போட்டி 2# 9 - உயிருடன் இரு

64 13 5
                                    


ENTRY 9:

சேற்றினில் உன் கால்கள் செல்வது என் வயிற்றினில் உணவு இறங்க வேண்டும் என்பதற்காக. 

வானம் பார்த்து விவசாயம் செய்கிறாய் ஆனால் நீ இருக்கும் திசையை கூட நாங்கள் பார்த்து விட்டு சாப்பிடுவது இல்லை. 

செய் நன்றி மறவாதலுக்கு பூமியை எடுத்து காட்டி சொல்லுவார்கள் ஆனால் நீயும் ஒரு எடுத்துக்காட்டு தான் என்பதில் மாற்று கருது இல்லை

உன் நிலங்களை வாங்கி நாங்கள் விடுமுறை விடுதிகள் செய்தோம். 

உன் உழைப்பை மதிக்காமல் அதை சிறிய அளவு பணம் கொடுத்து வாங்கினோம். 

உன்னை போன்று விவசாயம் செய்பவர்களை மதிக்க தெரியுமா என்றால் இல்லை. 

என்ன நன்மை செய்தோம் நாங்கள் உனக்கு? ஒன்றும் இல்லை. 

அனாலும் நாங்கள் வாழ தேவையான உணவை தருகிறாய்.இதை விட செய் நன்றி மறவாமைக்கு எதை எடுத்துக்காட்டி சொல்லுவேன் நான்? 

உண்பதற்கு உணவு இல்லாமல் உன் காலில் வந்து விழ போகும் வருங்கால சமுதாயத்திற்காக உயிருடன் இரு 

எங்களுக்கு உணவின் அருமை அறியும் நாள் வரும் அன்று நீ ராஜாவாக போற்றப்படுவாய்பொறுத்து இரு.

கண்ணினியை விட்டு உன்னிடம் வரும் நாள் தொலைவில் இல்லை பொறுத்து இரு

***********************

Contest EntriesWhere stories live. Discover now