போட்டி 6 # 10 - ஒரு ஊருல

60 7 1
                                    

நடு ராத்திரி அமாவாசை கும் இருட்டு அப்ப மூங்கூர் என்ற  ஊருக்கு ஒருத்தன் தன்னோட அக்காவை பார்க்க பேருந்துல வந்து இறங்கினான்....சுற்றியும் ஈ காகா கூட இல்லை மயான அமைதியாக இருந்தது  அங்க இருந்து அவன் போக வேண்டிய கிராமத்திற்கு நான்கு மைல் தூரம் காட்டினுள் நடந்து தான் செல்ல வேண்டும் மாற்று வழி எதுவும் இல்லை...

அவன் ஊருக்கு புதிது என்பதால் யாரையும் அவனுக்கு தெரியாது... தங்குவதற்கு இடம் எதுவும் இல்லாததால்  காட்டுக்கு நடுவில் உள்ள கிராமத்திற்கு நடந்து செல்ல முடிவேடுத்தான்...

அன்று அமவாசை என்பதால் சறிது  அளவு கூட வெளிச்சம் இல்லை கையில் டார்ச்லைட்  வைத்து கொண்டு நடக்க தொடங்கினான்...

திடிரென பயங்கரமாக இடி மின்னலுடன் கூடிய பேய் மழை பெய்ய தொடங்கியது... அது போன்ற ஒரு மழையை அவன் பார்த்ததே இல்லை ..... அப்போது தூரத்தில் ஒரு பாழடைந்த சின்ன குடிசை வீடு இருந்தது மழையில் இருந்து தப்பிக்க வீட்டினுள் சென்றான் .... வீட்டுக்குள் சென்ற சிறிது நேரத்திற்கு பிறகு ஒரே இறந்ந பிணவாடையின் துர்நாற்றம் வீச தொடங்கியது .... 

பின் ஜல்...ஜல்...ஜல்... என்று சத்ததுடன் யாரோ வீட்டினுள் வருவதை பார்த்தான் இது மனிதனின் காலோசை மாதிரி இல்லை என்பதை அறிந்த அவன் ... அந்த வீட்டில் மூலையில் சென்று தான் தெரியாத அளவு மறைந்து கொண்டான் ....அப்போது கதவை திறந்து கொண்டு வந்தது ஒரு கொடூரமான உருவம்...கருப்பாக பாதி எரிந்தது போல இருந்தது தன் இடது கையில் சுடுகாட்டில் இருந்து அழுகிய நிலையில் தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தையின் சிதையுடன் .... பற்கள் முழுவதும் ரத்த கரையுடன் வந்தது...

 இதை பார்த்த அவன் பயத்தின் உச்சத்திற்கே சென்றான்... கடவுளிடம் தன்னை காப்பாற்றுமாறு வேண்டி கொண்டு இருந்தான் ... மேலும் தன்னை தெரியாத அளவு மறைத்து கொண்டான் ... அந்த உருவத்திற்கு வீட்டினுள் புது வாடை எதோ வருகிறது என்பதை உணர்ந்தது ...சுற்றியும் பார்த்தது பின் கையில் உள்ள குழந்தையை சாப்பிட தொடங்கியது ... விடியும் வரை அவன் அங்கிருந்து சிறிது கூட அசையவில்லை ...தானாக அந்த உருவம் வெளிச்சம் பட மறைந்தது .... பின் மக்கள் நடமாட்டத்தை பார்த்ததும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான்...

அங்கு வந்த ஒருவரிடம் நடந்தவற்றைக் கூறினான் அதற்கு அவர்,

      தம்பி, அந்த வீட்டுல பேய் இருக்கு பா,அமாவாசை ராத்திரி வரும் சுடுகாட்டுக்கு போய் எதாவது ஒரு பிணத்த தோண்டி எடுத்து வந்து சாப்பிடும்... அமாவாசை நாளே ஊருல உள்ள எல்லாரும் இருட்டுறத்துக்கு முன்னாடியே வந்துரு வாங்க இதுவரைக்கும் அந்த வீட்டு உள்ள போனவங்க யாரும் உயிரோட வந்தது இல்ல ....

நீ தான் உயிரோட வந்து இருக்க அந்த கடவுள் தான் உன்ன காப்பாத்தி இருக்காரு.... 

    பின் அவன் ஊருக்குள் அச்சத்துடன் சென்றான்....

என் பாட்டி சொன்ன நீதி: கடவுளை நம்பு அவர் எப்பயும் உன் கூடயே இருந்து உன்னை காப்பாற்றுவார் என்று கூறினார் ... சிறு வயதில் இந்த கதையை கேட்காமல் ஒரு நாளும் நான் தூங்கியது இல்லை....

Contest EntriesWhere stories live. Discover now