போட்டி 6 # 12 - நல்ல நண்பன்

108 9 10
                                    

அம்மா சீக்கிரம் வாம்மா டைம் ஆச்சு...

இருடி... கிச்சன கிளீன் பண்ணிட்டு வந்துடறேன்.

ம்ம்... சொல்லுடி தங்கம்...

அம்மா எனக்கு தூக்கம் வர்ல  ஒரு கதை சொல்லேன்.

சரி.. குட்டிப் பாப்பாக்கு என்ன கதை வேணும்...

ராஜா ராணி கதை...!

நேத்து அதான சொன்னேன்... இன்னிக்கு அனிமல்ஸ் ஸ்டோரி சொல்லவா..?

ஓகே மா...

ம்ம்...

நம்ம வீட்டுல இருந்து ரொம்ப தூரம் தாண்டி ஒரு வயக்காடு இருந்துச்சாம்...

அதுக்கும் கொஞ்ச தூரம் தாண்டி போனா ஒரு பெரிய காடு...

அதுல அப்பாவோட ஹைட்ட விட பெரிசா நெறைய மரங்கள் இருந்துச்சாம்...

அவ்ளோ பெருசாமா...?

ஆமாடா சொல்லம்...

அந்த மரத்துல எல்லாம் சின்ன சின்ன கூடு கட்டி கிளி, குருவிங்க எல்லாம் வாழ்ந்துட்டு வந்துச்சாம்.

அந்த காட்டுல ஒரு வரிக்குதிரை குட்டியும், ஒரு நரியும், ஒரு புலியும் இவங்க மூனு பேரும் ப்ரண்ட்ஸ்ஆ இருந்தாங்க...

புலிக்கு சின்ன வயசில இருந்தே எவ்ளவோ சொல்லிக் கொடுத்தும் சரியா வேட்டையாடத் தெரியலனு அதோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் அத கேலி பண்ணதால அவங்கள விட்டு இவங்க ரெண்டு பேர் கூட சேர்ந்து இருந்துச்சாம்.

சதிகார நரி வேற திட்டத்தோட இவங்க கூட நட்பா இருந்துச்சாம். குதிரை சின்னாதாவும் கொஞ்சம் மெலிந்து போயும் இருந்ததால குதிரை நல்ல கொழு கொழுத்துப் பெரிசானதும் அதை எப்டியாவது வேட்டையாடி தின்னுடனும்னு அதுக்கு ஒரு பேராசை.

அதுக்காகவே இந்த நரி நல்ல புல்வெளி இருக்குர எடமா பாத்து அந்த குதிரரைய கூட்டிப் போய்

"பாத்தியா நண்பா... இதெல்லாம் உனக்குத் தான்... ரொம்ப சிரமப்பட்டு கண்டுபுடிச்சேன்" அப்டி இப்டினு சொல்லி அதோட வெல்விஷர் மாதிரி நடிச்சுதாம்.

ஆனா அதுக்கு ஒரு சின்ன பயம் வேற, எங்க இந்த புலி காரியத்த கெடுத்துடுமோனு, அதனால அந்த புலிய பத்தி குதிரைக்கிட்ட இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லி புலி மேல வெறுப்பு வர வச்சிடுச்சி...

இத எப்டியோ தெரிஞ்சுகிட்ட சாதுவான அந்த புலி வரிக்குதிரைகிட்ட பல தடவை எடுத்து சொல்லியும் அந்த குதிரை கேக்காம "உனக்கு எங்க மேல பொறாமை... அவன் எனக்கு நல்லா சாப்டுறதுக்கு கூட்டி போறது உனக்கு புடிக்கல"னு சொல்லி உதாசீனம் பண்ணிட்டே இருந்துது.

அப்டியே கொஞ்ச நாள் போக குதிரையும் செலிப்பா நல்ல குண்டா ஆனதும். புலி கூட இல்லாத நேரமா பாத்து அந்த நாளுக்காக காத்திருந்த நரி

"நண்பா இன்னிக்கு நீ இது வரை பாக்காத ஒரு எடத்துக்கு உன்ன கூட்டி போக போறேன்"னு சொன்னதும்

குதிரையும் தலைய ஆட்டி சந்தோசமா கூடவே போனுச்சாம்.

ரொம்ப தூரம் போனதும் எந்த புல்வெளியோ வேறெந்த விலங்குகளோ இல்லாத ஒரு பகுதிக்குக் கூட்டி போனதும் ஏற்கனவே திட்டம் போட்ட மாதிரி மறைஞ்சிருந்த நரியோட ரெண்டு ப்ரெண்ஸும் வரிக்குதிரைய சுத்தி நின்னு வேட்டையாடத் தாவி வர குண்டா இருக்கதால ஓட முடியாம பயந்து போயி கண்களை மூடிக்கிச்சாம்.

இதெல்லாம் பதுங்கியிருந்து பாத்துட்டு இருந்த புலி வேகமா பாஞ்சு வந்து சின்ன வயசுல கேட்ட வித்தையெல்லாம் யூஸ் பண்ணி சண்டை போட்டு எல்லா நரிகளையும் வெரட்டி அடிச்சிடுச்சாம்.

கண்ண தொறந்ததும் உடம்பெல்லாம் காயத்தோட ரத்த வலிய நின்ன புலி பாத்ததும் வரிக்குதிரை கண்ணீர் பொங்கி வர புலிக்கிட்ட மன்னிப்பு கேட்டுச்சாம்.

வாவ்.... சூப்பர்மா... ரொம்ப நல்லா இருந்துச்சு ஸ்டோரி...

இருடி அவசர படாத...

கதை மட்டும் கேட்டா போதுமா...

அந்த கதைல வந்த நரி மாதிரி இல்லாம "நம்மலோட நண்பர்களை நாம எப்பவும் சரியா சூஸ் பண்ணனும்"

புலி மாதிரி ஆபத்துல உதவுறவங்க தான் உண்மையான நண்பர்கள். என்னடா குட்டி புரிஞ்சுதா...

ம்ம்... புரிஞ்சுதுமா...

Contest EntriesWhere stories live. Discover now