போட்டி 5 # 4 - யாரிவனோ

54 15 9
                                    


 கற்றிலே அலை பாயும் என் மனம் அமைதி கொண்டது உன்னை நான் உணர்ந்த கணம்...

நீ யாரென்று தெரியாது.. எவரென்று புரியாது ஆனாலும் நான் உன்னிடம் மயங்கினேன்..
உந்தன் சதியாய் மாறினேன்...

தேன் உண்ட வண்டென என் மனம் உன்னை சுற்றி வருகிறதே.. இதை யார் அறிவார்...

அனைவரும் புதிய வருடத் தொடக்கத்தை எண்ணி குதுகலிக்க
நானோ உன் வரவை எதிர் காத்திருக்கும் நான் இன்னோர் ராதை தானோ...

உன்னை சந்தித்த நாள் முதல் நான் சிந்சிக்க மறந்தேன்... உன்னில் என்னை இழந்தேன்.... இன்று உன்னால் உயிரிறுந்தும் பொம்மையாய்... நினைவிறுந்தும் வெறுமையாய் நடை பிணமாக வாழ்கிறேன்...

உன் மீது நான் கொண்ட காதல் பிழையா ..
நீ என்னவன் என்ற எண்ணம் பிழையா ....
கனவிலும் நினைவிலும் உந்தன் நிழலில் வாழும் வரம் கேட்ட என் காதல் பிழையா??

சுவாசமென கலந்தவனே...
உன் கரம் பற்றி உன்னோட வாழ்நாள் முழுவதும் வரும் வரத்தை எனக்களிப்பாயா???

அன்புடன் பிரியசகி  

*******************

Contest EntriesWhere stories live. Discover now