போட்டி #10 - 5. மர்ம பயணம்

42 3 1
                                    

  காற்றை பிரித்துக் கொண்டு துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டவைப் போல் ஓடி கொண்டிருந்தான் ரகு.

    அவன் ஏன் அவ்வளவு வேகமாக ஓடுகிறான் என்று சற்றுப் பின் நோக்கி சென்று பார்ப்போம்.

     ரகு, சரத், ராமு மூவரும் உயிர் தோழர்கள். அவர்களுக்கு கல்லூரி விடுமுறை வந்தது. விடுமுறைக்கு எங்கு போகலாம் என்று மூவரும் யோசித்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ரகு “நாம் எங்கயாவது நீண்ட பயணம் போகலாம்” என்று கூறினான்.

           அப்பொழுது அதை கேட்ட சரத் மண்டைக்குள் பல்பு எரிந்ததுப் போல் எரிந்ததுப் போல் “ டேய் மச்சான் எங்க அப்பா ஒரு அரண்மனை வாங்கி இருக்கிறார் . அது கேரளா பக்கத்திலிருக்கிறது. நாம் அங்கு போகலாம்” என்று கூறினான்..

          அதற்க்கு மற்ற இருவரும் சம்மதம் தெரிவித்தனர். பின்பு அங்கு செல்ல அனைவரும் தயாரானார். அவர்கள் மூவரும் காரில் ஏறி அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

            செல்லும் வழியில் இருப் பக்கமும் காவலர்கள் போல் மரங்கள் வீரமாக நின்று அவர்களை வரவேற்றது. போகும் இடங்களில் எல்லாம் அவர்கள் கண்களைப் பறிக்கும் அழகிய மலர்கள் இருந்தது. சுரியனோ என்றும் அல்லாமல் அன்று அழகாகவே இருந்தது. வானம் ஒரு தோரணை போல் விரிந்து அதில் இருக்கும் மேகங்கள் வெள்ளைப் பந்துப் போல் அவர்கள் செல்லும் இடத்திற்கு எல்லாம் தொடர்ந்து சென்றது. அவர்கள் இறுதியில் அந்த பிரிமண்டமான அரண்மனை வந்து அடைந்தனர். சரத், ராமுவும் பயணம் செய்த களைப்பில் இளைப்பாற சென்றார்கள். ரகு மட்டும் அவனின் பயணத்தை முடிக்க மனம் இல்லாமல் அரண்மனையை சுற்றிப் பார்க்கத் தொடங்கினான்.

                  அப்பொழுது ஒரு அறை மட்டும் மூடப் பட்டிருந்தது. மேலும் அதில் பல மந்திர கயிறுகள் கட்டப் பட்டிருந்தது. அதை எல்லாம் எடுத்து தூக்கி எறிந்து விட்டு உள்ளே நுழைந்தான். அங்கு ஒரு அழகிய பெண் புகைப்படம் இருந்தது. அதற்க்கு கீழ் ஒரு பெட்டி இருந்தது. அதிலும் பல கயிறுகள் இருந்தது. அவன் பெட்டியை உடைத்து திறந்துப் பார்த்தான். அதில் அந்த பெண் பற்றிய வாழ்க்கை வரலாறு இருந்தது. கடைசியில் அவள் எங்கு இறந்துப் போனால் என்பதும் குறிப்பிடப் பட்டு இருத்தது. அதில் பின் குறிப்பும் இருந்தது “ அங்கு செல்லபவர்கள் பல அபாயங்களை சந்திக்க நேரிடும்”

Contest EntriesΌπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα