ரகசிய காதலன் - 38

256 23 4
                                    

ஆதன் மார்பில் படுத்திருந்த ராகவி "ஆதன் உங்களுக்கு என் மேல கோவம் இல்லையே" என்று கேட்டாள். "உன் மேல நா ஏன்ம்மா கோவப்பட போறன் .. நா கோவப்பட்ற அளவுக்கு நீ என்ன தப்பு பன்னிட்ட" என்று ஆதன் கேட்டான்.

"நா பன்றது எல்லாமே தப்பா தான் இருக்கு நீங்க தான எல்லாத்தையுமே சமாளிக்றிங்க" என்று ராகவி கூற "ஏன்னா நீயும் என் லைப்ல ரொம்ப முக்கியம்" என்று ஆதன் கூறினான். "இதெல்லாம் தப்பு அப்பா கிட்ட உண்மைய சொல்லிடலான்னு உகளுக்கு தோனலையா ஆதன்" என்று ராகவி மீண்டும் கேட்டாள்.

"தோனுச்சி ஆனா உண்மைய சொன்ன அப்பறம் அப்பாவோட நிலமைய யோசிச்சி பாத்தன் உன் முடிவு தான் சரின்னு தோனுச்சி" என்று ஆதன் கூறினான். "ம்ம்ம் மாமா ரொம்ப உடஞ்சி போய்டுவாரு இல்லை" என்று ராகவி கேட்க "ம்ம்ம் ... ஏற்கனவே என் விஷயத்துல அவர் மன கசப்புனால ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய்ட்டு வந்துட்டாரு ... மறுபடியும் இந்த விஷயம் தெரிஞ்சி அவர்க்கு எதாவது ஆகிடுமோன்னு பயமும் ஆகிடுச்சி ... அதோட நீ ப்ரக்னென்ட்ன்னு சொன்னதும் அப்பா நா பன்ன எல்லா தப்பையும் மன்னிச்சி உன்னை ஏத்துகிட்டு உன் கிட்ட பாசமா பேசி அக்கரை காட்னாரு இல்லை அந்த சந்தோஷமும் அவர் கிட்ட இல்லைன்னு சொல்ல எனக்கு தைரியம் வரல அதனால தான் நா உன் முடிவுக்கு ஓகே சொன்னன்" என்று ஆதன் கூறினான்.

"எனக்கு ஒரு டௌட் ஆதன்" என்று கேட்டவாறு ராகவி எழுந்தமர்ந்து ஆதனின் முகத்தை பார்த்து கேட்டாள். "என்ன" என்று ஆதனும் எழுந்து சம்மணமிட்டு அமர்ந்தான். "ஒருவேளை எல்லாரும் நம்மள பாக்க அங்க கிளம்பி வந்துட்டா என்ன பன்றது ... அம்மா அப்பா மாமாவ விடுங்க இந்த இளாவையும் ஜெகனையும் நம்ப முடியாது இல்லை" என்று ராகவி கேட்டாள்.

"இதுவரைக்கும் வெற்றகரமா முடிச்ச சாதனைய நினைச்சி பெருமைபட்டுட்டு இருக்கும் போது ஏன் டி அத கெடுக்கற மாதிரி இப்படி ஒரு கேள்விய கேக்கற" என்று ஆதன் சலிப்புடன் கேட்டான். "ம்ச் தோனுச்சி கேட்டன் இதுக்கு ஏன் இப்படி சலிச்சிக்றிங்க எல்லாத்துக்கும் தயாரா இருக்கனுமேன்னு கேட்டன்" என்று கூறினாள்.

ரகசிய காதலன்Where stories live. Discover now