போட்டி#3. 1 - வேதத்தின் நாயகன்

111 20 9
                                    


எங்கும் சிவப்பு வண்ணம் பரவியிருந்தது...

கறுப்பு நட்சத்திரங்கள் வானில் மின்னியது...

ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு ஒருவன் பொத்தென்று மண்ணில் விழுந்தான்... அவனருகே வித்தியாசமான வடிவில் ஓர் இயந்திரமும் விழுந்தது.

சிரமப்பட்டு கண்களை திறக்க முயன்றான்...

சிறு இடைவெளியில் அவனுக்குத் தெரிந்தது ஓர் உருவம்..

மீண்டும் அவனை இருள் சூழ நினைவுகளோ பின்னோக்கி சென்றது..

அவன் ருத்ரன்....

பிரபல விஞ்ஞானி ஒருவரின் மகன்...

ருத்ரனின் தந்தை விஞ்ஞான துறையில் தன் வாழ்நாளைச் செலவழித்தார். பணம் அவருக்கு பக்க பலமாய் இருந்தது.

அவர் விஞ்ஞான சாதனையில் உச்சத்தைத் தொட்ட நேரம்,

திடிரென்று ஒரு நாள் மாயமாய் மறைந்து போனார்.

எங்கு போனார் என்ன ஆனார் என அறிந்து கொள்ள முடியாத பல மர்ம முடிச்சிகள் விழுந்தன..

ருத்ரன் தந்தையை இழந்து அனாதையாய் நின்றான்.

என்னதான் கோடிகணக்கான சொத்துகள் அவனின் பெயரில் இருப்பினும் அன்பு செலுத்த ஒரு உறவின்றி தவித்தான்.

உறவென்று வந்தவர்களோ அவனின் பணத்தின் பெயரில் மட்டும் பற்று வைத்தனர்.

வாழ்வே சூன்யமாய் மாறிய அத்தருணத்தில் ருத்ரனின் கவனத்தைக் கட்டி இழுத்தது தன் தந்தையின் விஞ்ஞான குறிப்பு ஒன்று...

பனிரெண்டே வயது நிரம்பிய சிறுவனான ருத்ரன் அதனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான். இருப்பினும் அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மட்டும் அவனுள் கொழுந்து விட்ட தீயாய் எரிய தொடங்கியது.

ருத்ரனின் இத்தொடக்கம் அவனின் வாழ்வையே புரட்டி போடுமென தெரிந்திருந்தாள் அவன் இந்த விஷ பரிட்சையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க மாட்டானோ என்னமோ???

Contest EntriesWhere stories live. Discover now