போட்டி 9 # 7 எது காதல்??

46 10 3
                                    

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்க்கு முன்

காதல் இதுதானோ
உன் ஒற்றை நொடி பார்வையினில்,
என் உள்ளம் கவர்ந்து சென்றாயே!
செல்லும் தூரம் யாதினிலும்,
உன் நினைவில் மயங்கி நின்றேனே!
காதல் இது தானா?

உன் இதழ் மலர்ந்த நொடியினில்,
என் நெஞ்சம் குளிர்ன்ந்தே போனதே!
உன் துணையாய் வாழும் கனவினில்,
உடன் இணைதே மலர்ந்தனன்,
காதல் இது தானே!

திருமணத்திற்க்குப் பின்:

உன்னோடு இனைன்ந்து நின்றேன் நான்,
இதழோடு இதழ் கோர்த்தோம்,
புதியதோர் உயிர் காண்டோம்,
நமக்கென ஓர் உலகில் நித்தம் மகிழ்ந்தோம் நாம்,
காதல் இது தானோ!

அன்றும் இன்றும் என்னுடன் நீ,
இன்பம் துன்பம் ஒன்றாய் கண்டோம் நாம்,
நீயின்றி என்சென்வேன் ,
வாழ்வின் அர்த்தம் இன்று புரிந்ததடா,
காதல் இது தானே!

__________________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்க்கு முன்:

உன் காந்தப் பார்வையில்
சிக்கி
என் உள்ளம் தொலைத்துச்
சென்றேனடி. . .!!!
உன் உள்ளம் வென்ற
வெற்றி
நிலையில் தூரம் தோற்று
நின்றதடி. . .!!!

பெண்ணே காதல் இது
தானே...
பெண்ணே காதல் இது
தானே...!!!

அடச் சிறுக்கி என்
இதழ்
மலரக் காரணம் ஆனவளே
நிதானடி...!!!
நி கண்ட கனவை
மலரும்
நினைவுகளாக மாற்றுவதே என்
சிந்தையடி...!!!

பெண்ணே காதல் இது
தானே...
பெண்ணே காதல் இது
தானே...!!!

திருமணத்திற்க்குப் பின்:

நம் உள்ளங்கள் ஒன்று
சேர
அவை கூறும் வழியில்
செல்வோமடி...!!!
இவ்வுலகத்தை ஏழம் விட்டு
காதல்
என்னும் நம் உலகம்
செய்வோமடி...!!!

காதல் இது தானே
பெண்ணே. . .
நம் காதல் இது
தான்...!!!

முப்பொழுதும் உன்தன் அருகாமை
இருக்க
தித்திக்கும் உன்தன் காதல்
போதுமடி...!!!
உன்தன் ஜீவன் என்னை
ஆட்கொள்ள
பென்னே உன்னை நெஞ்ஜாங்குடியில்
சுமபேனடி...!!!

காதல் இது தானே
பெண்ணே. . .
நம் காதல் இது
தான்...!!!

Contest EntriesWhere stories live. Discover now