

கரடு முரடான அந்த பாதையில் வாகனம் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தன் கைப்பேசியில் உள்ளடக்கிய கொஞ்சி விளையாடும் இயற்கை அழகினைத் தன் நண்பர்கள் பட்டாளத்துடன் வாட்ஸப்பில் பகிர்ந்துவிட்டு நிமிர்ந்தாள் நிலவினி.

தொழில்நுட்ப வளர்ச்சியில் சிக்குண்டு இயற்கையுடன் இதுநாள் வரை தன்னை இணைத்துப் பார்க்காத நவநாகரீக மங்கை...

கோதுமை நிறத்தில் முதுகு வரை பாம்பு போல் நெளிந்து விளையாடும் காற்மேக கூந்தலோடு பார்ப்பவரை இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகிய நங்கை...

சிறிது நேரம் வேடிக்கை பார்த்தப்படி பயணம் செய்தவள் திடிரென்று என்ன நினைத்தாளோ, ஓட்டுனர் இருக்கையின் அருகே அமர்ந்திருந்த தன் தாய் மணிமேகலை இமைக்காது பார்த்தாள்.

இவளின் இச்செயலை உணர்ந்து கொண்டவராக "என்னடி பார்வலாம் பயங்கறமா இருக்கு", என்றார்.

"மம்மி எனக்கொரு டவூட்"

"வழக்கமா டாடி எனக்கொரு டவுட்னு கேப்ப. இன்னிக்கு மம்மிய கேக்குற.. சரி கேட்டுத் தொல"

"நீ யான்மா இப்டி இருக்க", என்ற நிலவினியின் கேள்வியில் அவளை மேலிருந்து கீழாக அளவெடுத்தவர்..

"அடியே நல்லாதான இருக்க.. இல்ல காலாவதியான மருந்து எதயாச்சும் சாப்டிய", என்றார் சந்தேகமாக.

"அட போமா என்னை வெச்சி காமெடி பண்ணிகிட்டு.. பாட்டிமா கிராமம் எவ்ளோ அழகா இருக்கு. பச்சை பச்சையா அப்டியே பட்டு கம்பளம் விரிச்ச மாதிரி பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு.
இதவிட்டுடு.. சுத்தியும் பெரிய பெரிய பில்டிங், டிராபிக் ஜேம், எல்லாம் ஒன்னா சேர்ந்து பல்லு இளிக்குற சிட்டி லைப்ல நீ எப்டிமா வந்து மாட்டிக்கிட்ட. பொறந்தது வளர்ந்தது எல்லாம் கிராமத்துல. பட் லவ் பண்ணி வீட்ட விட்டு ஓடி வந்து என்னோட அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்ட.

Contest EntriesWhere stories live. Discover now