போட்டி #10 - 3. என் பயணம்

42 9 4
                                    

நான் அனைவரும் பாராட்டும் அளவிற்கு படிப்பறிவு இல்லாதவள் என்றாலும், அனைவரையும் அன்பு வலயத்தால் கட்டும் ஆற்றல் கொண்டவள்.

என் எண்ணங்கள் மிகவும் வித்தியாசமானவை, எனக்கு குறுகிய கால உறவு எப்போதும் பிடிக்காது, அனைவரிடமும் நீண்ட கால நட்புடன் இருக்க ஆசைப்படுவேன்.

அதன் விளைவு , வேலைக்கு செல்லும் பேருந்தில் என்னுடன் பழகிய நண்பர்களின் தொலைப்பேசி எண்ணையும் பதிவேற்றிக்கொள்வேன்.

என் பள்ளிப் பருவத்தில் இப்போது போல தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தினால் அனைத்து நண்பர்களின் விலாசத்தையும் குறித்து வைத்தேன். காலம் எவ்வாறு சுழன்றாலும் என் பழக்கம் என்னைவிட்டு மாறவில்லை. குறுகிய கால பழக்கத்தை நான் எப்போதும் விரும்பியதில்லை.

என் அலுவலக வேலைக்காக, கேரளா செல்லவேண்டி இருந்தது, என் உடைமைகளை எடுத்துக்கொண்டு வேக வேகமாக பேருந்து நிலையம் சென்றடைந்தேன், பரபரப்பான மக்கள், பார்வை என்ற அம்பினால் பேருந்துகளை தேடும் பெறியவர்கள், தன் மாயக்கண்களை கொண்டு பேருந்து நிலைத்தில் இருந்த கடைகளையும் அங்கு இருக்கும் சாக்லேட்கலையும் நோட்டம் விடும் சிறுவர்கள்… அனைத்து காட்சிகளும் சாதாரணமானது தான் என்றாலும் என் கவனத்தை ஈர்த்தது.

நான் ஏற வேண்டிய பேருந்தை கண்டேன், வேகமாக ஏறி எனக்கென ஒரு இருக்கையை பிடித்தேன்.

மூவர் அமரும் என் இருக்கையில், ஒரு பாட்டியும், அவரின் பேரனும் அமர்ந்தார்கள்.

தென்றல் காற்று சில்லென வீச பேருந்து வேகமாக நகர்ந்தது.

எங்கள் இருக்கையின் எதிரே ஒரு சிறுவன் கிழிந்த பையோடு அமர்ந்திருந்தான்.

அழுக்கு சட்டை, சீவி வாராத தலை முடி, பார்க்கவே பாவமான முகம், இவையே அவன் அடையாளங்கள்.

அனைத்திற்கும் நாகரீகம் பார்க்கும் இக்கால  மனிதர்களின் மனநிலை அவனின் பக்கத்தில் அமரவும் யோசித்தது.

Contest EntriesWhere stories live. Discover now