ரகசிய காதலன் - 32

303 23 4
                                    

ஆதன் ராகவிக்கு இத்தோடு நாற்பதாவது முறையாக கைப்பேசியில் அழைத்து விட்டான். ஆனால் ராகவி அழைப்பை ஏற்க்கவே இல்லை. ஆதனுடன் பணிபுரியும் நண்பன் ஒருவன் ஆதனின் புது அவதாரமான பதட்டத்தையும் அவசரத்தையும் கண்டு குழம்பி "எதாவது பிரச்சனையா ஆதன்" என்று கேட்டான்.

"பிரச்சனை எல்லாம் எதும் இல்லை என் ஒய்ப்க்கு கால் பன்றன் எடுக்க மாட்டின்றா" என்று ஆதன் பதில் கூற அவனோ "எதாவது வேலையா இருப்பாங்க ஆதன் அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற அவங்களே உன் கால் பாத்ததும் திரும்ப கூப்டுவாங்க" என்று கூறினான்.

"இல்லை எப்பவும் நா கூப்ட்டு எடுக்காம இருந்ததில்லை அதான்" என்று ஆதன் பேச்சுக்கு இடையிலே நான்கு முறை அழைத்து விட்டான். அவனோ சிரித்து விட்டு வேலையை கவனிக்க தொடங்கினான்.

ராகவி வீட்டிற்கு வந்து கைப்பேசியை எடுத்து பார்த்தவள் அதிர்ந்தாள். ஆதனின் அழைப்பு சத்தமில்லாமல் முகப்பில் அவனின் சிரித்த புகைப்படத்துடன் அடித்துக் கொண்டிருந்தது. அவசரமாக அழைப்பை ஏற்ற ராகவியை பேசவே விடாமல் ஆதன் "கவி ... கவி எங்க இருக்க ... என்ன பன்ற ... எத்தனை முறை போன் பன்றது ... ஏன் எடுக்கல ... எங்கையாவது வெளில போனியா ... சொல்லிட்டு போய் இருக்கலாம் இல்லை ... இல்லை நா கால் பன்னும் போதாவது அட்டன் பன்னி சொல்லலாம் இல்லை ... வீட்ல இருக்கியா இல்லையா" என்று கேள்விகளாக அடுக்கிக் கொண்டிருந்தான்.

ராகவி அவனின் பதட்ட வார்த்தைகள்  அடங்கும் வரை அமைதியாக அவன் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள். அழைப்பை ஏற்றப்பின் தாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த ஆதன் "ஹலோ கவி லைன்ல இருக்கியா" என்று கேட்டபின் தான் ராகவி "இருக்கன்" என்று பதில் கூறினாள்.

"இவ்வளவு நேரம் மூச்சு விடாம கேட்டுட்டு இருக்கன் நீ சாதாரணமா இருக்கன்னு சொல்ர ... நா எவ்வளவு பயந்துட்டு இருந்தன் தெரியுமா" என்று ஆதன் கேட்டான். "அதான் நீங்க பேசன பேச்சிலே தெரிஞ்சதே ... எதுக்கு அவ்வளவு பயம் உங்களுக்கு ... நா இளா கூட வெளில போய் இருந்தன் ... மொபைல் சைலண்ட்ல இருந்திருக்கு நா பாக்கல ... நா கால் அட்டன் பன்னலன்னா பயந்துருவிகளா ... என்ன ஆதன் நீங்க சின்ன குழந்தை மாதிரி பன்றிங்க" என்று ராகவி கேட்டாள்.

ரகசிய காதலன்Where stories live. Discover now