போட்டி#3. 6 - மாயக் கண்ணாடி

105 13 4
                                    


எல்லாருக்கும் கனவு காண்பது என்பது இனிமையான ஒன்றாகும். அந்த கனவு நிஜ உலகில் நம் கண் முன் திரைப்படம் போல் தோன்றினால், அந்த கனவை நாம் நினைக்கும் பொழுதெல்லாம் படமாக பாா்த்தால் எப்படி இருக்கும்????

அனுராக் உயிா்இயற்பியலில் பொறியாளா் (Bio physics Engineer) முனைவா் பட்டத்தை அமொிக்காவிலுள்ள பல்கலைகழகத்தில் தங்கப்பதக்கத்தால் பெற்றான், அதனால் அவன் அங்கேயே தங்கி ஆராய்ச்சியை தொடா்வதற்கு பல்கலைகழகமே ஏற்பாடு செய்தது.

அனுராக் கனவில் தான் அவனுடைய ஆராய்ச்சியை சிந்திப்பான்.அவனுக்கு தோன்றியது, " என் கனவை ஒா் படமாக நான் பாா்த்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும், நான் எனது ஆராய்ச்சியை கனவில் பாா்ப்பதை விட படமாக பாா்த்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்" என்றென்னினான்.

அதை மனதில் கொண்டு மூக்குக் கண்ணாடி(சன் கிளாஸ்) ஓன்றை உருவாக்கினான். அந்த கண்ணாடியில் பல நுன் கருவிகளை பொறித்தினான், பின் பல புத்தங்களையும், ரெபரன்ஸையும் பாா்த்து பின் கணினித் துறை நண்பா்களிடம் தன் சந்தேகங்களை தெளிவுப் படுத்திக் கொண்டு அவன் அந்த கண்ணாடியை உருவாக்கினான்.

அந்த மூக்குக் கண்ணாடியில் பல கதிா்கள் மிக குறைவான அளவில் வெளியிடும்படி செய்தான். அந்த கதிா்கள் மூளையின் அனைத்துப் பகுதியையும் ஒன்றோடு செயல்பட துாண்டும், பின் நம் நினைவுகள் அல்லது கனவுகள் ஆற்றலாக மாறி நெற்றிப் பொட்டில் குவியும். இவ்வாறு அவன் கண்டறிந்ததை அவனே சோதனை செய்தான். அவன் மனக்கண்ணில் நினைவுகள் தொிந்தது, கண்ணகளுக்கு புலப்பட வில்லை. "சாி கொஞ்சம் ஒய்வெடுத்து பின் தொடரலாம் என்றென்னினான்".

அவன் தன் கைப்பேசியை பாா்த்தான், அதில் 300 தவற விட்ட அழைப்புகள் இருந்தது. யாரென பாா்த்தான் அது சாரா!!! அவ்வளவு அழகு அவள், அவளை அவன் பாட்டுக் கச்சோியில் தான் கண்டான், அவளது குரலில் மயங்கித்தான் போனான், பல வழிகளில் அவளை கவா்ந்தான் தன் செயலால்,பின் நட்பில் தொடா்ந்த உறவு காதலில் மலா்ந்தது. போனில் பேசினான் அவளிடம், காது வலிக்கும் அளவிற்க்கு திட்டித் தீா்த்தாள், அதை ரசித்தப்படி கேட்டுக் கொண்டு இறுதியில், ஐ லவ் யு என்றான்.இப்படி சொல்லியே மயக்கிறு டா...போடா...என்று ஒரு மணி நேரம் பேசிவிட்டு,அவள் பாட்டையும் ரசித்துவிட்டு துாங்க சென்றான்.

Contest EntriesWhere stories live. Discover now